Shazam இசையறிதல் & தனியுரிமை

“Shazam இசையறிதல்” கோரிக்கையைச் செயலாக்குவதற்காகவும் மோசடி அல்லது சேவையைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கண்டறிவதற்காகவும் பாடல்களுக்கான தனித்துவமான ஆடியோ ஃபிங்கர்பிரின்ட், உங்கள் IP முகவரி போன்ற தகவல்களை “Shazam இசையறிதல்” செயலி Appleக்கு அனுப்புகிறது.
 

“Shazam இசையறிதல்” செயலி உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Privacy Icon

  • “Shazam இசையறிதல்” கோரிக்கைகள் சாதனத்தால் உருவாக்கப்படும் ரேண்டமான அடையாளத் தகவலுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரேண்டமான அடையாளத் தகவல் உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்படாது.
  • உங்கள் Apple கணக்கில் உள்நுழைந்திருந்தால் மற்றும் இரு காரணி அங்கீகாரத்தைச் செயல்படுத்தியிருந்தால், உங்கள் சாதனங்கள் அனைத்திலும் அடையாளம் கண்டறியப்பட்ட உங்கள் “Shazam இசையறிதல்” கோரிக்கைகளை ஒத்திசைப்பதற்கு “Shazam இசையறிதல்” செயலி iCloudஐப் பயன்படுத்தும்.
  • “Shazam இசையறிதல்” செயலியின் “வரலாறு” தாவலில் உங்கள் கோரிக்கைகளின் பட்டியலைக் காட்டுவதற்காக “Shazam இசையறிதல்” செயலியில் உங்கள் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம், சேவையைப் பயன்படுத்தி நீங்கள் கண்டறியும் பாடல்களும் இதில் அடங்கும்.

உங்கள் தகவலின் தனியுரிமையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது Appleஇல் உள்ள அனைவரின் முன்னுரிமையாகும். உங்கள் அனுபவத்தைச் சிறப்பாக்குவதற்காக எங்களுக்குத் தேவைப்படும் தரவை மட்டுமே நாங்கள் சேகரிக்க முயல்கிறோம் மற்றும் தரவைச் சேகரிக்கும்போது எதைச் சேகரிக்கிறோம், அது எங்களுக்கு ஏன் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்வது முக்கியம் என நினைக்கிறோம், இதன்மூலம் தகவலறிந்த முடிவுகளை நீங்கள் எடுக்கலாம்.

“Shazam இசையறிதல்” செயலியைப் பயன்படுத்துதல்

பிளே செய்யப்படும் பாடலை அடையாளம் காண்பதற்காக Apple Watchஇல் உள்ள “Shazam இசையறிதல்” செயலியை நீங்கள் பயன்படுத்தலாம். “Shazam இசையறிதல்” கோரிக்கையைச் செயலாக்கி பாடலைக் கண்டறிய உதவுவதற்காக நீங்கள் கோரிக்கை விடுக்கும் பாடல் பற்றிய குறிப்பிட்ட தரவுகளை (பாடலுக்கான ஆடியோ ஃபிங்கர்பிரின்ட் உட்பட) “Shazam இசையறிதல்” செயலி Appleக்கு அனுப்புகிறது. இயல்பாக, “Shazam இசையறிதல்” கோரிக்கைகள் சாதனத்தால் உருவாக்கப்படும் ரேண்டமான அடையாளத் தகவலுடன் இணைக்கப்பட்டிருக்கும், உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்டிருக்காது.

உங்கள் Apple கணக்கில் உள்நுழைந்திருந்தால் மற்றும் இரு காரணி அங்கீகாரத்தைச் செயல்படுத்தியிருந்தால், அடையாளம் கண்டறியப்பட்ட உங்கள் “Shazam இசையறிதல்” கோரிக்கைகளைச் சேமிப்பதற்கு “Shazam இசையறிதல்” செயலி iCloudஐப் பயன்படுத்தும். அவை iCloudஇல் இருக்கும்போதும் பகிரப்படும்போதும் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும். அமைப்புகள் > [உங்கள் பெயர்] > iCloud என்பதற்குச் சென்று “Shazam இசையறிதல்” செயலியைத் தட்டி அதை ஆஃப் செய்வதன் மூலம் உங்கள் iOS அல்லது iPadOS சாதனத்தில் iCloud ஒத்திசைவை நீங்கள் முடக்கலாம். “Shazam இசையறிதல்” செயலியின் iCloud ஒத்திசைவை நீங்கள் முடக்கினால், iCloudஇல் சேமிக்கப்பட்டுள்ள “Shazam இசையறிதல்” கோரிக்கைகள் உங்கள் Apple கணக்கிலேயே இருக்கும், ஆனால் “Shazam இசையறிதல்” செயலியில் இருந்து புதிய கோரிக்கைகள் சேமிக்கப்படாது. “Shazam இசையறிதல்” செயலியில் உங்கள் இதுவரையான கோரிக்கைகளைச் செயலியின் “வரலாறு” தாவலுக்குச் சென்று நிர்வகிக்கலாம்.

