பணியிடம் மற்றும் பள்ளியில் Apple மூலம் உள்நுழைதல் & தனியுரிமை

உங்கள் நிறுவனம் வழங்கிய “நிர்வகிக்கப்பட்ட Apple கணக்கு” மூலம் செயலிகளிலும் இணையதளங்களிலும் உள்நுழைய “பணியிடம் மற்றும் பள்ளியில் Apple மூலம் உள்நுழைதல்” அம்சம் உங்களுக்கு உதவுகிறது.


“பணியிடம் மற்றும் பள்ளியில் Apple மூலம் உள்நுழைதல்” அம்சம் உங்கள் நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டுள்ளது

“பணியிடம் மற்றும் பள்ளியில் Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தை உங்கள் பள்ளி அல்லது நிறுவனம் (“நிறுவனம்”) செயல்படுத்தினால், உங்கள் நிறுவனத்தால் அனுமதிக்கப்பட்ட மூன்றாம் தரப்புச் செயலிகள் (செயலி கிளிப்கள் உட்பட) மற்றும் இணையதளங்களில் உள்நுழைய உங்கள் நிர்வகிக்கப்பட்ட Apple கணக்கை நீங்கள் பயன்படுத்தலாம். அனுமதிக்கப்பட்ட செயலி அல்லது இணையதளத்தில் நீங்கள் முதல் முறையாக உள்நுழையும்போது, Apple உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி (உங்கள் நிறுவனத்தால் வழங்கப்பட்டால்), ஒவ்வொரு டெவலப்பருக்கும் வேறுபடும் தனித்துவமான பயனர் அடையாளத் தகவல் ஆகியவற்றை மூன்றாம் தரப்புச் செயலி அல்லது இணையதள டெவலப்பர்களுக்கு வழங்குகிறது. உங்களை அங்கீகரிக்க, தங்களின் இடைமுகத்திற்குள் உங்கள் பெயரைக் காட்ட மற்றும் பொருத்தமான அனுமதிகளையும் அணுகலையும் வழங்க டெவலப்பர்கள் இந்தத் தகவல்களைப் பயன்படுத்துகின்றனர். இணையதள டெலவப்பர்களுக்கு வழக்கமான இணையச் செயல்பாடுகளுக்காக உங்கள் உலாவியால் பயன்படுத்தப்படும் தகவல்களும் அனுப்பப்படும்.

டெவலப்பர்கள் தங்களின் செயலிகள் அல்லது இணையதளங்களில் ஏற்கெனவே உள்ள கணக்குகளுக்கு “பணியிடம் மற்றும் பள்ளியில் Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தைப் பயன்படுத்த உங்கள் நிறுவனத்தை அனுமதிக்கலாம். டெவலப்பர் இதைச் செயல்படுத்தினால், உங்களிடம் ஏற்கெனவே உள்ள கணக்கில் உள்நுழைய “பணியிடம் மற்றும் பள்ளியில் Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

மோசடித் தடுப்பு மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக, புதிய செயலியில் “பணியிடம் மற்றும் பள்ளியில் Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தை முதல் முறையாகப் பயன்படுத்தும்போது, நீங்கள் உண்மையான நபர்தான் என்ற நம்பிக்கையை வழங்குவதற்காக எளிய பைனரி மதிப்பெண்ணை டெவலப்பருடன் Apple பகிரும். உங்கள் சாதனம், சாதனம் பயன்படுத்தப்படும் விதம் பற்றிய சுருக்கமான தகவலுடன் உங்கள் Apple கணக்கின் சமீபத்திய செயல்பாட்டின் அடிப்படையில் இந்த மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. நீங்கள் சாதனத்தைப் பயன்படுத்தும் விதம் பற்றிய விரிவான தகவல்களை Apple அல்லது டெவலப்பர்கள் பெறமாட்டார்கள்.

“பணியிடம் மற்றும் பள்ளியில் Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தைப் பயன்படுத்துதல்

ஒரு செயலி அல்லது இணையதளத்தில் “பணியிடம் மற்றும் பள்ளியில் Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தை உங்கள் நிறுவனம் செயல்படுத்தும்போது, அதற்கான உள்நுழைவை அமைக்க உதவுவதற்காக அந்தத் தகவல் Appleக்குத் தெரிவிக்கப்படும். அதன் பிறகு iPhone அல்லது Apple Vision Pro சாதனத்தில் உள்ள ஒரு செயலியில் உள்நுழைய “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தை நீங்கள் பயன்படுத்தினால், எந்தச் செயலியில் உள்நுழைகிறீர்கள் அல்லது “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தை எப்போது பயன்படுத்துகிறீர்கள் என்ற தகவலை Apple பார்க்காது அல்லது தக்கவைக்காது. அந்தத் தகவல் உங்கள் சாதனத்திலேயே இருக்கும். Safariஇல் “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தைப் பயன்படுத்தும்போது, Apple உங்கள் உள்நுழைவை அங்கீகரிப்பதற்காக அந்தத் தகவலை Apple பார்க்கிறது, ஆனால் எந்தெந்த இணையதளங்களில் உள்நுழைந்தீர்கள் அல்லது “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தை எப்போது பயன்படுத்துகிறீர்கள் என்ற தகவலை Apple தக்கவைக்காது.

