Appleஇடம் புகாரளி & தனியுரிமை

நீங்கள் புகாரளித்த உள்ளடக்கத்தில் இருந்து சில தகவல்களை Apple செயலாக்குகிறது. தொடர்புத் தகவல்கள், படங்கள், வீடியோக்கள், சில சூழல்களில் தொடர்புடைய குறிப்பிட்ட மெசேஜ்கள் போன்றவை இதில் அடங்கும். இந்தப் புகார் உங்கள் Apple கணக்குடன் தொடர்புபடுத்தப்பட்டிருக்கும்.
 

“Appleஇடம் புகாரளி” அம்சம் உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Privacy Icon

  • தீங்கு விளைவிக்கக்கூடிய மற்றும் சட்டத்திற்குப் புறம்பான நிர்வாணப் படங்களையோ வீடியோக்களையோ நீங்கள் பெற்றால், அதனை Appleக்குப் புகாரளிக்க “Appleஇடம் புகாரளி” அம்சம் உங்களுக்கு உதவுகிறது.
  • பயிற்சி பெற்ற வல்லுநர் குழுவினால் புகார்கள் மதிப்பாய்வு செய்யப்படும், அவசியம் என Apple கருதினால் அவை சட்ட அமலாக்கத் துறையுடன் பகிரப்படும்.
  • உங்கள் உரையாடலில் இடம்பெற்றுள்ள பிறருடன் இந்தப் புகார் பற்றிய விவரங்களை Apple பகிராது.

தீங்கு விளைவிக்கக்கூடிய மற்றும் சட்டத்திற்குப் புறம்பான நிர்வாணப் படங்களையோ வீடியோக்களையோ நீங்கள் பெற்றாலோ அல்லது பார்த்தாலோ, நீங்கள் Appleக்குப் புகார் அனுப்பலாம். ஒரு புகாரைச் சமர்ப்பிக்கும்போது, அதனை விசாரணை செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் தேவையான குறைந்தபட்சத் தகவல்களை Apple சேகரித்துச் செயலாக்கும். இந்தத் தகவல்களில் இவை அடங்கலாம்:

  • உங்கள் தொடர்புத் தகவல்கள் (உங்கள் பெயர், ஃபோன் எண் போன்றவை) மற்றும் உரையாடலில் இடம்பெற்றுள்ள பிறரின் தொடர்புத் தகவல்கள்
  • நீங்கள் புகாரளிக்கும் படங்கள், வீடியோக்கள் அல்லது ஃபிரேம்கள்
  • iMessageஇல் சமர்ப்பிக்கப்பட்ட புகாராக இருந்தால், நீங்கள் புகாரளிக்கும் படங்கள் அல்லது வீடியோக்களுக்கு முன்பும் பின்பும் உள்ள சில குறிப்பிட்ட மெசேஜ்களின் உள்ளடக்கம் மற்றும் தொடர்புடைய மெட்டாடேட்டா (நேர முத்திரைகள், அனுப்புநர் தகவல் போன்றவை)
  • புகாரில் நீங்கள் வழங்கும் ஏதேனும் கூடுதல் கருத்துகள்

இந்தப் புகார் பாதுகாப்பான முறையில் Appleக்கு அனுப்பப்படுவதற்கு முன் உங்கள் சாதனத்தில் உருவாக்கப்பட்டு, என்கிரிப்ட் செய்யப்படும். புகாருக்கான அணுகல் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும், ஒவ்வொரு புகாரையும் மதிப்பாய்வு செய்யும் பயிற்சி பெற்ற வல்லுநர் குழுவினால் மட்டுமே அதை அணுக முடியும், அவசியமெனில், சட்ட அமலாக்கத் துறையுடன் அல்லது சட்டரீதியான தேவைக்கு ஏற்ப புகாரை அவர்கள் பகிர்ந்துகொள்ளலாம்.

தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய அடிப்படைச் சட்டங்கள்

பொதுவாக Apple உடனான உங்கள் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காகவும், சேவைகளை வழங்கத் தேவைப்படும் அளவிற்கும், எங்கள் சட்டரீதியான கடமைகளுக்கு இணங்குவதற்காகவும் உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குகிறோம். ஒப்புதல் என்பது சட்டரீதியான அடிப்படையாக அமையும் இடங்களில், பொருந்தும் சட்டங்களின் அடிப்படையில் அதைப் பெற முயல்கிறோம்.

தக்கவைத்தல்

சேகரிக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றத் தேவைப்படும் காலம் வரை மட்டுமே Apple தனிப்பட்ட தரவைத் தக்கவைக்கும். Appleக்குச் சமர்ப்பிக்கப்படும் புகார்களைச் சட்டப்பூர்வத் தேவைக்கு ஏற்ப இரண்டு ஆண்டுகளுக்குத் தக்கவைக்கிறோம். தக்கவைத்தல் காலத்தை மதிப்பிடும்போது, சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவைத் தக்கவைப்பது தேவையா என்று முதலில் கவனமாக ஆராய்கிறோம். தக்கவைத்தல் தேவை எனில், சட்டப்படி அனுமதிக்கப்பட்ட குறுகிய காலத்திற்கு மட்டுமே தனிப்பட்ட தரவைத் தக்கவைக்க முயல்கிறோம்.

Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.

2026-03-30