ஃபோட்டோஸ் மற்றும் தனியுரிமை

புகைப்படங்கள் செயலி உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


உங்களின் தனித்துவமான புகைப்பட லைப்ரரியைப் பிரதிபலிக்கக்கூடிய பிரத்தியேகமாக்கப்பட்ட அனுபவத்தை வழங்கும் அதேவேளையில் புகைப்படங்கள் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் Apple அணுகுவதில்லை, அத்துடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக அவற்றைப் பயன்படுத்துவதும் இல்லை.

பிரத்தியேகமாக்கப்பட்ட அனுபவத்தை வழங்குவதற்கும், உங்களுக்கு அர்த்தமுள்ள விதத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒழுங்கமைப்பதற்கும் பகிர்வுப் பரிந்துரைகள், நினைவுகள், “நபர்கள் மற்றும் செல்லப்பிராணிகள்” ஆல்பம், சிறப்புப் புகைப்படங்கள் போன்ற அம்சங்களை மேம்படுத்துவதற்கும் சாதனத்தில் உள்ள இயந்திரக் கற்றல் அம்சத்தை ஃபோட்டோஸ் செயலி பயன்படுத்துகிறது. காட்சியை வகைப்படுத்துதல், நபர்களையும் செல்லப்பிராணிகளையும் அடையாளம் காணுதல், புகைப்படத் தரப் பகுப்பாய்வு, ஆடியோவை வகைப்படுத்துதல் ஆகியவை இந்தச் சாதனப் பகுப்பாய்வில் அடங்கும். எந்தெந்தப் புகைப்படங்களை நீங்கள் திருத்தியுள்ளீர்கள் அல்லது பிறருடன் பகிர்ந்துள்ளீர்கள், “மெசேஜஸ்” செயலியில் நீங்கள் அடிக்கடி தொடர்புகொள்ளும் நபர்கள், “தொடர்புகள்” செயலியில் அமைத்துள்ள உறவுமுறைகள், “தொடர்புகள்” அல்லது “மேப்ஸ்” செயலியில் அமைத்துள்ள வீடு மற்றும் பணி இருப்பிடங்கள், புகைப்படங்களை எடுத்த இடங்கள், “கேலண்டர்” மற்றும் “தொடர்புகள்” செயலியில் உள்ள முக்கியமான தேதிகள் போன்ற சாதனத்தில் உள்ள தகவல்களையும் ஃபோட்டோஸ் செயலி பயன்படுத்தும்.

கூடுதலாக, புகைப்படங்களில் உள்ள முகங்களை அடையாளம் காண சாதனத்தில் உள்ள பகுப்பாய்வை ஃபோட்டோஸ் செயலி பயன்படுத்துவதுடன் அவற்றை “நபர்கள் மற்றும் செல்லப்பிராணிகள்” ஆல்பத்தில் ஒன்றாகக் குழுவாக்கும். “நபர்கள் மற்றும் செல்லப்பிராணிகள்” ஆல்பத்தில் உள்ள ஒரு நபருக்குப் பெயரைச் சேர்த்தால், அவரது பெயரும் முகமும் iCloud செயல்படுத்தப்பட்ட உங்கள் சாதனங்கள் அனைத்திலும் உள்ள ஃபோட்டோஸ் செயலியில் காட்டப்படும்.

iCloud புகைப்படங்கள்

iCloud புகைப்படங்களைப் பயன்படுத்தினால், உங்கள் புகைப்படங்களும் வீடியோக்களும் iCloudஇல் பாதுகாப்பாகச் சேமிக்கப்படுவதுடன் iCloud செயல்படுத்தப்பட்ட உங்கள் சாதனங்கள் அனைத்திலும் அவை சமீபத்தியதாக வைத்திருக்கப்படும். ஒவ்வொரு புகைப்படம் மற்றும் வீடியோவையும் அதன் மெட்டாடேட்டாவையும் அனுப்பும்போதும் வைத்திருக்கும்போதும் என்கிரிப்ட் செய்வதன் மூலம் iCloud அவற்றைப் பாதுகாக்கிறது.