பாடல்களைக் கண்டறிவதற்காக iPhone, iPad மற்றும் Mac சாதனத்தின் கட்டுப்பாட்டு மையம், Siri மற்றும் பிற அம்சங்களில் இருந்தும் “Shazam இசையறிதல்” செயலியை நீங்கள் பயன்படுத்தலாம். கட்டுப்பாட்டு மையம், Siri மற்றும் பிற அம்சங்களில் “Shazam இசையறிதல்” செயலியைச் சேர்ப்பது மற்றும் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிய support.apple.com/118570 இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

உங்களைப் பற்றி சேகரிக்கப்படும் தகவல்கள்

“Shazam இசையறிதல்” செயலியின் “வரலாறு” தாவலில் காட்டுவதற்காக “Shazam இசையறிதல்” செயலியில் நீங்கள் கண்டறியும் பாடல்களைப் பற்றிய தரவுகளைச் சேகரிக்கிறோம். மோசடி அல்லது சேவையைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கண்டறிவதற்காகக் குறிப்பிட்ட அடையாளத் தகவல்களையும் (எ.கா. IP முகவரி) நாங்கள் சேகரிக்கக்கூடும். “Shazam இசையறிதல்” செயலியைப் பயன்படுத்தும்போது சாதனத்தின் இருப்பிடத்திற்கான அணுகலைச் செயலிக்கு வழங்கலாம். பாடல் எந்த இடத்தில் வைத்து கண்டறியப்பட்டது என்பதைக் காட்டுவதற்காகவும் சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் இருப்பிடத் தரவுகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். உங்கள் iPhoneஇல் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் என்பதற்குச் சென்று “Shazam இசையறிதல்” செயலிக்கான இருப்பிட அணுகலை “வேண்டாம்” என அமைத்து “Shazam இசையறிதல்” செயலிக்கான இருப்பிடச் சேவைகளை எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம்.

கோரிக்கைகள் மூலம் கண்டறியப்பட்ட பாடல்களை Apple Musicஇல் சேர்த்தல், பிரபலமடையும் பாடல்களின் Shazam பட்டியல் போன்ற தொடர்புடைய Apple தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஆதரிப்பதற்காக அடையாளம் நீக்கப்பட்ட மற்றும் தொகுக்கப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்தக்கூடும். இதில் “Shazam இசையறிதல்” செயலி மூலம் கண்டறியப்பட்ட பாடல்கள், ஒவ்வொரு “Shazam இசையறிதல்” கோரிக்கையின்போதான தோராயமான இருப்பிடம் போன்றவையும் அடங்கும்.

Apple Music

நீங்கள் Apple Music சேவைக்குச் சந்தா சேர்ந்திருந்தால் “Shazam இசையறிதல்” செயலியுடன் Apple Music தானாகவே இணைக்கப்படும். “Shazam இசையறிதல்” செயலி மூலம் நீங்கள் கண்டறிந்த பாடல்களை உங்கள் Apple Music பிளேலிஸ்ட்டில் சேர்த்தல் போன்ற அம்சங்களை வழங்குவதற்காக உங்கள் Apple Music கணக்கு பற்றிய தகவல்களை “Shazam இசையறிதல்” செயலி பயன்படுத்தும். “Shazam இசையறிதல்” செயலி உங்கள் சந்தா நிலையின் அடிப்படையில் “Shazam இசையறிதல்” செயலியில் காட்டப்படும் பரிந்துரைகளையும் பிரத்தியேகமாக்கலாம். “Shazam இசையறிதல்” கோரிக்கை மூலம் கண்டறியப்பட்ட இசையை இணக்கமான மூன்றாம் தரப்பு இசை ஸ்ட்ரீமிங் சேவைகளில் நீங்கள் திறக்கலாம்.

