மெசேஜஸ் & தனியுரிமை
மெசேஜஸ் செயலி உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
![]()
- நீங்கள் iCloud பேக்-அப் அல்லது “iCloudஇல் மெசேஜ்கள்” என்பதைச் செயல்படுத்தினால் மெசேஜ்கள் iCloudஇல் பேக்-அப் செய்யப்பட்டு என்கிரிப்ட் செய்யப்படும்.
- iMessage முழுமையாக என்கிரிப்ட் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் தொடர்புகொள்ளும் நபர்களுக்கு நீங்கள் பயன்படுத்தும் ஃபோன் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி காட்டப்படும். விரும்பினால், உங்கள் பெயரையும் புகைப்படத்தையும் கூட நீங்கள் பகிரலாம்.
- iMessage பயன்பாடு குறித்த வரம்பிடப்பட்ட தகவல்களை 30 நாட்கள் வரை Apple தக்கவைக்கும். iMessage பயன்படுத்த உங்கள் சாதனம் தகுதிபெறுகிறதா போன்ற தகவலும் இதில் அடங்கும்.
மெசேஜஸ் என்பது SMS, MMS, RCS, iMessage மற்றும் Apple Messages for Business மூலம் பயனர்கள் பிறரைத் தொடர்புகொள்ள பயன்படுத்தும் ஒரு செயலி ஆகும். iMessage என்பது மெசேஜஸ் செயலி மூலம் உங்கள் iPhone, iPad, Mac, Apple Vision Pro அல்லது Apple Watch சாதனங்களில் iMessagesகளை அனுப்பவும் பெறவும் பயன்படும் ஒரு Apple மெசேஜிங் சேவை ஆகும். iMessage மூலம் அனுப்பப்படும் மெசேஜ்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற தகவல்களையும் சேர்க்கலாம். அவை உங்கள் நெட்வொர்க் வழங்குநரின் மெசேஜிங் திட்டத்தில் கணக்கிடப்படாது.
முழுமையான என்கிரிப்ஷனைப் பயன்படுத்தும் வகையில் iMessageஐ நாங்கள் வடிவமைத்துள்ளோம், எனவே சாதனங்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தின்போது உங்கள் உரையாடல்களின் உள்ளடக்கத்தை Apple டீகிரிப்ட் செய்து பார்ப்பதற்கு எந்த வழியும் இல்லை. iMessage மூலம் நீங்கள் அனுப்பும் இணைப்புகள் (புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை) என்கிரிப்ட் செய்யப்படுவதால் அனுப்புநர் மற்றும் பெறுநரை (பெறுநர்களை) தவிர வேறு யாராலும் அவற்றை அணுக முடியாது. இந்த என்கிரிப்ட் செய்யப்பட்ட இணைப்புகள் Appleக்குப் பதிவேற்றம் செய்யப்படலாம். செயல்திறனை மேம்படுத்த, நீங்கள் ஒரு iMessageஐ எழுதும்போதே அதிலுள்ள இணைப்புகளை உங்கள் சாதனம் தானாகவே Appleக்குப் பதிவேற்றக்கூடும். உங்கள் மெசேஜ் சென்று சேரவில்லையெனில், 30 நாட்கள் கழித்து சர்வரில் இருந்து இணைப்புகள் நீக்கப்படும். உங்கள் iOS, iPadOS, visionOS அல்லது watchOS சாதனத்திற்குப் பாஸ்கோடு அல்லது பாஸ்வேர்டு அமைக்கப்பட்டால், உங்கள் சாதனத்தில் இருப்பதால் சேமிக்கப்பட்டுள்ள மெசேஜ்கள் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும். சாதனத்தை அன்லாக் செய்யாமல் அவற்றைத் திறக்க முடியாது.
