பாதுகாப்பு அம்சங்கள் & தனியுரிமை
பாதுகாப்பு அம்சங்கள் உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
![]()
- பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்தி அவசரகாலச் சேவைகளை அழைத்தாலோ மெசேஜ் அனுப்பப்பட்டாலோ பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக, நீங்கள் இருப்பிடச் சேவைகளைச் செயல்படுத்தியிருந்தாலும் செயல்படுத்தாவிட்டாலும் அவற்றுடன் உங்கள் சாதனத்தின் இருப்பிடமும் பகிரப்படக்கூடும்.
- அழைப்பு முடிந்த பிறகு, அவசரகால SOS செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கும் வகையில் உங்கள் அவசரகாலத் தொடர்புகளுக்கு உங்கள் இருப்பிடத் தகவலைக் கொண்ட ஒரு மெசேஜை உங்கள் சாதனம் அனுப்பக்கூடும்.
- சில பாதுகாப்பு அம்சங்கள் தானாகச் செயல்படுத்தப்படக்கூடும்.
அவசரகால SOS
அவசரகால SOS அம்சத்தைப் பயன்படுத்தி ஓர் அவசரகால அழைப்பைச் செய்யும்போது, டிஸ்பாட்சர் உங்களுக்கு உதவ வழிசெய்வதற்காக அந்த அழைப்புடன் உங்கள் இருப்பிடம் (நீங்கள் இருப்பிடச் சேவைகளைச் செயல்படுத்தியிருந்தாலும் செயல்படுத்தாவிட்டாலும்) மற்றும் மருத்துவ ஐடி (செயல்படுத்தியிருந்தால்) பகிரப்படக்கூடும். “மேம்படுத்தப்பட்ட அவசரகாலத் தரவுச் சேவை” உங்கள் வட்டாரத்தில் கிடைக்கிறதா என்பதை Apple சரிபார்ப்பதற்காகவும் அவசரகாலச் சேவைகளுக்குத் தரவை வழங்குவதற்காகவும் உங்கள் இருப்பிடத் தரவு மற்றும் என்கிரிப்ட் செய்த மருத்துவ ஐடி குறித்த தகவல்கள் Appleக்கு அனுப்பப்படும். உங்கள் வட்டாரத்தில் சேவை கிடைத்தால், ஒரு கூட்டாளர் Apple இடமிருந்து உங்கள் தகவல்களைப் பெற்று அவசரகாலச் சேவையை வழங்கலாம். உங்கள் மருத்துவ ஐடி தகவல்களை Appleஆல் படிக்க முடியாது. அழைப்பு முடிந்ததும் மெசேஜஸ் செயலி நிறுவல்நீக்கப்படாத பட்சத்தில், நீங்கள் அவசரகாலச் சேவைகளை அழைத்தீர்கள் என்பதைத் தெரிவிக்கும் விதமாக உங்கள் அவசரகாலத் தொடர்புகள் மற்றும் செக்-இன் தொடர்புக்கு (செக்-இன் அமர்வு செயலில் இருந்தால்) தானாகவே மெசேஜ் அனுப்பப்படும். மெசேஜ் அனுப்ப வேண்டாம் என நீங்கள் நினைத்தால் அதை ரத்துசெய்ய வேண்டும். இந்த மெசேஜில் உங்கள் தற்போதைய இருப்பிடம் இருக்கும். மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு, உங்கள் இருப்பிடம் மாறினால் அது குறித்த அறிவிப்புகளை உங்கள் அவசரகாலத் தொடர்புகள் மற்றும் செயலில் உள்ள செக்-இன் தொடர்புக்கு உங்கள் சாதனம் அனுப்பும். உங்கள் அவசரகாலத் தொடர்புகள் மற்றும் செயலில் உள்ள செக் இன் தொடர்புக்கு உங்கள் இருப்பிடத்தை அனுப்ப வேண்டாம் என நீங்கள் நினைத்தால், உங்கள் iPhone அல்லது Apple Vision Pro சாதனத்தில் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் > சிஸ்டம் சேவைகள் என்பதற்குச் சென்று “அவசரகால அழைப்புகள் & SOS” என்பதைத் தட்டி அதை ஆஃப் செய்யவும்.
அவசரகால SOS & தனியுரிமை பற்றி மேலும் அறிய www.apple.com/in/legal/privacy/data/en/emergency-sos இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.
மருத்துவ ஐடி பற்றி மேலும் அறிய அமைப்புகள் > உடல்நலம் > மருத்துவ ஐடி > அவசரகால அணுகல் என்பதற்குச் சென்று “மேலும் அறிக” என்பதைத் தட்டுங்கள்.
இருப்பிடச் சேவைகள் பற்றி மேலும் அறிய www.apple.com/in/legal/privacy/data/en/location-services இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.
