Apple Messages for Business & தனியுரிமை
Apple Messages for Business உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
![]()
- மெசேஜ்களை உங்கள் சாதனத்துக்கும் Appleஇன் சர்வர்களுக்கு இடையிலும் வணிகத்திற்கு Apple பரிமாற்றம் செய்யும்போதும் Apple Messages for Business என்கிரிப்ட் செய்யப்படுகின்றன.
- பிற வணிகங்கள் உடனான உங்கள் மெசேஜ்களில் உள்ள உள்ளடக்கத்தை Apple படிக்காது.
- தனியுரிமையைப் பாதுகாக்கும் வழிமுறையைப் பயன்படுத்தி Appleஇன் சர்வர்களிடம் உறுதிசெய்வதன் மூலம் எந்தெந்த ஃபோன் எண்களில் Apple Messages for Business சேவையைப் பயன்படுத்த முடியும் என்பதை உங்கள் சாதனம் பரிந்துரைக்கும்.
வணிகங்கள் உடனான வணிகத் தொடர்புகளுக்காக Apple Messages for Business அம்சத்தை நீங்கள் பயன்படுத்தலாம், இதில் Apple Payஐப் பயன்படுத்தி பேமெண்ட் செய்வதும் அடங்கும். iMessages மற்றும் சாதாரண SMSஇல் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக இந்த மெசேஜ்கள் பழுப்பு நிறப் பின்னணியுடன் இருக்கும். மெசேஜ்களை உங்கள் சாதனத்துக்கும் Appleஇன் சர்வர்களுக்கு இடையிலும், வணிகத்திற்கு Apple பரிமாற்றம் செய்யும்போதும் Apple Messages for Business என்கிரிப்ட் செய்யப்படுகின்றன. பிற வணிகங்கள் உடனான உங்கள் Apple Messages for Business உரையாடல்களில் உள்ள உள்ளடக்கத்தை Apple படிக்காது.
Apple உங்களுடன் ஒரு Apple Messages for Business உரையாடலைத் தொடங்குவதற்கு உங்கள் சாதனம் தகுதிபெறுகிறதா என்பதை Apple சரிபார்க்கலாம். Apple உடன் நீங்கள் உரையாடும்போது, உங்கள் Apple கணக்கு அல்லது ஃபோன் எண் உடன் இணைக்கப்பட்ட அடையாளத் தகவலை Apple பெறும். Apple உடனான உங்கள் தகவல் தொடர்புகளுக்கு உதவுவதற்காக இந்தத் தகவல்களும் உங்கள் உரையாடலும் பயன்படுத்தப்படலாம்.
வேறொரு வணிகத்துடன் நீங்கள் ஓர் உரையாடலைத் தொடங்கும்போது, அதற்கென ஓர் அமர்வு அடையாளத் தகவல் வழங்கப்படும். வரம்பிடப்பட்ட கூடுதல் தகவல்களைப் பிற வணிகங்களும் பெறக்கூடும். எடுத்துக்காட்டாக, மேப்ஸில் ஒரு வங்கியைத் தேடி அதனுடன் Apple Messages for Business உரையாடலைத் தொடங்கினால், நீங்கள் எந்தக் கிளையைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்பது அந்த வணிகத்திற்குத் தெரிவிக்கப்படலாம். இந்தத் தகவலையும் வணிகத்திற்கு நீங்கள் வழங்கும் பிற தகவல்களையும் அந்த வணிகம் தக்கவைப்பது அந்த வணிகத்தின் தனியுரிமைக் கொள்கைகளின்படி நிர்வகிக்கப்படும். நீங்கள் உரையாடும் வணிகங்கள் இந்தத் தகவல்களை எப்படிப் பயன்படுத்துகின்றன மற்றும் பகிர்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள அவர்களின் விதிமுறைகள், தனியுரிமைக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்துகொள்ள நாங்கள் உங்களை வலியுறுத்துகிறோம்.
உங்கள் ஃபோன் எண்ணையும் அங்கீகாரத்தையும் வணிகத்திடம் நேரடியாக வழங்கி வணிக அறிவிப்புகளைப் பெற நீங்கள் சந்தா சேரலாம். உங்கள் வாங்குதல் குறித்த விவரங்கள் போன்ற அறிவிப்புகளை வணிகம் உங்களுக்கு மெசேஜ் மூலம் அனுப்ப வணிக அறிவிப்புகள் உதவுகின்றன. வணிக அறிவிப்பிற்கு நீங்கள் பதிலளித்தால், வாடிக்கையாளர் சேவை அனுபவத்தை மேம்படுத்துவதற்காக உங்கள் Apple Messages for Business உரையாடலின் அமர்வு அடையாளத் தகவலை வணிகத்துக்கு Apple வழங்கும். வணிக அறிவிப்புகளைப் பெற விரும்பாவிட்டால், அமைப்புகள் > செயலிகள் > மெசேஜஸ் > வணிக மெசேஜ்கள் > வணிக அறிவிப்புகள் என்பதற்குச் சென்று அவற்றை நீங்கள் முடக்கலாம்.
