பாஸ்வேர்டுகள் மற்றும் தனியுரிமை

உங்கள் பாஸ்வேர்டுகளைப் பாதுகாப்பாகச் சேமிக்கலாம் பகிரலாம். அவை வலுவற்றதாக இருந்தாலோ தரவுக் கசிவில் இடம்பெற்றிருந்தாலோ அதுகுறித்த அறிவிப்பைப் பெறலாம்.


உங்கள் பாஸ்வேர்டுகள், பாஸ்கீக்கள், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள், தொடர்புடைய பயனர் பெயர்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிகள் போன்ற சேமிக்கப்பட்ட கணக்குத் தகவல்களை “பாஸ்வேர்டுகள்” செயலி பாதுகாப்பாகச் சேமிக்கும். செயலியிலோ இணையதளத்திலோ உங்கள் கணக்குத் தகவல்களை உள்ளிடுமாறு உங்களிடம் கேட்கப்பட்டால், உங்கள் தகவல்களை உள்ளிட “பாஸ்வேர்டுகள்” செயலி தானாக உங்களுக்கு உதவக்கூடும். உங்கள் சாதனத்தில் “பாஸ்வேர்டுகள்” செயலியில் உள்ள தகவல்கள் என்கிரிப்ட் செய்யப்பட்டிருப்பதுடன் அவற்றை Appleஆல் பார்க்க முடியாது.

உங்கள் பாஸ்வேர்டுகளை வலுப்படுத்துவற்கான நடவடிக்கைகளை “பாஸ்வேர்டுகள்” செயலி பரிந்துரைக்கக்கூடும். உதாரணமாக, சேமிக்கப்பட்ட பாஸ்வேர்டு வலுவற்றதாக உள்ளது என்றோ பல கணக்குகளில் அது பயன்படுத்தப்பட்டுள்ளது என்றோ அது மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படுவது என்றோ “பாஸ்வேர்டுகள்” அம்சம் உங்களிடம் தெரிவிக்கலாம். இந்தப் பரிந்துரைகள் உங்கள் சாதனத்தில் மேற்கொள்ளப்படும் செயலாக்கத்தின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படுகின்றன.

உங்கள் கணக்குகள் அல்லது பாஸ்வேர்டுகளை Appleக்குத் தெரியப்படுத்தாமல், உங்கள் பாஸ்வேர்டுகளில் ஒன்று தரவுக் கசிவில் இடம்பெற்றுள்ளதா என்பதையும் “பாஸ்வேர்டுகள்” செயலியில் உள்ள “பிறருக்குத் தெரிந்த பாஸ்வேர்டுகளைக் கண்டறிதல்” அம்சம் உங்களிடம் தெரிவிக்கக்கூடும். உங்கள் பாஸ்வேர்டுகளின் வெவ்வேறு சார்புகள், கசிந்த பாஸ்வேர்டுகளின் பட்டியலில் உள்ளனவா என்று பாதுகாப்பாகவும் தனிப்பட்ட முறையிலும் அடிக்கடி சரிபார்க்க, இந்த அம்சம் வலுவான கிரிப்டோகிராஃபிக் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. தரவுக் கசிவில் இடம்பெற்றுள்ள பொதுவான பாஸ்வேர்டுகளின் பட்டியலை Apple உங்கள் சாதனத்திற்கு அனுப்பும். இந்தப் பட்டியலில் இல்லாத உங்கள் பாஸ்வேர்டுகளுக்கு, அவை தரவுக் கசிவில் உள்ளனவா என்று பார்க்க உங்கள் பாஸ்வேர்டுகளில் இருந்து கணக்கிடப்பட்ட தகவல்களை “பாஸ்வேர்டுகள்” செயலி Appleக்கு அனுப்பும். தரவுக் கசிவில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று உத்தேசிக்கப்படும் எந்தவொரு பாஸ்வேர்டுக்குமான எச்சரிக்கையைப் பெறுவீர்கள். உங்களின் உண்மையான பாஸ்வேர்டுகள் Apple உடன் ஒருபோதும் பகிரப்படாது. மேலும் உங்கள் பாஸ்வேர்டுகளில் இருந்து கணக்கிடப்பட்ட தகவல்களையும் Apple சேமிப்பதில்லை. பாஸ்வேர்டுகள் > அமைப்புகள் > செயலிகள் > பாஸ்வேர்டுகள் > “பிறருக்குத் தெரிந்த பாஸ்வேர்டுகளைக் கண்டறிதல்” என்பதற்குச் சென்று இந்த அம்சத்தை எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம்.