சாட்டிலைட் மூலம் அவசரகால SOS
அவசரகாலச் சேவைகளைத் தொடர்புகொள்ள வேறு எந்த வழியும் கிடைக்காத விதிவிலக்கான சூழ்நிலைகளில் அவசரகாலச் சேவைகளைத் தொடர்புகொள்ள “சாட்டிலைட் மூலம் அவசரகால SOS” அம்சம் உங்களுக்கு உதவலாம். இந்தச் சேவைக்கு மெசேஜஸ் செயலி தேவை, சில இடங்களிலும் சூழ்நிலைகளிலும் அது கிடைக்காமல் இருக்கலாம்.
அவசரகாலச் சேவைகளுக்கு மெசேஜ்களை அனுப்புவதற்கு மற்றும் அதிலிருந்து மெசேஜ்களைப் பெறுவதற்கு வானம் தெளிவாகத் தெரிவதும் உங்கள் சாதனம் மற்றும் சாட்டிலைட் இடையேயான நிலையான ஒருங்கிணைப்பும் தேவை. ஒரு சாட்டிலைட் இணைப்பு என்பது வழக்கமான நெட்வொர்க் இணைப்பில் இருந்து வேறுபட்ட வழியில் செயல்படுகிறது. இதன் விளைவாக, வழக்கமான மெசேஜ்களை ஒப்பிடும்போது இவற்றை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் கூடுதல் நேரம் ஆகலாம், சேவை விட்டு விட்டுக் கிடைக்கக்கூடும்.
சில இடங்களில், நீங்கள் அவசரகாலச் சேவை மையங்களுடன் நேரடியாக மெசேஜ்களைப் பரிமாறிக்கொள்ள முடியும். உங்கள் இருப்பிடத்திற்குச் சேவையளிக்கும் அவசரகாலச் சேவை மையத்தால் மெசேஜ்களைப் பெற முடியவில்லை எனில், ஒரு மூன்றாம் தரப்பு ரிலே வழங்குநர் உங்கள் மெசேஜ்களைப் பெற்று, உங்கள் சார்பாக அவசரகாலச் சேவைகளை அழைப்பார். அமெரிக்காவில், லத்தீன் எழுத்துகளால் எழுதப்பட்ட மெசேஜ்களை மட்டுமே அவசரகாலச் சேவைகளுக்கு நேரடியாக அனுப்ப முடியும்.
மொபைல் சேவை அல்லது Wi-Fi வாய்ஸ் இணைப்பு கிடைத்தால், நீங்கள் ஃபோன் மூலம் அவசரகாலச் சேவைகளை அழைக்க வேண்டும். இருப்பினும், ஃபோன் மூலம் அழைக்கும்போது உங்கள் சாட்டிலைட் அமர்வைக் கையாண்ட அதே அவசரகாலச் சேவை வழங்குநருடன் நீங்கள் இணைக்கப்படாமல் போகலாம்.
“சாட்டிலைட் மூலம் அவசரகால SOS” அம்சம் சாட்டிலைட் சிக்னல் கிடைப்பதற்கு ஏற்ப செயல்படுவதாகும், இது தொடர்ந்து இயங்க மென்பொருள் புதுப்பிப்பு தேவைப்படலாம்.
சாட்டிலைட் மூலம் அவசரகால SOSஐப் பயன்படுத்தி நீங்கள் மெசேஜ் அனுப்பும்போது, உங்கள் மெசேஜ்கள் என்கிரிப்ட் செய்யப்பட்ட வடிவில் அனுப்பப்பட்டு Appleஆல் டீகிரிப்ட் செய்யப்படும், பின்னர் தொடர்புடைய அவசரகாலச் சேவை வழங்குநர் அல்லது மூன்றாம் தரப்பு ரிலே வழங்குநருக்கு அனுப்பப்படும். அவசரகாலச் சேவை மையங்கள் மற்றும் ரிலே வழங்குநர் தங்களின் சேவைகளை மேம்படுத்துவதற்காகவும் பொருந்தும் சட்டத்திற்கு இணங்கவும் உங்கள் மெசேஜ்களைத் தக்கவைக்கலாம்.
உள்ளூர் அவசரகாலச் சேவை நிறுவனங்களுக்கு உங்கள் மெசேஜ்களை அனுப்புவதற்காகவும், உங்களுக்கு உதவி செய்ய வருபவர்கள் நீங்கள் இருக்கும் இடத்தை அடைய உதவுவதற்காகவும் “சாட்டிலைட் மூலம் அவசரகால SOS” அம்சத்தைப் பயன்படுத்தும்போது Apple, அவசரகாலச் சேவைகளுக்கு மெசேஜ் அனுப்பும் சேவை வழங்குநர்கள், மூன்றாம் தரப்பு ரிலே வழங்குநர் ஆகியோருடன் உங்கள் இருப்பிடம் பகிரப்படும். “இடம் அறி” அம்சத்தில் சாட்டிலைட் வழியாகப் பகிரப்படும் இருப்பிடங்கள் முழுமையாக என்கிரிப்ட் செய்யப்பட்ட வடிவத்தில் அனுப்பப்படும், Apple அதை அணுக முடியாது.