புகைப்படங்களைத் தேடுகிறது

லேண்ட்மார்க்குகள் அல்லது பிரபலமான இடங்களைப் பயன்படுத்தி புகைப்படங்களைத் தேட ஃபோட்டோஸ் செயலியில் உள்ள மேம்பட்ட விஷுவல் தேடல் அம்சம் உங்களை அனுமதிக்கிறது. எங்கள் சர்வர்களில் Apple வைத்திருக்கும் உலகளாவிய அட்டவணையுடன் உங்கள் புகைப்படங்களில் உள்ள இடங்களைத் தனிப்பட்ட முறையில் உங்கள் சாதனம் பொருத்திப்பார்க்கும். ஹோமோமார்ஃபிக் என்கிரிப்ஷன், வகையீட்டுத் தனியுரிமை, IP முகவரியை மறைக்கும் OHTTP ரிலே ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். உங்கள் ஃபோட்டோஸ் செயலியில் உள்ள தகவல்கள் குறித்து Apple தெரிந்துகொள்வதை இது தடுக்கும். உங்கள் iOS, iPadOS சாதனத்தில் அமைப்புகள் > செயலிகள் > ஃபோட்டோஸ் என்பதற்குச் சென்று மேம்பட்ட விஷுவல் தேடலை எப்போது வேண்டுமானாலும் ஆஃப் செய்யலாம். Macஇல், ஃபோட்டோஸ் செயலியைத் திறந்து அமைப்புகள் > பொது என்பதற்குச் செல்லவும்.

புகைப்படங்களைப் பகிர்தல்

செயலியில் உள்ள புகைப்படத் தேர்வியைப் பயன்படுத்தி அல்லது ஃபோட்டோஸ் செயலியில் உள்ள பகிர்வுத் தாள் மூலம் மற்றொரு Apple பயனர் அல்லது மூன்றாம் தரப்புச் செயலிகளுடன் நீங்கள் எதைப் பகிரலாம் என்பதற்கான கட்டுப்பாட்டை ஃபோட்டோஸ் செயலி உங்களுக்கே வழங்கும். உதாரணமாக, நீங்கள் முழு அணுகலை வழங்கத் தேர்வுசெய்யலாம். ஆல்பம் பூட்டப்பட்டிருந்தாலும், இது மூன்றாம் தரப்பு செயலிக்கு உங்கள் மறைக்கப்பட்ட புகைப்படங்கள் உட்பட உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான அணுகலை வழங்கும். உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தவும் நீங்கள் தேர்வுசெய்யலாம். இதில் மூன்றாம் தரப்பினர் எந்தெந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அணுகலாம் என்பதை நீங்கள் தேர்வுசெய்வீர்கள். கூடுதலாக, ஃபோட்டோஸ் செயலியில் பகிர்வுத் தாளுடன் ஒரு புகைப்படத்தை நீங்கள் பகிரும்போது Live Photos வீடியோ, இதுவரை திருத்தியவை, இருப்பிடத் தகவல்கள் போன்ற மெட்டாடேட்டாவில் எது புகைப்படத்துடன் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

செயலியில் உள்ள புகைப்படத் தேர்வியை நீங்கள் பயன்படுத்தினால், நீங்கள் பகிர விரும்பும் புகைப்படத்தைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது உங்களின் ஒட்டுமொத்த புகைப்பட லைப்ரரியையும் அணுக செயலியை அனுமதிக்கலாம். இருப்பிடம், டெப்த் தகவல் போன்ற தொடர்புடைய மெட்டாடேட்டாவும் புகைப்படங்களுக்கான அணுகலில் அடங்கும். அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > புகைப்படங்கள் என்பதற்குச் சென்று உங்கள் புகைப்பட லைப்ரரியை அணுகுவதற்கான செயலியின் திறனை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம்.

இருப்பிடம்

உங்கள் இருப்பிடத்தை அணுக கேமராவுக்கு அனுமதி வழங்கினால், புகைப்படங்களும் வீடியோக்களும் படமெடுக்கப்பட்ட இடங்களைக் குறிக்க உங்கள் இருப்பிடம் பயன்படுத்தப்படும். அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் > கேமரா என்பதற்குச் சென்று இந்த அமைப்பை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். உங்கள் visionOS சாதனத்தில், அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் > படம்பிடி என்பதற்குச் செல்லவும். புகைப்படம் அல்லது வீடியோவில் உள்ள “மேலும்” என்பதைத் தட்டிய பிறகு இருப்பிடத்தைச் சரிசெய் > “இருப்பிடம் இல்லை” என்பதைத் தட்டி நீங்கள் ஏதேனும் புகைப்படம் அல்லது வீடியோவில் இருந்து இருப்பிடத் தகவலை அகற்றலாம்.

Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.

2025-12-12