தனிப்பயனாக்கப்பட்ட ஸ்பேஷியல் ஆடியோ & தனியுரிமை

ஸ்பேஷியல் ஆடியோவிற்கான தனிப்பட்ட சுயவிவரங்கள் உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.


தனிப்பட்ட ஸ்பேஷியல் ஆடியோ சுயவிவரம் உங்களுக்கு விருப்பமான ஒலி அமைப்புடன் நன்கு பொருந்தும் வகையில் ஆடியோவைப் பிரத்தியேகமாக்குகிறது. ஸ்பேஷியல் ஆடியோ சுயவிவரத்தை உருவாக்கத் தேர்வுசெய்தால், உங்கள் காது மற்றும் தலை வடிவத் தோற்றத்தை உருவாக்க TrueDepth கேமராவை உங்கள் சாதனம் பயன்படுத்துகிறது. உங்கள் சுயவிவரத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படும் கேமரா தரவுகள் முற்றிலும் சாதனத்திலேயே செயலாக்கப்படுகின்றன, படங்கள் சேமிக்கப்படுவதில்லை.

தனிப்பயனாக்கப்பட்ட ஸ்பேஷியல் ஆடியோ AirPods போன்ற இணைக்கப்பட்ட சாதனங்களில் ஆடியோ ரெண்டர் செய்யப்படும் விதத்தை மாற்ற ஆடியோ பிளேபேக்கின்போது உங்கள் தனிப்பட்ட சுயவிவரத்தைப் பயன்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, ஸ்பேஷியல் ஆடியோ ஆதரிக்கப்படும் சாதனங்களில் உங்கள் ஆடியோ அனுபவத்தை மேம்படுத்த உதவுவதற்காக, ஒலிச் செயலாக்கத் தாமத்தைச் சரிசெய்ய ஸ்பேஷியல் ஆடியோவிற்கான உங்கள் தனிப்பட்ட சுயவிவரம் பயன்படுத்தப்படலாம். நீங்கள் iCloudஐப் பயன்படுத்தினால் ஸ்பேஷியல் ஆடியோவிற்கான உங்கள் தனிப்பட்ட சுயவிவரம் முழுமையான என்கிரிப்ஷனைப் பயன்படுத்தி உங்கள் அனைத்து Apple சாதனங்களிலும் ஒத்திசைக்கப்படும், Appleஆல் அதைப் படிக்க முடியாது.

ஸ்பேஷியல் ஆடியோவிற்கான உங்கள் தனிப்பட்ட சுயவிவரத்தை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் நீக்கலாம். உங்கள் iOS சாதனத்தில், அமைப்புகள் > [ஸ்பேஷியல் ஆடியோ செயல்படுத்தப்பட்ட உங்கள் சாதனத்தின் பெயர்] > தனிப்பயனாக்கப்பட்ட ஸ்பேஷியல் ஆடியோ என்பதற்குச் சென்று “தனிப்பயனாக்கப்பட்ட ஸ்பேஷியல் ஆடியோவைப் பயன்படுத்துவதை நிறுத்து” என்பதைத் தட்டுங்கள். உங்கள் visionOS சாதனத்தில், அமைப்புகள் > Bluetooth > எனது சாதனங்கள் என்பதற்குச் சென்று ஸ்பேஷியல் ஆடியோ செயல்படுத்தப்பட்ட உங்கள் சாதனப் பெயருக்கு அருகில் உள்ள “தகவல்” பட்டனைத் தட்டி பின்னர் தனிப்பயனாக்கப்பட்ட ஸ்பேஷியல் ஆடியோ > “தனிப்பயனாக்கப்பட்ட ஸ்பேஷியல் ஆடியோவைப் பயன்படுத்துவதை நிறுத்து” என்பதைத் தட்டுங்கள். Macஇல், சிஸ்டம் அமைப்புகள் > [ஸ்பேஷியல் ஆடியோ செயல்படுத்தப்பட்ட உங்கள் சாதனத்தின் பெயர்] > தனிப்பயனாக்கப்பட்ட ஸ்பேஷியல் ஆடியோ என்பதற்குச் சென்று “தனிப்பயனாக்கப்பட்ட ஸ்பேஷியல் ஆடியோவைப் பயன்படுத்துவதை நிறுத்து” என்பதை கிளிக் செய்யுங்கள். தனிப்பயனாக்கப்பட்ட ஸ்பேஷியல் ஆடியோவை நீக்கினால் அந்தச் சுயவிவரம் உங்கள் சாதனங்கள் அனைத்திலிருந்தும் நீக்கப்படும்.

2025-12-12