அவசரகாலத்தின்போது, உங்கள் இருப்பிடம் மற்றும் அவசரகால அழைப்பின் வகை பற்றிய தகவலுடன் அவசரகாலச் சேவைகளுடனான உங்கள் உரையாடலின் டிரான்ஸ்கிரிப்டையும், முன்பு தேர்ந்தெடுத்த அவசரகாலத் தொடர்புகளுடன் நீங்கள் பகிரலாம். திரையின் மேற்புறம் உள்ள “பகிர்வதை நிறுத்து” என்பதைத் தட்டி உங்கள் அமர்வின் டிரான்ஸ்கிரிப்டைப் பகிர்வதை எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.
அவசரகால SOS நேரலை வீடியோ
அவசரகால அழைப்பின்போது, அவசரகாலச் சேவைகளின் கோரிக்கையின் பேரில் அவசரகாலச் சேவைகளுடன் நேரலை வீடியோவைப் பகிரலாம் அல்லது மீடியாவைப் பதிவேற்றலாம். நீங்கள் “அழைப்பை முடி” என்பதைத் தட்டி, பின் “கேமராவைப் பகிர்வதை நிறுத்து” அல்லது “அழைப்பை முடி” என்பதைத் தட்டி எப்போது வேண்டுமானாலும் உங்கள் நேரலை வீடியோ பகிர்வை நிறுத்தலாம். நீங்கள் மீடியா பதிவேற்றத்தைத் தேர்வுசெய்திருந்தால், அவசரகால அழைப்பைத் துண்டித்த பின்னரும் உங்கள் உள்ளடக்கம் தொடர்ந்து பதிவேற்றப்படும். பகிர்ந்த மீடியா உள்ளடக்கத்தை அவசரகாலச் சேவைகள் பதிவுசெய்யலாம் அல்லது சேமிக்கலாம். நேரலை வீடியோ மற்றும் பதிவேற்றப்படும் மீடியா முழுமையாக என்கிரிப்ட் செய்யப்பட்டு அனுப்பப்படும், Apple அதைப் பார்க்கவோ அணுகவோ முடியாது.
இந்த அம்சத்தைப் பயன்படுத்த நீங்கள் “அவசரகால அழைப்புகள் & SOS” என்பதை ஆன் செய்திருக்க வேண்டும். அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் > சிஸ்டம் சேவைகள் என்பதற்குச் சென்று “அவசரகால அழைப்புகள் & SOS” என்பதைத் தட்டி இதை ஆன் செய்யலாம்.
அவசரகால SOS நேரலை வீடியோ அம்சம் சில இடங்களிலும் சூழ்நிலைகளிலும் கிடைக்காமல் போகலாம்.
கீழே விழுதலைக் கண்டறிதல்
Apple Watch SE அல்லது Apple Watch Series 4 அல்லது பிந்தைய மாடல்களை அணிந்திருக்கும்போது நீங்கள் கீழே விழுவதை அது கண்டறிந்தால், தேவைப்பட்டால் அவசரகாலச் சேவைகளைத் தொடர்புகொள்ள “கீழே விழுதலைக் கண்டறிதல்” விழிப்பூட்டல் உங்களுக்கு உதவலாம். நீங்கள் விரும்பினால் அவசரகாலச் சேவைகளைத் தொடர்புகொள்ளலாம் அல்லது விழிப்பூட்டலை நிராகரிக்கலாம். நீங்கள் அசைவதை உங்கள் Apple Watch கண்டறிந்தால், விழிப்பூட்டலுக்கு நீங்கள் பதிலளிக்கும் வரை அது காத்திருக்கும், தானாகவே அவசரகாலச் சேவைகளை அழைக்காது. ஒரு நிமிடத்திற்கும் அதிகமாக நீங்கள் அசைவின்றி இருப்பதை Apple Watch கண்டறிந்தால், உங்கள் மணிக்கட்டைத் தொடுவது போன்ற உணர்வை ஏற்படுத்தி ஓர் ஒலியை இயக்குவதோடு 30 விநாடிகளுக்கான கவுன்ட்டவுனையும் தொடங்கும். கவுன்ட்டவுன் முடிவடைந்ததும், Apple Watch தானாகவே அவசரகாலச் சேவைகளையும் உங்களின் அவசரநிலைத் தொடர்புகளையும் தொடர்புகொள்ளும்.
