சிக்கலைப் புகாரளித்தல் & தனியுரிமை

இந்த அறிக்கை Apple தயாரிப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்தப் பயன்படுத்தப்படும். உதாரணத்திற்கு, மாடல்களுக்குப் பயிற்சியளித்தல். இது உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்படும். அறிக்கை உள்ளடக்கத்தில் பதிப்புரிமைக்கு உட்பட்ட, தனிப்பட்ட அல்லது அதிமுக்கியத் தகவல்கள் இருக்கக்கூடும். அதைச் சமர்ப்பிப்பதன் மூலம், நீங்கள் பதிவேற்றும் அறிக்கையின் உள்ளடக்கம் உங்களுக்குச் சொந்தமானது அல்லது அதைப் பதிவேற்றுவதற்கு உங்களுக்கு அனுமதி உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறீர்கள்.
 

“சிக்கலைப் புகாரளித்தல்” அம்சம் உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Privacy Icon

  • புகாரளிக்கப்பட்ட சிக்கல்களைத் தீர்க்க “சிக்கலைப் புகாரளித்தல்” அம்சம் தகவல்களைச் சேகரிக்கும். Apple பீட்டா மென்பொருள் திட்டத்தில் கிடைக்கும் சில அம்சங்கள் தொடர்பான புகார்களுக்காகச் சேகரிக்கப்பட்ட தகவல்கள் உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்டுச் சேமிக்கப்படும். இந்த அறிக்கைகளை நீங்கள் சமர்ப்பிக்கும் முன்பு, திரையில் உங்கள் Apple கணக்கு காட்டப்படும். மற்ற அனைத்து அறிக்கைகளுமே Apple கணக்குடன் இணைக்கப்படாத, ரேண்டமான தனித்துவ அடையாளத் தகவலுடன் தொடர்புபடுத்தப்படும்.
  • சிக்கலை இன்னும் திறம்பட தீர்க்க உதவ, உங்கள் அறிக்கையுடன் கூடுதல் தகவல்களை நீங்கள் சமர்ப்பிக்கலாம்.
  • தயாரிப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்துவதற்கு (Apple மாடல்களுக்குப் பயிற்சியளிப்பது உட்பட) நீங்கள் சமர்ப்பிக்கும் தகவல்களை Apple பயன்படுத்தக்கூடும்.
  • ChatGPT தொடர்பான சிக்கல் குறித்து நீங்கள் புகாரளித்தால், உங்கள் புகாரை OpenAI உடன் பகிர்வதற்கு நீங்கள் தேர்வுசெய்யலாம்.
  • விஷுவல் நுண்ணறிவைப் பயன்படுத்தி Googleஇல் தேடுவது தொடர்பான சிக்கல் குறித்து நீங்கள் புகாரளித்தால், உங்கள் புகாரை Google உடன் பகிரலாம்.

எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் குறித்து Appleக்குக் கருத்து வழங்க “சிக்கலைப் புகாரளித்தல்” அம்சம் உங்களுக்கு உதவுகிறது. ஓர் அறிக்கையை நீங்கள் சமர்ப்பிக்கும்போது, கேள்விகளுக்கான பதில்கள், விளக்கங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், மெசேஜ்கள், மின்னஞ்சல்கள் போன்று நீங்கள் அறிக்கையில் வழங்கக்கூடிய தகவல்களை Apple சேகரிக்கும். சமர்ப்பிப்பதற்கு முன்பு, அறிக்கையில் சேர்க்க விரும்பாத தகவல்களும் இணைப்புகளும் இருந்தால் அவற்றை நீங்கள் மதிப்பாய்வு செய்து அகற்றலாம்.

உங்கள் சாதனத்தின் மாடல், ஆபரேட்டிங் சிஸ்டம், பதிப்பு, மொழி ஆகியவற்றையும் Apple சேகரிக்கும். நீங்கள் Apple Intelligence குறித்துச் சிக்கலைப் புகாரளிக்கும்போது, Apple Intelligence மாடலின் பதிப்பைச் சில சூழல்களில் Apple சேகரிக்கக்கூடும்.

புகாரளிக்கப்பட்ட சிக்கல்களைத் தீர்க்க உதவுவதற்கும், அம்சம் சார்ந்த மாடல்கள் உள்ளிட்ட தயாரிப்புகளையும் சேவைகளையும் உருவாக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும், பயிற்றுவிப்பதற்கும் Apple இந்தத் தகவல்களைப் பயன்படுத்தும்.