எந்தெந்த ஃபோன் எண்களில் Apple Messages for Business சேவையைப் பயன்படுத்த முடியும் என்பதை உங்கள் சாதனம் பரிந்துரைக்கும். ஒரு ஃபோன் எண் தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்த எண் Apple Messages for Business சேவையை ஆதரிக்கிறதா என்பதைத் தனியுரிமையைப் பாதுகாக்கும் வழிமுறையைப் பயன்படுத்தி Apple சர்வர்களிடம் உங்கள் சாதனம் கேட்கும். Apple சர்வர்களிடம் ஃபோன் எண்களின் தொகுப்பை அனுப்பி அவை பற்றிய தகவலை உங்கள் சாதனம் கேட்கும், அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபோன் எண் இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். அந்த எண்கள் Apple Messages for Business சேவையை ஆதரிக்குமா என்பதைத் தீர்மானிக்க Apple சர்வர்கள் வழங்கும் தகவல்களை உங்கள் சாதனம் பயன்படுத்தும்.
தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய சட்டரீதியான அடிப்படை
நீங்கள் Apple Messages for Business சேவையைப் பயன்படுத்தினால் சேவைகளை வழங்கத் தேவைப்படும் அளவிற்கும், எங்கள் சட்டரீதியான கடமைகளுக்கு இணங்குவதற்காகவும் உங்கள் தனிப்பட்ட தரவுகளை நாங்கள் செயலாக்குகிறோம். ஒப்புதல் என்பது சட்டரீதியான அடிப்படையாக அமையும் இடங்களில், பொருந்தும் உள்ளூர் சட்டங்களின் அடிப்படையில் அதைப் பெற முயல்கிறோம்.
பொருந்தும் உள்ளூர் சட்டங்கள் குறிப்பிடும் இடங்களில், தனிப்பட்ட தரவின் பின்வரும் வகைகளை எங்களின் அல்லது மூன்றாம் தரப்புகளின் நியாயமான நலன்களின் நோக்கத்திற்காகத் தேவைப்படும் அளவிற்குச் செயலாக்குகிறோம், இதில் பின்வருவன பற்றிய தகவல்கள் அடங்கும்:
- Apple Messages for Business சேவையை நீங்கள் செயல்படுத்தியுள்ளீர்களா மற்றும் தற்போது உங்கள் சாதனத்தால் மெசேஜ்களைப் பெற முடியுமா என்ற விவரம்
- நேரஅளவு, அனுப்பப்பட்ட மெசேஜ்களின் எண்ணிக்கை போன்ற உங்கள் அமர்வுகள் குறித்த தகவல்கள்
- Apple உடனான உங்கள் உரையாடல்கள்
நியாயமான நலன்கள் என்பதில் இவையும் அடங்கும்:
- சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்தல், மோசடி அல்லது குற்றச் செயல்பாட்டைத் தடுத்தல் அல்லது Apple மேப்ஸ், Spotlight போன்ற தொடர்புடைய தயாரிப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்துதல்
- Apple Messages for Business கட்டமைப்பைப் பராமரிக்க உதவுதல் மற்றும் உங்களுக்காகவும் பிறருக்காகவும் சேவையை மேம்படுத்தி உகந்ததாக்குதல்
சேவையை வழங்குவதற்காக Apple Card தொடர்பான உங்கள் விசாரணை Goldman Sachsக்கு அனுப்பப்பட வேண்டும் எனில், Apple உங்களைப் பற்றிய தகவல்களையும் உங்கள் விசாரணையையும் Goldman Sachs உடன் பகிரும், இதன் மூலம் அவர்கள் இன்னும் சிறப்பாக உங்களுக்கு உதவக்கூடும். Goldman Sachs உதவுவதற்காக வாரத்தின் 7 நாட்களும் 24 மணிநேரமும் தயாராக உள்ளது. Goldman Sachs நிறுவனத்தை 877-255-5923 என்ற ஃபோன் எண்ணில் அல்லது பின்வரும் அஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்: Goldman Sachs Bank USA, Lockbox 6112, P.O. Box 7247, Philadelphia, PA 19170-6112.
தக்கவைத்தல்
Appleஇன் தனியுரிமைக் கொள்கை அல்லது எங்கள் சேவை தொடர்பான தனியுரிமை அறிக்கையில் விவரிக்கப்பட்டபடி சேகரிக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றத் தேவைப்படும் காலம் வரை அல்லது சட்டப்படி தேவைப்படும் காலம் வரை மட்டுமே Apple தனிப்பட்ட தரவைத் தக்கவைக்கும். தக்கவைத்தல் காலத்தை மதிப்பிடும்போது, சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவைத் தக்கவைப்பது தேவையா என்று முதலில் கவனமாக ஆராய்கிறோம். தக்கவைத்தல் தேவை எனில், முடிந்த வரை சட்டப்படி அனுமதிக்கப்பட்ட குறுகிய காலத்திற்கு மட்டுமே தனிப்பட்ட தரவைத் தக்கவைக்க முயல்கிறோம்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2026-02-11