தானாக டயல் செய்த அழைப்பு இணைக்கப்பட்டதும், உங்கள் Apple Watch நீங்கள் கீழே விழுந்ததைக் கண்டறிந்துள்ளது என்ற தகவலை அவசரகாலச் சேவைகளுக்குத் தெரிவிக்கும் வகையில் ஓர் ஆடியோ மெசேஜை உங்கள் Apple Watch பிளே செய்யும், பின்னர் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை மதிப்புகளில் உங்கள் தற்போதைய இருப்பிடத்தைப் பகிரும். இந்த அழைப்பு நீங்கள் இருப்பிடச் சேவைகளைச் செயல்படுத்தியிருந்தாலும் செயல்படுத்தாவிட்டாலும் உங்கள் இருப்பிடத்தைப் பகிரும். அவசர அழைப்பின்போது பகிர்வதற்கான மருத்துவ ஐடியை நீங்கள் ஏற்கெனவே செயல்படுத்தியிருந்தால், அவசரகாலச் சேவைகளுடன் உங்கள் மருத்துவ ஐடி தானாகவே பகிரப்படும் (அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும்). அழைப்பு முடிந்ததும் மெசேஜஸ் செயலி நிறுவல்நீக்கப்படாத பட்சத்தில், உங்கள் வாட்ச் நீங்கள் கீழே விழுந்ததைக் கண்டறிந்து அவசரகாலச் சேவைகளை அழைத்தது என்பதை உங்கள் அவசரகாலத் தொடர்புகள் மற்றும் செக்-இன் தொடர்புக்கு (செக்-இன் அமர்வு செயலில் இருந்தால்) தெரிவிக்கும் விதத்தில் உங்கள் இருப்பிடத்துடன் மெசேஜ் அனுப்பும் முன்பாக 10-விநாடி கவுன்ட்டவுனை உங்கள் Apple Watch தொடங்கும். இந்த 10-விநாடி கவுன்ட்டவுனுக்குள் உங்கள் அவசரகாலத் தொடர்புகள் மற்றும் செயலில் உள்ள செக்-இன் தொடர்புக்கு அனுப்பும் மெசேஜை நீங்கள் ரத்துசெய்யலாம். Apple Watch உங்கள் அவசரகாலத் தொடர்புகளை உங்கள் மருத்துவ ஐடியில் இருந்து பெறும்.
நீங்கள் கீழே விழுந்து அசைவின்றி உள்ளீர்கள் எனக் கண்டறியப்பட்டு, தானாக டயல் செய்யப்பட்ட அழைப்பை அவசரகாலச் சேவைகளுடன் இணைக்க முடியவில்லை எனில், “சாட்டிலைட் மூலம் அவசரகால SOS” இணைப்பைப் பயன்படுத்தி குறிப்பிட்ட தகவல்களை (எடுத்துக்காட்டாக, உங்கள் இருப்பிடம், பேட்டரி ஆயுள், அவசரகாலச் சூழலில் வகை) அவசரகாலச் சேவைகளுக்கு மெசேஜஸ் செயலியைப் பயன்படுத்தி தானாகவே மெசேஜ் அனுப்ப உங்கள் iPhone முயலும். நீங்கள் மெசேஜஸ் செயலியை நிறுவல்நீக்கவில்லை எனில், உங்கள் சார்பாக உங்கள் அவசரகாலத் தொடர்புகளுக்கும் செயலில் உள்ள செக்-இன் தொடர்புக்கும் குறிப்பிட்ட சில தகவல்கள் (எடுத்துக்காட்டாக, உங்கள் இருப்பிடம், அவசரகாலச் சூழலின் வகை) அனுப்பப்படும்.
உங்கள் Apple Watch கேட்கும் போது நீங்கள் கீழே விழவில்லை என்று பதிலளிக்காவிட்டால், கீழே விழுந்த தகவல்கள் உங்கள் உடல்நலம் செயலியில் தானாகவே பதிவுசெய்யப்படும். நீங்கள் இதுவரை விழுந்த விவரங்களைப் பார்க்க உங்கள் iPhoneஇல் உள்ள உடல்நலம் செயலியைத் திறந்து உலாவுக > பிற தரவுகள் > விழுந்த எண்ணிக்கை என்பதற்குச் செல்லுங்கள்.
உங்கள் iPhoneஇல் எனது வாட்ச் > அவசரகால SOS, என்பதற்குச் சென்று “கீழே விழுதலைக் கண்டறிதல்” என்பதைத் தட்டி ஆன் அல்லது ஆஃப் செய்து Apple Watch செயலியில் “கீழே விழுதலைக் கண்டறிதல்” அம்சத்தைச் செயல்படுத்தலாம் அல்லது முடக்கலாம். “கீழே விழுதலைக் கண்டறிதல்” அம்சம் ஆன் செய்யப்பட்டிருந்தால், நீங்கள் “எப்போதும் ஆன்” அல்லது “உடற்பயிற்சியின்போது மட்டும்” ஆகிய விருப்பங்களைத் தட்டிச் செயல்படுத்தலாம். உங்கள் Apple Watchஐ அமைக்கும்போது அல்லது உடல்நலம் செயலியில் நீங்கள் உங்கள் வயதைப் பதிவுசெய்திருந்து, உங்கள் வயது 55 அல்லது அதற்கு மேல் இருந்தால், “கீழே விழுதலைக் கண்டறிதல்” அம்சம் தானாக ஆன் செய்யப்படும். நீங்கள் 18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர் எனில், உடற்பயிற்சியின்போது மட்டுமே “கீழே விழுதலைக் கண்டறிதல்” அம்சம் தானாக ஆன் செய்யப்படும். அவசரகாலச் சேவைகளைத் தானாக அழைக்க உங்கள் வாட்ச்சில் “மணிக்கட்டு கண்டறிதல்” அம்சம் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். Apple Watchஇல், அமைப்புகள் > பாஸ்கோடு என்பதற்குச் சென்று “மணிக்கட்டு கண்டறிதல்” என்பதைத் தட்டி இதை ஆன் செய்யுங்கள். 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே “கீழே விழுதலைக் கண்டறிதல்” அம்சத்தைப் பயன்படுத்த முடியும். Apple Watchஆல் அனைத்துச் சூழ்நிலைகளிலும் கீழே விழுதலைக் கண்டறிய முடியாது.