அனுமதிக்கப்பட்ட செயலி அல்லது இணையதளத்தில் உள்நுழைய “பணியிடம் மற்றும் பள்ளியில் Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தை நீங்கள் பயன்படுத்தினால், உள்நுழைந்த பிறகு உங்களிடம் கூடுதல் தனிப்பட்ட தரவை டெவலப்பர்கள் கேட்கலாம். டெவலப்பருடன் நீங்கள் பகிரும் தனிப்பட்ட தரவு அவர்களின் தனியுரிமைக் கொள்கைக்கு உட்பட்டதாகும்.

“பணியிடம் மற்றும் பள்ளியில் Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தை நிர்வகித்தல்

“பணியிடம் மற்றும் பள்ளியில் Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தை நிர்வகிக்க உங்கள் iOS அல்லது visionOS சாதனத்தில், அமைப்புகள் > [உங்கள் பெயர்] > “Apple மூலம் உள்நுழைதல்” என்பதற்குச் செல்லுங்கள். உங்கள் Macஇல், சிஸ்டம் அமைப்புகள் > [உங்கள் பெயர்] > “Apple மூலம் உள்நுழைதல்” என்பதற்குச் செல்லுங்கள் அல்லது account.apple.com இணையதளத்தில் “உள்நுழைதல் மற்றும் பாதுகாப்பு” பிரிவில் “Apple மூலம் உள்நுழைதல்” என்பதற்குச் செல்லுங்கள். அங்கு “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தைப் பயன்படுத்தும் செயலிகளின் பட்டியலைப் பார்க்கலாம், அவற்றின் தனியுரிமைக் கொள்கையை மதிப்பாய்வு செய்யலாம் மற்றும் “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தை முடக்கலாம். ஒரு செயலியில் “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தை நீங்கள் முடக்கினால், அந்தச் செயலிக்கான “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தை அமைப்பதற்காக டெவலப்பருடன் பகிரப்பட்ட தகவல்கள் மற்றும் உங்கள் “பணியிடம் மற்றும் பள்ளியில் Apple மூலம் உள்நுழைதல்” கணக்குடன் டெவலப்பரால் இணைக்கப்பட்ட தகவல்கள் அந்த டெவலப்பரின் தனியுரிமைக் கொள்கையின்படி தொடர்ந்து கையாளப்படும்.

மேலும் தகவல்

Touch ID, Face ID, Optic ID, வலுவான பாஸ்கோடு விருப்பங்கள் ஆகியவற்றின் மூலம் அமைக்கப்படும் வலுவான அங்கீகாரத்தினால் “பணியிடம் மற்றும் பள்ளியில் Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தைப் பாதுகாக்க Apple செயலாற்றுகிறது.

“பணியிடம் மற்றும் பள்ளியில் Apple மூலம் உள்நுழைதல்” பற்றிய அடையாளம் நீக்கப்பட்ட மற்றும் தொகுக்கப்பட்ட தகவல்கள் Appleக்கு அனுப்பப்படலாம், இதில் “பணியிடம் மற்றும் பள்ளியில் Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தைப் பயன்படுத்துவது தொடர்பான தனிப்பட்டவை அல்லாத தரவுகளும் அடங்கும். இந்தத் தகவல்களைத் தொடர்புடைய Apple தயாரிப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்துவதற்காகவும் மோசடித் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும் Apple பயன்படுத்தக்கூடும். Appleஆல் பெறப்படும் “Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தின் அடையாளம் நீக்கப்பட்ட மற்றும் தொகுக்கப்பட்ட தரவை, மீண்டும் அடையாளம் காண Apple முயலாது.

“பணியிடம் மற்றும் பள்ளியில் Apple மூலம் உள்நுழைதல்” அம்சத்தை வழங்குவது சம்பந்தமாக Appleஆல் சேகரிக்கப்படும் தகவல்கள் (உங்கள் நிறுவனம் ஒரு பள்ளி எனில்) school.apple.com இணையதளத்தில் உள்ள Apple School Manager ஒப்பந்தம் அல்லது (உங்கள் நிறுவனம் ஒரு வணிகம் எனில்) business.apple.com இணையதளத்தில் உள்ள Apple Business Manager ஒப்பந்தத்தின் அடிப்படையில் உங்கள் நிறுவனத்தின் சார்பாக Appleஆல் கையாளப்படும்.

“பணியிடம் மற்றும் பள்ளியில் Apple மூலம் உள்நுழைதல்” அம்சம் தொடர்பாக உங்கள் தரவுகள் கையாளப்படும் விதம் குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் நிறுவனத்தின் IT நிர்வாகியைத் தொடர்புகொள்ளுங்கள்.

2025-12-12