மூன்றாம் தரப்பு தொடர்பான சிக்கலைப் புகாரளித்தல்

ChatGPT நீட்டிப்பைப் பயன்படுத்தும்போது சிக்கலை எதிர்கொண்டால் நீங்கள் புகாரளித்த சிக்கல் தொடர்பான தகவல்களை, ChatGPTஐ இயக்கும் OpenAIக்கும் வழங்க நீங்கள் தனியாகத் தேர்வுசெய்யலாம். நீங்கள் கண்டறிந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு உங்கள் அறிக்கையில் இருந்தோ அதைப் பற்றியோ சில தகவல்களை OpenAIக்கு Apple வழங்கக்கூடும். தகவல்களில் உங்கள் கோரிக்கை (மற்றும் கோரிக்கையுடன் நீங்கள் இணைக்கக்கூடிய அனைத்தும்), பதில், உங்கள் சாதன வகை, தோராயமான இருப்பிடம் போன்ற உங்கள் சாதனம் பற்றிய தகவல்கள் மற்றும் உங்களின் சாதன அமைப்புகள், நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலின் வகை ஆகியவை அடங்கும். OpenAIக்குத் தகவல்களை வழங்க நீங்கள் தனியாகத் தேர்வுசெய்யும்போது மட்டுமே OpenAI உடன் அறிக்கைகளை Apple பகிரும். OpenAI குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே இந்தத் தகவல்களைத் தக்கவைக்கும். புகாரளிக்கப்பட்ட சிக்கல் மற்றும் தொடர்புடைய சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்காகவும் தீர்ப்பதற்காகவும் மட்டுமே OpenAI இந்தத் தகவல்களைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் கருத்துகள் OpenAIக்கு வழங்கப்படும்போது Apple கணக்குடன் இணைக்கப்பட்டிருக்காது, புகாரைப் பகிர்வதற்கு முன்பாக Apple உங்கள் பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் அகற்றும்.

விஷுவல் நுண்ணறிவைப் பயன்படுத்தி Googleஇல் நீங்கள் தேடும்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், நீங்கள் புகாரளிக்கும் குறை தொடர்பான தகவல்களை Googleக்குத் தனியாக வழங்கலாம். நீங்கள் கண்டறிந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு உங்கள் அறிக்கையில் இருந்தோ அதைப் பற்றியோ சில தகவல்களை Googleக்கு Apple வழங்கக்கூடும். இதில் உங்கள் கோரிக்கை (மற்றும் நீங்கள் வழங்கிய படம்), தேடல் முடிவுகள், உங்கள் ஆபரேட்டிங் சிஸ்டத்தின் வகை மற்றும் மொழி, நீங்கள் எதிர்கொண்ட சிக்கலின் வகை ஆகியவை அடங்கும். நீங்கள் Googleக்குத் தகவல்களை வழங்கத் தனியாகத் தேர்வுசெய்தால் மட்டுமே Apple Google உடன் அறிக்கைகளைப் பகிரும். Google உடன் நீங்கள் பகிரும் தகவல்கள் Googleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி நிர்வகிக்கப்படும். Googleஇன் தனியுரிமை நடைமுறைகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு https://policies.google.com/privacy?hl=ta-IN இணையதளத்தைப் பார்வையிடவும். உங்கள் கருத்துகள் Googleக்கு வழங்கப்படும்போது Apple கணக்குடன் இணைக்கப்பட்டிருக்காது, புகாரைப் பகிர்வதற்கு முன்பாக Apple உங்கள் பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் அகற்றும்.

தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய அடிப்படைச் சட்டங்கள்

பொதுவாகவே சேவைகளை வழங்கத் தேவைப்படும் அளவிற்கும், எங்கள் சட்டரீதியான கடமைகளுக்கு இணங்குவதற்காகவும் “சிக்கலைப் புகாரளித்தல்” அம்சத்திற்கான உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குகிறோம். ஒப்புதல் என்பது சட்டரீதியான அடிப்படையாக அமையும் இடங்களில், பொருந்தும் உள்ளூர் சட்டங்களின் அடிப்படையில் அதைப் பெற முயல்கிறோம். பொருந்தும் உள்ளூர் சட்டங்கள் குறிப்பிடும் இடங்களில், எங்கள் நியாயமான நலன்களின் நோக்கத்திற்காகப் புகாரில் நீங்கள் வழங்கும் தகவல்களை நாங்கள் செயலாக்குவோம், கேள்விகளுக்கான பதில்கள், விளக்கங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், மெசேஜ்கள், மின்னஞ்சல்கள், உங்கள் சாதனத்தின் மாடல், ஆபரேட்டிங் சிஸ்டத்தின் பதிப்பு, மொழி, சம்பந்தப்பட்ட Apple Intelligence மாடலின் பதிப்பு (ஏதேனும் இருந்தால்) போன்றவை இதில் அடங்கும். இதன் மூலம் நாங்கள் சட்ட உரிமைகோரல்களைப் பாதுகாக்கவும், நிறுவவும், செயல்படுத்தவும் முடியும்.

தக்கவைத்தல்

Apple சேகரித்த தரவானது நம்பகமான கூட்டாளர்களால் செயலாக்கப்பட்டுச் சேமிக்கப்படக்கூடும். நீங்கள் புகாரளிக்கும் தகவல்கள் உங்களுடன் தொடர்புபடுத்தப்படும் வகையில் ஓர் ஆண்டு வரை அல்லது சட்டரீதியான தேவைக்கு ஏற்ப சேமித்து வைக்கப்படக்கூடும்.

Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Apple இன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும், அதை www.apple.com/in/privacy தளத்தில் பார்க்கலாம்.

2025-12-12