விபத்துக் கண்டறிதல்
iOS 16 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இயங்கும் iPhone 14 அல்லது அதற்குப் பிந்தைய மாடல்கள் (அனைத்து மாடல்களும்), watchOS 9 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இயங்கும் Apple Watch Series 8 அல்லது அதற்குப் பிந்தைய மாடல்கள், Apple Watch SE (2nd generation), Apple Watch Ultra அல்லது அதற்குப் பிந்தைய மாடல்கள் ஆகியவை ஒரு மோசமான கார் விபத்தைக் கண்டறிந்தால், அவசரகாலச் சேவைகளை அழைக்க ஒரு விழிப்பூட்டல் காட்டப்படும். நீங்கள் விழிப்பூட்டலை நிராகரிக்கலாம் அல்லது அவசரகாலச் சேவைகளைத் தொடர்புகொள்வதைத் தொடரலாம். நீங்கள் நிராகரிக்கும் வரை, உங்கள் சாதனம் 10 விநாடிகளுக்கு அலாரத்தை இயக்கி விழிப்பூட்டலை டிஸ்ப்ளேவில் காட்டும். அடுத்த 30 விநாடிகள் கவுன்ட்டவுனிற்கும் நீங்கள் பதிலளிக்கவில்லை எனில், உங்கள் சாதனம் அவசரகாலச் சேவைகளுக்கு அழைப்பை மேற்கொள்ளும்.
தானாக டயல் செய்த அழைப்பு இணைக்கப்பட்டதும், உங்கள் சாதனம் ஒரு கார் விபத்தைக் கண்டறிந்துள்ளது என்ற தகவலை அவசரகாலச் சேவைகளுக்குத் தெரிவிக்கும் வகையில் ஓர் ஆடியோ மெசேஜை உங்கள் சாதனம் பிளே செய்யும், பின்னர் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை மதிப்புகளில் உங்கள் தற்போதைய இருப்பிடத்தைப் பகிரும். இந்த அழைப்பு நீங்கள் இருப்பிடச் சேவைகளைச் செயல்படுத்தியிருந்தாலும் செயல்படுத்தாவிட்டாலும் உங்கள் இருப்பிடத்தைப் பகிரும். அவசர அழைப்பின்போது பகிர்வதற்கான மருத்துவ ஐடியை நீங்கள் ஏற்கெனவே செயல்படுத்தியிருந்தால், அவசரகாலச் சேவைகளுடன் உங்கள் மருத்துவ ஐடி தானாகவே பகிரப்படும் (அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும்). அழைப்பு முடிந்ததும் மெசேஜஸ் செயலி நிறுவல்நீக்கப்படாத பட்சத்தில், உங்கள் சாதனம் ஒரு கார் விபத்தைக் கண்டறிந்து அவசரகாலச் சேவைகளை அழைத்தது என்பதை உங்கள் அவசரகாலத் தொடர்புகள் மற்றும் செக்-இன் தொடர்புக்கு (செக்-இன் அமர்வு செயலில் இருந்தால்) தெரிவிக்கும் விதத்தில் உங்கள் இருப்பிடத்துடன் மெசேஜ் அனுப்பும் முன்பாக 10-விநாடி கவுன்ட்டவுனை உங்கள் சாதனம் தொடங்கும். இந்த 10-விநாடி கவுன்ட்டவுனுக்குள் உங்கள் அவசரகாலத் தொடர்புகள் மற்றும் செயலில் உள்ள செக்-இன் தொடர்புக்கு அனுப்பும் மெசேஜை நீங்கள் ரத்துசெய்யலாம். உங்கள் சாதனம் உங்கள் அவசரகாலத் தொடர்புகளை உங்கள் மருத்துவ ஐடியில் இருந்து பெறும். அவசரகாலச் சேவைகளுக்கும் செயலில் உள்ள செக்-இன் தொடர்புகளுக்கும் தகவல்களைத் தெரிவித்த பிறகு, தொடர்ந்து அவசரகாலத் தொடர்புகளைத் தொடர்புகொள்ளுதல், மருத்துவ ஐடி தகவல்களைத் திறத்தல், விழிப்பூட்டலை நிராகரித்தல் ஆகிய விருப்பங்களை உங்கள் சாதனம் காட்டும். iPhone மற்றும் Apple Watch சாதனங்களால் சில கார் விபத்துகளைக் கண்டறிய முடியாமல் போகலாம். விபத்து நடந்துள்ளதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க இருப்பிடத் தகவல்கள் பயன்படுத்தப்படக்கூடும்.
