மேப்ஸ் சிக்கல் குறித்துப் புகாரளித்தல் & தனியுரிமை

உங்கள் வீடு, பணியிடம் மற்றும் பள்ளிக் கணக்குகள் தொடர்பான புகார்கள் மற்றும் மேப்ஸ் செயலியில் உள்ள புகைப்படங்கள், சுற்றிப் பார்த்தல் தொடர்பான புகார்கள் உங்கள் Apple கணக்கு அல்லது மின்னஞ்சல் முகவரியுடன் இணைக்கப்படும், உங்கள் புகாரைச் சமர்ப்பிப்பதற்கு முன்பாக இது திரையில் காட்டப்படும். புகாரளிக்கப்பட்ட சிக்கலைத் தீர்ப்பதற்கும் மேப்ஸ் செயலியை மேம்படுத்துவதற்கும் உங்கள் தரவு பயன்படுத்தப்படும்.
 

Apple மேப்ஸ் உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Privacy Icon

  • புகாரளிக்கப்பட்ட சிக்கல்களைத் தீர்க்க உதவியாக மட்டுமே “மேப்ஸ் சிக்கல் குறித்து புகாரளித்தல்” அம்சம் தகவல்களைச் சேகரிக்கும். உங்கள் வீடு, பணி மற்றும் பள்ளி தொடர்பான சில அறிக்கைகளுக்காகச் சேகரிக்கப்பட்ட தகவல்கள், மங்கலான சுற்றிப் பார்த்தல் படங்கள் மற்றும் மேப்ஸில் உள்ள புகைப்படங்கள் ஆகியவை உங்கள் Apple கணக்குடன் தொடர்புபடுத்தப்பட்டுச் சேமிக்கப்படும். இந்தப் புகார்களை நீங்கள் சமர்ப்பிக்கும் முன்பு, சமர்ப்பித்தல் செயல்முறையின்போது திரையில் உங்கள் Apple கணக்கு காட்டப்படும். பிற அனைத்துப் புகார்களுமே ஒரு மாறக்கூடிய அடையாளத் தகவலுடன் தொடர்புபடுத்தப்படும். அவை Apple கணக்குடன் இணைக்கப்பட்டிருக்காது.
  • Apple மேப்ஸ் இணையதளம் வழியாக நீங்கள் புகாரைச் சமர்ப்பித்தால், சேவையின் நம்பகத்தன்மையைப் பராமரிக்க புகாருடன் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் Apple சேகரிக்கக்கூடும்.
  • சிக்கலை இன்னும் திறம்பட தீர்க்க உதவ, உங்கள் அறிக்கையுடன் கூடுதல் தகவல்களை நீங்கள் சமர்ப்பிக்கலாம்.
  • புகார் நிலவரங்களைச் சிறப்பாகப் புரிந்துகொள்ள, உங்கள் Apple கணக்கு அல்லது மின்னஞ்சல் முகவரியுடன் இணைக்கப்பட்ட இந்தத் தகவல்களை இரண்டு ஆண்டுகள் வரையும், சில குறிப்பிட்ட புகார்களைப் பொறுத்தவரை ஐந்து ஆண்டுகள் வரையும் Apple சேமிக்கக்கூடும்.

ஒரு சிக்கல் குறித்து நீங்கள் புகாரளிக்கும்போது, உங்கள் புகாரை அணுகவும் மேப்ஸை மேம்படுத்தவும் தேவைப்படும் குறைந்தபட்ச அளவு தனிப்பட்ட தரவைச் சேகரிக்கும் வகையில் மேப்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பின்வரும் தகவல்களை Apple சேகரிக்கக்கூடும்:

  • நீங்கள் புகாரளிக்கும் நேரத்தில் மேப்ஸின் செயல்திறனையும் அதன் நிலையையும் குறித்து சிறப்பாகப் புரிந்துகொள்வதற்கு, சாதனத்தின் மாடல், ஆபரேட்டிங் சிஸ்டத்தின் பதிப்பு, வட்டாரம் மற்றும் மொழி, நேரம் மற்றும் நேரமண்டலம், மேப்ஸ் அமைப்புகள், Apple Watch அல்லது CarPlay உடன் இணைக்கப்பட்டுள்ளீர்களா என்பது குறித்த விவரம் போன்றவை
  • நீங்கள் புகாரளித்தபோதான சூழலைச் சிறப்பாகப் புரிந்துகொள்ள, சிக்கலைப் பதிவுசெய்யும் முன் மேப்ஸில் என்ன பார்த்தீர்கள் என்பதைக் காட்டும் படம், ஜூம் அளவு மற்றும் தேடுவதற்குக் கடைசியாகப் பயன்படுத்திய வார்த்தை. உங்கள் வீட்டின் இருப்பிடத்தைக் காட்டும் ஐகான் போன்று உங்களை அடையாளப்படுத்தக்கூடிய தகவல் எதுவும் இந்தப் படத்தில் சேர்க்கப்படாது
  • உங்கள் இருப்பிடம்
  • புகாரில் நீங்கள் வழங்கியுள்ள தகவல்கள். பரிந்துரைக்கப்பட்ட புதிய முகவரிகள், URLகள், கருத்துகள், திறந்திருக்கும் நேரங்கள், பதிவேற்றப்பட்ட புகைப்படங்கள் போன்றவை இதில் அடங்கும்

சிலநேரங்களில், பின்வரும் தகவல்களையும் Apple சேகரிக்கலாம்:

  • உங்கள் Apple கணக்கு (உங்கள் மின்னஞ்சல் முகவரி உட்பட). உங்கள் வீடு, பணியிடம் அல்லது பள்ளியின் இருப்பிடம் தொடர்பான சிக்கல் குறித்து நீங்கள் புகாரளிக்கும்போது, “சுற்றிப் பார்த்தல்” அம்சத்தின் படங்களை பிளர்செய்ய கோரிக்கை விடுக்கும்போது, மேப்ஸ் செயலியில் ஒரு புகைப்படத்தின் பதிப்புரிமை தொடர்பாகப் புகாரளிக்கும்போது இதைச் சேகரிக்கும். Apple மேப்ஸ் இணையதளம் வழியாக “சுற்றிப் பார்த்தல்” அம்சத்தின் படங்களை பிளர்செய்ய கோரிக்கை விடுக்கும்போது, சேவையின் நம்பகத்தன்மையைப் பராமரிக்க Apple உங்கள் மின்னஞ்சல் முகவரியைச் சேகரிக்கும். இந்தப் புகார்களை நீங்கள் சமர்ப்பிக்கும் முன்பு, சமர்ப்பித்தல் செயல்முறையின்போது திரையில் உங்கள் Apple கணக்கு அல்லது மின்னஞ்சல் முகவரி காட்டப்படும். கூடுதலாக, உங்கள் Apple கணக்கு அல்லது மின்னஞ்சல் முகவரியுடன் பதிவுசெய்யப்பட்ட புகார்களைப் பொறுத்தவரை, சிக்கல் குறித்த விவரத்தையோ சிக்கல் சரிசெய்யப்பட்ட தகவலையோ தெரிவிக்க மின்னஞ்சல் முகவரி மூலம் Apple உங்களைத் தொடர்புகொள்ளலாம். பிற புகார்கள் அனைத்துமே அவ்வப்போது மாறக்கூடிய ஓர் அடையாளத் தகவலுடன் தொடர்புபடுத்தப்படும், அவை உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்டிருக்காது
  • வீடு, பணியிடம் அல்லது பள்ளியின் இடத்தை மாற்றுவதற்காக உங்கள் வீடு, பணியிடம் அல்லது பள்ளியின் முகவரி
  • படங்கள் தொடர்பான சிக்கல்களுக்கு, “சுற்றிப் பார்த்தல்” அம்சத்தில் உங்கள் பார்வையின் திசையும் கோணமும்
  • வழிச்செலுத்துதல் சிக்கல்களுக்கு, உங்கள் பயணத்தின் தொடக்க மற்றும் முடிவு புள்ளிகள் உட்பட உங்கள் பாதை
  • தேடல் தொடர்பான சிக்கல்களைப் பொறுத்தவரை, அந்தத் தேடல் முடிவுகளை வழங்க பயன்படுத்தப்பட்ட தேடல் வார்த்தைகள் உட்பட மிகவும் சமீபத்தில் நீங்கள் தேடியவற்றின் முடிவுகள்
  • ஏதேனும் கருத்துகள், புகைப்படங்கள் உட்பட உங்கள் புகாருடன் சேர்த்து சமர்ப்பிக்கத் தேர்வுசெய்துள்ள பிற தகவல்கள்

உங்கள் சிக்கல் மூன்றாம் தரப்பு தொடர்புடையதாக இருந்தால், நீங்கள் கண்டறிந்த சிக்கலைத் தீர்க்க உதவுவதற்காக நீங்கள் அளித்த புகாரில் உள்ள தகவலை மூன்றாம் தரப்புக்கு Apple வழங்கலாம். ஒரு சிக்கலைத் தீர்க்க வேண்டிய தேவை ஏற்படும்போது மட்டுமே அதுபோன்ற மூன்றாம் தரப்புடன் Apple தகவலைப் பகிரும். அதற்கு முன் உங்களை அடையாளம்காணும் வகையில் உள்ள தகவல் ஏதேனும் இருந்தால் முதலில் அதை நீக்கமுடியுமா எனப் பார்க்கும்.

தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய அடிப்படைச் சட்டங்கள்

பொதுவாகவே சேவைகளை வழங்கத் தேவைப்படும் அளவிற்கும், எங்கள் சட்டரீதியான கடமைகளுக்கு இணங்குவதற்காகவும் “மேப்ஸ் சிக்கல் குறித்துப் புகாரளித்தல்” அம்சத்திற்கான உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குகிறோம். ஒப்புதல் என்பது சட்டரீதியான அடிப்படையாக அமையும் இடங்களில், பொருந்தும் உள்ளூர் சட்டங்களின் அடிப்படையில் அதைப் பெற முயல்கிறோம். பொருந்தும் உள்ளூர் சட்டங்கள் குறிப்பிடும் இடங்களில், நியாயமான நலன்களின் நோக்கத்திற்காகப் பதிப்புரிமைச் சிக்கல்கள் தொடர்பான அறிக்கைகளை நாங்கள் செயலாக்குவோம். எனவே நாங்கள் சட்ட உரிமைகோரல்களைப் பாதுகாக்கவும், நிறுவவும் மற்றும் செயல்படுத்தவும் முடியும்.

தக்கவைத்தல்

Apple சேகரித்த தரவானது நம்பகமான சேவை வழங்குநர்களால் செயலாக்கப்பட்டுச் சேமிக்கப்படலாம். நீங்கள் புகாரளித்த தகவல்கள் இரண்டு ஆண்டுகள் வரை உங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு, சில பதிப்புரிமை தொடர்பான அறிக்கைகள் ஐந்தாண்டுகள் வரையிலும் அல்லது சட்டத்தின் தேவைக்கேற்ப, சேவையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும், அறிக்கையிடல் நிலவரங்களைப் புரிந்துகொள்ளவும், பொருந்தும் சட்டத்திற்கு இணங்கும் வகையிலும் சேமிக்கப்படும்.

Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.

2025-12-12