சுருக்கவழிகள் பகிர்வு & தனியுரிமை

சுருக்கவழிகள் செயலி உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


கேலரிக்கு வெளியில் இருந்து நீங்கள் பெறும் சுருக்கவழிகளை நீங்கள் மறுஆய்வு செய்ய வேண்டும்

இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் அல்லது பிறரால் உங்களுடன் பகிரப்படும் சுருக்கவழிகளை Apple மதிப்பாய்வு செய்யாது, அவற்றின் மீது Appleக்கு எந்தக் கட்டுப்பாடும் இருக்காது, அந்தச் சுருக்கவழிகளின் உள்ளடக்கத்திற்கோ செயல்பாட்டிற்கோ எந்தப் பொறுப்பும் ஏற்காது. இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் அல்லது உங்களுடன் பகிரப்படும் சுருக்கவழிகள் நீங்கள் எதிர்பார்த்தபடி செயல்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்த நீங்கள் கூடுதல் கவனத்துடன் அவற்றை மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

உங்கள் இருப்பிடம் (துல்லியமானது அல்லது தோராயமானது), தொடர்புகள், உடல்நலத் தரவு, பேமெண்ட் தகவல் அல்லது உங்கள் ஆவணங்களில் உள்ள உள்ளடக்கங்கள் போன்ற உங்கள் தனிப்பட்ட தரவுகளை எந்தெந்தச் சுருக்கவழிகள் அணுகலாம் என்பதை உங்களால் கட்டுப்படுத்த முடியும். ஒரு சுருக்கவழியின் விவரங்கள் பிரிவில் அந்தச் சுருக்கவழியால் அணுகப்படும் தரவை நீங்கள் மறுஆய்வு செய்யலாம் மற்றும் கட்டுப்படுத்தலாம்.

நீங்கள் பகிரும் சுருக்கவழிகள் Appleக்கு அனுப்பப்படும்

நீங்கள் ஒரு சுருக்கவழியை உருவாக்கிப் பகிர்ந்தால், உங்கள் வழிகாட்டுதலின்படி பகிர்வைச் செயல்படுத்துவதற்காக அந்தச் சுருக்கவழியும் அதில் அடங்கியுள்ள உள்ளடக்கமும் Appleக்கு அனுப்பப்படும். பகிரப்படும் இணைப்பிற்கான அணுகலைப் பெறுபவர்களுக்குச் சுருக்கவழியும் அதன் உள்ளடக்கங்களும் கிடைக்கும். நீங்கள் பகிர்ந்த சுருக்கவழி மற்றும் அதில் அடங்கியுள்ள உள்ளடக்கங்களின் நகலை அவர்கள் நகலெடுக்கலாம், சேமிக்கலாம், திருத்தலாம், மீண்டும் பகிரலாம். உங்களிடம் போதிய உரிமைகள் இல்லாத உள்ளடக்கங்களைக் கொண்ட சுருக்கவழிகள் அல்லது வேறொருவரின் உரிமைகள் அல்லது சட்டத்தை மீறும் சுருக்கவழிகளை நீங்கள் உருவாக்கவோ பகிரவோ கூடாது. நீங்கள் பகிரும் சுருக்கவழிகளை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று Appleக்கு எந்தக் கடமையும் இல்லை, இருப்பினும் நீங்கள் பகிரும் சுருக்கவழிகளை Apple மதிப்பாய்வு செய்யலாம், முடக்கலாம் அல்லது அகற்றலாம்.

சுருக்கவழிகளை மேம்படுத்துவதற்கு உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தாத வகையில் பகிர்ந்த சுருக்கவழிகள் (எ.கா., பகிர்ந்த சுருக்கவழிகளின் எண்ணிக்கை) பற்றிய தொகுக்கப்பட்ட தகவல்களையும் Apple சேகரிக்கும்.

சுருக்கவழிகள் செயலியின் அமைப்புகளில் சுருக்கவழிகள் பகிர்வைச் செயல்படுத்துவதற்கான விருப்பம் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

iCloudஐப் பயன்படுத்தி உங்கள் சாதனங்களில் சுருக்கவழிகளை ஒத்திசைத்தல். சுருக்கவழிகள் ஒத்திசைக்கப்பட வேண்டாம் என நீங்கள் நினைத்தால், உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனங்களில் அமைப்புகள் > [உங்கள் பெயர்] > iCloud > iCloudஇல் சேமிக்கப்பட்டவை > அனைத்தையும் காட்டு என்பதற்குச் சென்று “சுருக்கவழிகள்” என்பதைத் தட்டி ஆஃப் செய்து அதை முடக்கலாம் அல்லது அமைப்புகள் > செயலிகள் > சுருக்கவழிகள் என்பதற்குச் சென்று “iCloud ஒத்திசைவு” என்பதைத் தட்டி ஆஃப் செய்து அதை முடக்கலாம். Macஇல், சிஸ்டம் அமைப்புகள் > [உங்கள் பெயர்] > iCloud > iCloudஇல் சேமிக்கப்பட்டுள்ளவை > அனைத்தையும் காட்டு என்பதற்குச் சென்று “சுருக்கவழிகள்” என்பதைத் தேர்வுநீக்கவும் அல்லது சுருக்கவழிகள் செயலியில் அமைப்புகளுக்குச் சென்று “iCloud ஒத்திசைவு” என்பதைத் தேர்வுநீக்கவும்.

Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி சேகரிக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றத் தேவைப்படும் காலம் வரை அல்லது சட்டப்படி தேவைப்படும் காலம் வரை மட்டுமே Apple தனிப்பட்ட தரவைத் தக்கவைக்கும். தக்கவைத்தல் காலத்தை மதிப்பிடும்போது, சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவைத் தக்கவைப்பது தேவையா என்று முதலில் கவனமாக ஆராய்கிறோம். தக்கவைத்தல் தேவை எனில், முடிந்த வரை சட்டப்படி அனுமதிக்கப்பட்ட குறுகிய காலத்திற்கு மட்டுமே தனிப்பட்ட தரவைத் தக்கவைக்க முயல்கிறோம்.

Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Apple இன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும், அதை www.apple.com/in/privacy தளத்தில் பார்க்கலாம்.

2025-12-12