மொபைல் நெட்வொர்க்கையோ இணைய இணைப்பையோ பயன்படுத்த முடியவில்லை எனில், தகுதிபெறும் iPhone உங்களை சாட்டிலைட் மூலம் மெசேஜ்களை அனுப்பவும் பெறவும் தொடங்கும்படி உங்களிடம் கேட்கும். சாட்டிலைட் மூலம் நீங்கள் iMessage மற்றும் SMS மெசேஜ்களை அனுப்புவதையும் பெறுவதையும் இது செயல்படுத்தும். நீங்கள் சாட்டிலைட் மூலம் மெசேஜ் அனுப்பவும் பெறவும் தொடங்கிய பிறகு, உங்களுக்கு iMessage அனுப்ப முயலும் நண்பர்களும் குடும்பத்தினரும் நீங்கள் சாட்டிலைட் மூலம் மெசேஜ் செய்வதைத் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறாக, சாட்டிலைட் மூலமாக உட்பட, SMS அனுப்புதல் மற்றும் பெறுதல் சேவை உங்கள் நெட்வொர்க் வழங்குநரால் வழங்கப்படுகிறதே தவிர அதை Apple வழங்குவது இல்லை.
iMessages உங்கள் சாதனத்தில் இருந்து 30 நாட்கள் அல்லது ஓராண்டுக்குப் பிறகு தானாகவே நீக்கப்படும் வகையிலோ சாதனத்திலேயே எப்போதும் இருக்கும் வகையிலோ நீங்கள் தேர்வுசெய்யலாம். உங்கள் வசதிக்காக, நீங்கள் iCloud பேக்-அப் அல்லது “iCloudஇல் மெசேஜ்கள்” என்பதைச் செயல்படுத்தியிருந்தால் SMS, MMS, RCS, RCS வணிக மெசேஜ்கள், Apple Messages for Business மற்றும் iMessages ஆகியவை iCloudஇல் பேக்-அப் செய்யப்பட்டு என்கிரிப்ட் செய்யப்படும். iCloud பேக்-அப் மற்றும் “iCloudஇல் மெசேஜ்கள்” ஆகியவற்றை எப்போது வேண்டுமானாலும் ஆஃப் செய்யலாம். உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில் இதைச் செய்ய, அமைப்புகள் > [உங்கள் பெயர்] > iCloud என்பதற்குச் செல்லுங்கள். Mac சாதனத்தில், மெசேஜஸ் > அமைப்புகள் > iMessage என்பதற்குச் சென்று, “iCloudஇல் மெசேஜஸைச் செயல்படுத்து” என்பதைத் தேர்வுநீக்குங்கள்.
உங்கள் Apple கணக்கு அல்லது ஃபோன் எண் மூலம் iMessageஇல் உள்நுழையலாம். உங்கள் சாதனத்தில் Apple கணக்கு மூலம் நீங்கள் உள்நுழைந்தால், iMessageஇல் தானாகவே உள்நுழைவீர்கள். நீங்கள் தொடர்புகொள்ளும் நபர்களுக்கு உங்கள் Apple கணக்கு அல்லது ஃபோன் எண்கள் காட்டப்படும், உங்கள் Apple கணக்கு மற்றும் கணக்கில் உள்ள மின்னஞ்சல் முகவரிகள் அல்லது ஃபோன் எண்களைப் பயன்படுத்தி அவர்கள் உங்களைத் தொடர்புகொள்ள முடியும். எந்தெந்த ஃபோன் எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிகளில் இருந்து புதிய உரையாடல்களைத் தொடங்க விரும்புகிறீர்கள், எந்தெந்த ஃபோன் எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிகளிடம் இருந்து மெசேஜ்களையும் பதில்களையும் பெற விரும்புகிறீர்கள் என்பதை iMessage அமைப்புகளில் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். account.apple.com இணையதளத்தில் உள்ள உங்கள் Apple கணக்குப் பக்கத்தில் கூடுதல் தொடர்பு விவரங்களைச் சேர்க்கலாம் மற்றும் சரிபார்க்கலாம். iMessage குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தொடர்புகொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் இது வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ தேவையற்ற மெசேஜ்களைப் பரப்புவதற்கோ பயன்படுத்தக்கூடியது அல்ல. iMessageஐத் தவறாகப் பயன்படுத்தினால் உங்களுக்கான அணுகல் வரம்பிடப்படலாம்.