நீங்கள் கார் விபத்தில் சிக்கி அசைவின்றி உள்ளதாகக் கண்டறியப்பட்டு, தானாக டயல் செய்யப்பட்ட அழைப்பை அவசரகாலச் சேவைகளுடன் இணைக்க முடியவில்லை எனில், “சாட்டிலைட் மூலம் அவசரகால SOS” இணைப்பைப் பயன்படுத்தி குறிப்பிட்ட சில தகவல்களை (எடுத்துக்காட்டாக, உங்கள் இருப்பிடம், பேட்டரி அளவு, அவசரகாலச் சூழலின் வகை) அவசரகாலச் சேவைகளுக்கு உங்கள் iPhone தானாகவே மெசேஜ் அனுப்ப முயலும். நீங்கள் மெசேஜஸ் செயலியை நிறுவல்நீக்கவில்லை எனில், உங்கள் சார்பாக உங்கள் அவசரகாலத் தொடர்புகளுக்கும் செயலில் உள்ள செக்-இன் தொடர்புக்கும் குறிப்பிட்ட சில தகவல்கள் (எடுத்துக்காட்டாக, உங்கள் இருப்பிடம், அவசரகாலச் சூழலின் வகை) அனுப்பப்படும்.
அமைப்புகள் > அவசரகால SOS என்பதற்குச் சென்று “தீவிர விபத்தைக் கண்டறியும்போது அழை” என்பதைத் தட்டி அம்சத்தை ஆன் அல்லது ஆஃப் செய்வதன் மூலம் அல்லது உங்கள் iPhoneஇல் உள்ள Apple Watch செயலியில் எனது வாட்ச் > அவசரகால SOS என்பதற்குச் சென்று “தீவிர விபத்தைக் கண்டறியும்போது அழை” என்பதைத் தட்டி ஆன் அல்லது ஆஃப் செய்வதன் மூலம் “விபத்துக் கண்டறிதல்” அம்சத்தை நீங்கள் முடக்கலாம் அல்லது மீண்டும் செயல்படுத்தலாம்.
உங்கள் iPhoneஇல் நிறுவப்பட்டுள்ள மூன்றாம் தரப்புச் செயலியுடன் “விபத்துக் கண்டறிதல்” தரவுகளைப் பகிர்வதற்கும் நீங்கள் தேர்வுசெய்யலாம். தரவை அணுக நீங்கள் அனுமதி வழங்கியிருந்து, கார் விபத்து ஏற்பட்டால் அதைப் பற்றி மூன்றாம் தரப்பிற்குத் தானாகத் தெரிவிக்கப்படும், அதில் இருப்பிடத் தரவுகள் இருக்கக்கூடும்.
ஒரு கார் விபத்தைக் கண்டறிந்ததும் அவசரகாலச் சேவைகளை அழைக்கும்படி உங்கள் iPhoneக்கு நீங்கள் அனுமதி வழங்கியிருந்தால், மூன்றாம் தரப்பிற்குத் தெரிவிப்பதற்கு முன்னர் விபத்து குறித்து அவசரகாலச் சேவைகளுக்கு அது டயல் செய்யும். ஒரு கார் விபத்தைக் கண்டறிந்ததும் அவசரகாலச் சேவைகளை அழைக்கும்படி உங்கள் iPhoneக்கு நீங்கள் அனுமதி வழங்கியிருந்தால், விபத்து கண்டறியப்படும்போது “மூன்றாம் தரப்புப் பகிர்தல்” அம்சம் ஆன் செய்யப்பட்டிருந்தால், விபத்து கண்டறியப்பட்டது குறித்தும், மூன்றாம் தரப்புடன் தரவு பகிரப்பட்டது குறித்தும், முடிந்தால் மூன்றாம் தரப்புச் செயலியை நீங்கள் தொடர்புகொள்ள வேண்டும் என்றும் ஒரு விழிப்பூட்டலை உங்கள் சாதனம் உங்களுக்கு அனுப்பும்.
“விபத்துக் கண்டறிதல்” தரவுகளை மூன்றாம் தரப்புடன் பகிர்வதா இல்லையா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். உங்கள் iPhoneஇல் இதைச் செய்ய, அமைப்புகள் > அவசரகால SOS என்பதற்குச் சென்று “விபத்து குறித்து செயலியுடன் பகிர்” என்பதைத் தட்டி ஆன் செய்யவும்.