நீங்கள் “iCloud பாஸ்வேர்டுகள் & கீசெயின்” அம்சத்தைச் செயல்படுத்தியிருந்தால் பாஸ்வேர்டுகள், பாஸ்கீக்கள், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள், தொடர்புடைய தகவல்கள் ஆகியவற்றை குழுக்கள் உட்பட பிறருடன் பகிரலாம். “பாஸ்வேர்டுகள்” செயலியில் உள்ள தகவல்களைக் குழுவில் நீங்கள் பகிர்ந்தால், குழுவில் உள்ள அனைவராலும் உள்ளீட்டைத் திருத்தவும் நீக்கவும் முடியும். யாரேனும் குழுவில் சேர்ந்தால், குழுவில் பகிரப்படும் அனைத்து உள்ளீடுகளுக்குமான அணுகலையும் அவர் பெறுவார். குழுவில் இருந்து யாரேனும் வெளியேறினால், குழுவில் அவர்கள் பகிர்ந்த உள்ளீடுகள் அவர்களிடம் இருக்கும் ஆனால் அந்தக் குழுவில் பிறரால் பகிரப்பட்ட உள்ளீடுகளுக்கான அணுகலை அவர்கள் இழப்பார்கள். உள்ளீடுகளைப் பகிர்வது முழுவதுமாக என்கிரிப்ட் செய்யப்பட்டுள்ளதால், நீங்கள் பகிரும் உள்ளீடுகளை Appleஆல் கூட பார்க்க முடியாது.

“பாஸ்வேர்டுகள்” செயலியில் நீக்கப்பட்ட தகவல்கள் அகற்றப்படாத வரை அதிகபட்சம் 30 நாட்களுக்குள் அவற்றை மீட்டெடுக்கலாம்.

உள்ளீட்டிற்கு அடுத்து “பாஸ்வேர்டுகள்” செயலி ஓர் ஐகானைக் காட்டக்கூடும். உள்ளீடு ஓர் இணையதளத்துடன் தொடர்புடையதாக இருந்தால், இரண்டு வெவ்வேறு என்டிட்டிகளால் இயக்கப்படும் இரண்டு தனித்தனி ரிலேக்களைப் பயன்படுத்தி ஐகானைப் பதிவிறக்குவதன் மூலம் அந்தத் தளத்தில் இருந்து ஐகான் பெறப்படக்கூடும். முதலாவது ரிலே உங்கள் IP முகவரியை அறிந்திருக்கும், ஆனால் நீங்கள் பதிவிறக்கும் ஐகானுக்கான பாஸ்வேர்டுகளைப் பற்றி அறிந்திருக்காது. இரண்டாவது ரிலே நீங்கள் பதிவிறக்கும் ஐகானைப் பற்றி அறிந்திருக்கும், ஆனால் உங்கள் IP முகவரியை அறிந்திருக்காது, அதற்குப் பதிலாக இலக்கிற்குப் பொதுவான அடையாளத்தை வழங்கும். இவ்வாறு செய்வதால், உங்களையும் நீங்கள் பதிவிறக்கிய ஐகான்களையும் அடையாளம் காண்பதற்கான தகவல்கள் எந்தவொரு என்டிட்டியிடமும் இருக்காது. இதேபோல், நீங்கள் சேமித்த பாஸ்வேர்டைக் கொண்டுள்ள இணையதளம் பாஸ்கீக்களை ஆதரிக்கும்பட்சத்தில் அதை பாஸ்வேர்டுகள் செயலி உங்களுக்குத் தெரிவிக்கக்கூடும். இந்தத் தகவலும் மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி வெவ்வேறு நிறுவனங்களால் இயக்கப்படும் இரண்டு தனித்தனி ரிலேக்களைப் பயன்படுத்தி இணையதளங்களில் இருந்து பதிவிறக்கப்படும்.

Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.

2026-05-11