மெசேஜஸ் உரையாடல்களில் பகிரப்பட்ட கட்டுரைகள், இசை, டிவி நிகழ்ச்சிகள், புகைப்படங்கள் மற்றும் பலவற்றைக் கண்டறிய உங்களுடன் பகிர்ந்தவை சிஸ்டம் முழுவதும் செயல்படுகின்றன. மேலும் ஃபோட்டோஸ், Safari, News, இசை, பாட்காஸ்ட்கள் போன்ற செயலிகளில் இவற்றை எளிதாக அணுகலாம். இது சூழலில் தகவல்களை விரைவாக அணுக அனுமதிக்கிறது. குறியிடப்பட்ட உள்ளடக்கத்தை உங்கள் அனுமதியின்றி Apple அணுக முடியாது. iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில் அமைப்புகள் > செயலிகள் > மெசேஜஸ் என்பதற்குச் சென்று “உங்களுடன் பகிர்ந்தவை” அம்சத்தைத் தட்டி எப்போது வேண்டுமானாலும் நீங்கள் முடக்கலாம். Mac சாதனத்தில், மெசேஜஸ் > அமைப்புகள் > “உங்களுடன் பகிர்ந்தவை” என்பதற்குச் செல்லுங்கள். உங்களுடன் பகிர்ந்தவை பிரிவில் ஒவ்வொரு செயலியையும் தட்டுவதன் அல்லது தேர்ந்தெடுப்பதன் மூலம் அவை “உங்களுடன் பகிர்ந்தவை” அம்சத்தில் பங்கேற்கலாமா வேண்டாமா என்பதையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம்.
மெசேஜ்களை ஒழுங்கமைக்க மெசேஜ் ஃபில்டரிங்கை நீங்கள் பயன்படுத்தலாம். “தெரியாத அனுப்புநர்களை ஸ்கிரீனிங் செய்தல்” அம்சம் உங்கள் தொடர்புப் பட்டியலில் இல்லாத அனுப்புநர்களிடம் இருந்து வரும் மெசேஜ்களைத் தனிப் பட்டியலாக வகைப்படுத்துகிறது, மேலும் இந்த மெசேஜ்களைத் துணைவகைகளாகவும் ஒழுங்கமைக்கலாம்.
கூடுதலாக, “ஸ்பேமை ஃபில்டர் செய்” அம்சம் சாதனத்திற்குள்ளேயே விதிகள், மெசேஜ் பேட்டர்ன்கள், அனுப்புநரைத் தேடுதல் ஆகிவற்றைப் பயன்படுத்தி தெரியாத அனுப்புநர்களிடம் இருந்து ஸ்பேமை ஃபில்டர் செய்கிறது. ஃபில்டரிங் செயல்பாடு மெசேஜ் உள்ளடக்கத்தை Appleக்கு வெளிப்படுத்தாது. “அனுப்புநரைத் தேடுதல்” அம்சம் மெசேஜ் அனுப்புநர் அல்லது பெறுநர் விவரங்களை Appleக்குத் தெரிவிக்காது. அமைப்புகள் > செயலிகள் > மெசேஜஸ் > ஸ்பேமை ஃபில்டர் செய் என்பதற்குச் சென்று ஸ்பேம் ஃபில்டரை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் முடக்கலாம்.