மேம்பட்ட எச்சரிக்கைகள்
மேம்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கைகள் நிலநடுக்கம், வெள்ளம் போன்ற அபாய நிகழ்வுகள் ஏற்படும்போது அவற்றை உங்களுக்குத் தெரிவிக்க உங்கள் iPhone மற்றும் Watchஇல் பாதுகாப்பு குறித்த எச்சரிக்கைகளை வழங்குகிறது. Wi‑Fi, Bluetooth போன்ற கிடைக்கக்கூடிய இணைப்பு மூலமாகவும், செல்லுலார் (கிடைக்கும்பட்சத்தில்) வழியாகவும் இந்த எச்சரிக்கைகள் அனுப்பப்படுகின்றன. Apple நிறுவனம் உங்கள் சாதனத்தின் இருப்பிடத்தைக் கண்டறிந்து உங்கள் தற்போதைய வட்டாரத்திற்கு, மேம்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கைகளை வழங்குகிறது. வட்டாரம் என்பது ஒரு நாடாக இருக்கலாம் அல்லது சில நாடுகளுக்கு (அமெரிக்கா போன்றவை) வட்டாரம் என்பது பல மாநிலங்கள் சேர்ந்த ஒரு குழுவாக இருக்கலாம். உங்கள் Apple சாதனம் இந்த வட்டாரத்துடன் தொடர்புபடுத்தப்படலாம். உங்கள் சாதன இருப்பிடம் குறித்த தகவல்களை Apple சேமிக்காது.
மேம்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கைகள் இயல்பாகவே ஆன் செய்யப்பட்டிருக்கும். அமைப்புகள் > அறிவிப்புகள் > மேம்பட்ட எச்சரிக்கைகள் > மேம்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கைகள் என்பதற்குச் சென்று, மேம்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கைகளை முடக்கலாம் அல்லது மீண்டும் இயக்கலாம். பின்னர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மேம்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கை வகைகளைத் தட்டுவதன் மூலம் அவற்றை ஆன் அல்லது ஆஃப் செய்யலாம். Apple அனுப்பும் மேம்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கைகள், உங்கள் உள்ளூர் அரசாங்கம் அனுப்பும் அரசாங்க எச்சரிக்கையைவிடத் தோற்றத்திலும் வழங்கும் தகவல்களிலும் வேறுபட்டிருக்கும்.
மேம்பட்ட பாதுகாப்பு எச்சாரிக்கைகள் உரிய நேரத்தில் கிடைப்பதற்கும் நம்பகத்தன்மையையுடன் இருப்பதற்கும் “எச்சரிக்கை கிடைப்பதை மேம்படுத்துங்கள்” அம்சம் உங்களின் தோராயமான இருப்பிடத்தைப் பயன்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, “எச்சரிக்கை கிடைப்பதை மேம்படுத்துங்கள்” அம்சம் ஆன் செய்யப்பட்டிருக்கும்போது, நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கைகள் விரைவாக அனுப்பப்படும், மேலும் அவை நம்பகத்தன்மையுடனும் இருக்கும். உங்களின் தோராயமான இருப்பிடத்தை Apple சேமிக்காது. அமைப்புகள் > அறிவிப்புகள் > மேம்பட்ட எச்சரிக்கைகள் > மேம்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கைகள் > எச்சரிக்கை கிடைப்பதை மேம்படுத்துங்கள் என்பதற்குச் சென்று “எச்சரிக்கை கிடைப்பதை மேம்படுத்துங்கள்” அம்சத்தை இயக்கலாம்.
மேம்பட்ட எச்சரிக்கைகளைப் பெற, நீங்கள் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் > சிஸ்டம் சேவைகள் > விழிப்பூட்டல்கள் & சுருக்கவழிகளின் தன்னியக்கங்கள் இயக்கப்பட வேண்டும்.
திசைகாட்டி வேபாயிண்ட்கள்
“திசைகாட்டி” செயலியைப் பயன்படுத்தி உங்கள் தற்போதைய இருப்பிடத்தை வேபாயின்ட்டாக நீங்கள் சேர்க்கலாம். அதன் மூலம் நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு திசைகாட்டி வேபாயின்ட்டிற்குமான தொலைவையும் திசையையும் உங்களால் பார்க்க முடியும். கூடுதலாக, திசைகாட்டி செயலியால் இரண்டு வேபாயின்ட்களைத் தானாகவே உருவாக்க முடியும். மொபைல் கவரேஜுடன் கடைசியாகக் கண்டறியப்பட்ட இடத்தைக் கணக்கிடும் “கடைசி மொபைல் நெட்வொர்க் இணைப்பு வேபாயின்ட்”, அவசரகால அழைப்பைச் செய்ய முடியும் வகையில் ஒரு வழித்தடத்தில் கிடைக்கக்கூடிய நெட்வொர்க் வழங்குநரின் நெட்வொர்க்குடன் உங்கள் iPhone அல்லது Apple Watch கடைசியாக எந்த இடத்தில் இணைந்தது என்பதைக் கணக்கிடும் “கடைசி அவசரகால அழைப்பு வேபாயின்ட்” ஆகியவை இதிலடங்கும். “கடைசி மொபைல் நெட்வொர்க் இணைப்பு வேபாயின்ட்” அல்லது “கடைசி அவசரகால அழைப்பு வேபாயின்ட்” உருவாக்கப்படுவதற்கு, உங்கள் சாதனத்தில் “முக்கிய இருப்பிடங்கள்” அம்சம் செயல்படுத்தப்பட்டிருப்பதுடன் திசைகாட்டி செயலியில் “துல்லியமான இருப்பிடம்” அம்சமும் ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும். திசைகாட்டி செயலியில் உள்ள வேபாயின்ட்டைத் தேர்ந்தெடுத்து, திரையின் கீழ்ப்பகுதிக்கு ஸ்க்ரால் செய்து “வேபாயின்ட்டை நீக்கு” என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் திசைகாட்டி செயலியில் நீங்கள் உருவாக்கும் திசைகாட்டி வேபாயின்ட்களை நீக்கலாம்.