Apple Watch இசையைக் கண்டறிதல்

உங்கள் சுற்றுப்புறங்களில் இசை பிளேசெய்யப்படும்போது உங்கள் வாட்ச்சில் உள்ள மைக்ரோஃபோனைப் பயன்படுத்தி தானாகவே கண்டறிவதற்காக Apple Watchஇல் “இசையைக் கண்டறிதல்” அம்சத்தை நீங்கள் செயல்படுத்தலாம். “இசையறிதல்” அம்சம் செயல்படுத்தப்பட்டிருந்தால், உங்கள் Apple Watch இசை பிளேசெய்யப்படுவதைக் கண்டறியும்போது உங்களுக்குத் தெரிவிக்கும், பிளே செய்யப்படும் அந்தப் பாடலைக் கண்டறிவதற்காக “Shazam இசையறிதல்” அம்சத்தை நீங்கள் பயன்படுத்தலாம். “இசையைக் கண்டறிதல்” அம்சம் முற்றிலும் சாதனத்திலேயே இயங்குகிறது, இசை பிளே செய்யப்படுகிறதா என்று கவனிக்கும்போது எந்த ஆடியோவையும் உங்கள் Apple Watch பதிவுசெய்வதோ சேமிப்பதோ இல்லை. உங்கள் Apple Watchஇல் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > மைக்ரோஃபோன் என்பதற்குச் சென்று “இசையைக் கண்டறிதல்” என்பதை ஆஃப் செய்து, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இசையைக் கண்டறிதல் அம்சத்தை முடக்கலாம்.

உங்களுடனான தகவல்தொடர்புகள்

Shazam இசையறிதலுக்கான அறிவிப்புகளைச் செயல்படுத்தினால், உங்கள் Shazam செயல்பாடு தொடர்பான அறிவிப்புகளை நாங்கள் உங்களுக்கு அனுப்பக்கூடும். உங்கள் அறிவிப்பு முன்னுரிமைகளை மாற்ற, iOS அல்லது iPadOS சாதனத்தில், அமைப்புகள் > அறிவிப்புகள் > Shazam இசையறிதல் என்பதற்குச் செல்லவும்.

மூன்றாம் தரப்பினருடன் பகிர்தல்

இசை லேபிள்கள், கலைஞர்கள் போன்ற எங்கள் கூட்டாளர்களுடன் அடையாளம் நீக்கப்பட்ட மற்றும் தொகுக்கப்பட்ட தகவல்களை நாங்கள் பகிர்கிறோம், இதில் “Shazam இசையறிதல்” செயலி மூலம் கண்டறியப்பட்ட பாடல்கள், ஒவ்வொரு “Shazam இசையறிதல்” கோரிக்கையின்போதான தோராயமான இருப்பிடம் போன்றவையும் அடங்கும். எந்தப் பாடல்கள் வெற்றியடைகின்றன என்பதைப் புரிந்துகொள்ள இந்தத் தகவல்கள் எங்கள் கூட்டாளர்களுக்கு உதவுகின்றன.

தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய அடிப்படைச் சட்டங்கள்

பொதுவாக Apple உடனான உங்கள் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காகவும், சேவைகளை வழங்கத் தேவைப்படும் அளவிற்கும், எங்கள் சட்டரீதியான கடமைகளுக்கு இணங்குவதற்காகவும் “Shazam இசையறிதல்” செயலியில் உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குகிறோம். ஒப்புதல் என்பது சட்டரீதியான அடிப்படையாக அமையும் இடங்களில், பொருந்தும் உள்ளூர் சட்டங்களின் அடிப்படையில் அதைப் பெற முயல்கிறோம்.

பொருந்தும் உள்ளூர் சட்டங்கள் குறிப்பிடும் இடங்களில், பின்வரும் காரணங்களுக்காக எங்களின் அல்லது மூன்றாம் தரப்புகளின் நியாயமான நலன்களின் நோக்கத்திற்காகத் தேவைப்படும் அளவிற்குத் தனிப்பட்ட தரவைச் செயலாக்குகிறோம்:

  • தொடர்புடைய உள்ளடக்கத்தை உங்களுக்குக் காட்டுதல்
  • உங்களுக்காகவும் பிறருக்காகவும் “Shazam இசையறிதல்” செயலியை மேம்படுத்தி உகந்ததாக்க உதவுதல்
  • வெளியீட்டாளர்கள், கலைஞர்கள், லேபிள்கள், பட்டியல் தொகுப்பாளர்களுக்கு அறிக்கை வழங்குதல்
  • மோசடி மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்பாட்டைத் தடுத்தல்

பயன்படுத்தப்படும் தரவில் இவையும் அடங்கும்:

  • “Shazam இசையறிதல்” செயலி மூலம் நீங்கள் கண்டறியக் கோரும் பாடல்கள்
  • உங்கள் சாதனம் மற்றும் கணக்கு பற்றிய விவரங்கள், Apple Music சந்தா உட்பட
  • உங்கள் IP முகவரி

உங்கள் தரவுகளை நிர்வகித்தல்

Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.

2026-03-30