பெயர் மற்றும் புகைப்படத்தைப் பகிர்வது, நீங்கள் iMessage செய்பவர்களுடன் பெயர் மற்றும் புகைப்படத்தைப் பகிர அனுமதிக்கிறது. உங்கள் தொடர்புகளுடன் தானாகப் பகிரும் வகையில் அல்லது ஒவ்வொரு முறையும் பகிர்வதற்கு முன் அனுமதி கேட்கும் வகையில் அமைக்கலாம். நீங்கள் பகிரும் நபர்கள் உங்களின் அடுத்த iMessage உடன் உங்கள் பகிரப்பட்ட பெயர் மற்றும் புகைப்படத்தைப் பெறுவார்கள், அவை அவர்களின் சாதனங்களில் சேமிக்கப்படும். பல நபர்கள் உள்ள iMessage உரையாடலில் உங்கள் பெயரையும் புகைப்படத்தையும் நீங்கள் பகிர்ந்தால், உரையாடலில் உள்ள அனைத்து நபர்களுக்கும் உங்கள் பெயரும் புகைப்படமும் அனுப்பப்படும். உங்கள் பெயர் மற்றும் புகைப்படத்தை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் தானாகப் பகிர்வதை இயக்கினால், நீங்கள் பகிரும் ஒவ்வொரு நபருக்கும் iMessageஐ அனுப்பும்போது அறிவிப்புகள் அனுப்பப்படும். உங்கள் பெயரையும் புகைப்படத்தையும் பகிர்ந்து பிறகு பகிர்தலை ஆஃப் செய்திருந்தால், முன்பு உங்கள் பெயரையும் புகைப்படத்தையும் பெற்றவர்களின் சாதனங்களில் உங்கள் தகவல்கள் இப்போதும் இருக்கக்கூடும். மெசேஜ்களுக்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் பெயரும் புகைப்படமும் Appleக்கு அனுப்பப்பட்டு, Appleஆல் பார்க்க முடியாத வகையில் என்கிரிப்ட் செய்யப்பட்டு Appleஇன் சர்வர்களில் சேமிக்கப்படும்.
Appleஇன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்காக நீங்கள் மெசேஜஸ் செயலி மற்றும் iMessage சேவையைப் பயன்படுத்துவது தொடர்பான சில தகவல்களை Apple பதிவுசெய்து சேமிக்கக்கூடும்:
- நீங்கள் iMessageஐப் பயன்படுத்தும் விதம் பற்றிய தகவல்களை உங்களை அடையாளப்படுத்தாத வகையில் Apple பதிவுசெய்து சேமிக்கக்கூடும் (சாட்டிலைட் மூலம் மெசேஜ்களை அனுப்புவது மற்றும் பெறுவது உட்பட).
- ஸ்பேம் அல்லது ஜங்க் மெசேஜ்கள் குறித்து புகாரளிக்கும்போது நீங்கள் அல்லது வேறொருவர் Appleக்கு அனுப்பும் தகவலை Apple சேமிக்கக்கூடும். ஸ்பேம் மற்றும் ஜங்க் மெசேஜ்களைப் புகாரளித்தலில் உள்ள தகவல்கள் அல்லது அதனுடன் தொடர்பான தகவல்களை மோசடி மற்றும் தவறான பயன்பாடுகளைத் தடுக்கும் நோக்கங்களுக்காக Apple சேமித்துப் பயன்படுத்தக்கூடும்.
- டெலிவரி செய்ய திட்டமிடப்பட்டுள்ள அல்லது டெலிவரி செய்ய முடியாத iMessagesஐ டெலிவரி செய்வதற்காக 30 நாட்கள் வரை Apple சேமிக்கக்கூடும்.
- iMessage மூலம் பிறரைத் தொடர்புகொள்ள முடியுமா என்பதைக் கண்டறிய, உங்கள் சாதனத்தில் உள்ள சில செயலிகள் (மெசேஜஸ் உட்பட) Apple சர்வர்களைத் தொடர்புகொள்ளக்கூடும். இது நடக்கும்போது, உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள இந்த ஃபோன் எண்களையும் மின்னஞ்சல் முகவரிகளையும் 30 நாட்கள் வரை Apple சேமிக்கக்கூடும்.
இந்த அம்சங்களைப் பயன்படுத்துவதன் மூலம், Apple, அதன் துணை நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் மேலே விவரிக்கப்பட்டுள்ளவாறு இந்தத் தகவல்களைப் பரிமாற்றம் செய்வது, சேகரிப்பது, பராமரிப்பது, செயலாக்குவது மற்றும் பயன்படுத்துவதை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்குகிறீர்கள்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2025-12-12