பேக்டிராக்
குறிப்பிட்ட சில பகுதிகளில் நீங்கள் கடந்து வந்த பாதையைக் கண்டறிவதற்கு உதவி தேவைப்படும்போது, பாதுகாப்பு நோக்கங்களுக்காக Apple Watchஇல் உள்ள திசைகாட்டி செயலியும் ஒரு சில மூன்றாம் தரப்புச் செயலிகளும் உங்கள் சமீபத்திய இருப்பிடத் தகவல்களுக்கான ஒரு முறை அணுகலை உங்களிடம் கோரலாம். இந்த இடங்களுக்கான தகவல்கள் சில சூழ்நிலைகளில் (உதாரணத்திற்கு, உங்கள் வீடு, நகர்ப்புற பகுதிகள் போன்று பரிச்சியமான இடங்களுக்கு அருகில் நீங்கள் இருந்தால்) கிடைக்காமல் போகலாம். இந்த அம்சங்களை நீங்கள் பயன்படுத்த வேண்டுமெனில், உங்கள் சாதனத்தில் “முக்கிய இருப்பிடங்கள்” அம்சம் செயல்படுத்தப்பட்டிருப்பதுடன் செயலியில் “துல்லியமான இருப்பிடம்” அம்சமும் ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
பிற தகவல்கள்
ஒரு சில சாதனங்கள், வட்டாரங்கள் அல்லது மொழிகளில் சில பாதுகாப்பு அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம். சில வட்டாரங்கள் மற்றும் நாடுகள் பல அவசரகாலச் சேவை எண்களை வைத்திருக்கும். இந்த வட்டாரங்களில், “கீழே விழுதலைக் கண்டறிதல்” விழிப்பூட்டல்களை அனுப்ப ஆம்புலன்ஸ் சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ள எண்ணை Apple Watch அழைக்கும்.
தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய அடிப்படைச் சட்டங்கள்
சேவைகளை வழங்கத் தேவைப்படும் அளவிற்கும், எங்கள் சட்டரீதியான கடமைகளுக்கு இணங்குவதற்காகவும் “அவசரகால SOS” மற்றும் “சாட்டிலைட் மூலம் அவசரகால SOS” இணைப்பு மூலம் உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குகிறோம். ஒப்புதல் என்பது சட்டரீதியான அடிப்படையாக அமையும் இடங்களில், பொருந்தும் உள்ளூர் சட்டங்களின் அடிப்படையில் அதைப் பெற முயல்கிறோம். பொருந்தும் உள்ளூர் சட்டங்கள் குறிப்பிடும் இடங்களில், தனிப்பட்ட தரவின் பின்வரும் வகைகளை எங்களின் நியாயமான நலன்களின் நோக்கத்திற்காக அதாவது அவசரகாலச் சேவைகளை வழங்குவதற்கும், மோசடி அல்லது குற்றச் செயலைத் தடுப்பதற்கும், சேவைகளை மேம்படுத்துவதற்கும், அவசரகால SOS, சாட்டிலைட் அமைப்புகள் மற்றும் கட்டமைப்புகள் மூலமான அவசரகால SOS ஆகியவற்றைப் பராமரிக்க உதவுவதற்கும் செயலாக்குகிறோம்:
- உங்கள் இருப்பிடம்
- அவசரகாலச் சேவைகளுடன் தொடர்புகொள்ளப்பட்ட நேர அளவு, உள்ளடக்கம் போன்ற உங்கள் அமர்வுகள் குறித்த தகவல்கள்
- நீங்கள் தேர்ந்தெடுத்த அவசரகாலத் தொடர்புகள்
தக்கவைத்தல்
Appleஇன் தனியுரிமைக் கொள்கை அல்லது எங்கள் சேவை தொடர்பான தனியுரிமை அறிக்கையில் விவரிக்கப்பட்டபடி சேகரிக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றத் தேவைப்படும் காலம் வரை அல்லது சட்டப்படி தேவைப்படும் காலம் வரை மட்டுமே Apple தனிப்பட்ட தரவைத் தக்கவைக்கும். தக்கவைத்தல் காலத்தை மதிப்பிடும்போது, சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவைத் தக்கவைப்பது தேவையா என்று முதலில் கவனமாக ஆராய்கிறோம். தக்கவைத்தல் தேவை எனில், முடிந்த வரை சட்டப்படி அனுமதிக்கப்பட்ட குறுகிய காலத்திற்கு மட்டுமே தனிப்பட்ட தரவைத் தக்கவைக்க முயல்கிறோம்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2025-12-12