தேடல் & தனியுரிமை

Safari, Siri, Spotlight ஆகியவற்றில் நீங்கள் தேடியவற்றை உங்களை அடையாளம் காண முடியாத வகையில் சேமிக்க Appleஐ அனுமதிப்பதன் மூலம் தேடலை மேம்படுத்த உதவுங்கள். பொது அறிவுத் தகவல்களைக் கண்டறிவது, இசையை பிளே செய்வது, வழிகளைப் பெறுவது போன்ற கோரிக்கைகள் தேடல்களில் அடங்கும்.
 

“தேடல்” உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


மிகப் பொருத்தமான தேடல் முடிவுகளை வழங்குவதற்காக, சில தகவல்கள் உங்களுடன் தொடர்புபடுத்தப்படாத வகையில் Appleக்கு அனுப்பப்படும்

“கண்டுபிடித்தல்”, “விஷுவலாகக் கண்டுபிடித்தல்” ஆகிய அம்சங்களைப் பயன்படுத்தும்போதும் தேடல், Safari தேடல், மெசேஜஸில் #படத் தேடல் ஆகியவற்றில் டைப் செய்யும்போதும் Spotlightஐத் தொடங்கும்போதும் மிகச் சமீபத்திய பரிந்துரைகளை வழங்குவதற்காக குறிப்பிட்ட சில தகவல்கள் Appleக்கு அனுப்பப்படும். Appleக்கு அனுப்பப்படும் தகவல்கள் உங்களை அடையாளப்படுத்தாத வகையில் சாதனத்தால் உருவாக்கப்படும் 15 நிமிட ரேண்டமான, மாறக்கூடிய அடையாளத் தகவலுடன் இணைக்கப்படிருக்கும். இருப்பிடம், விருப்பமான தலைப்புகள் (எடுத்துக்காட்டாக, சமையல் அல்லது கூடைப்பந்து), உங்கள் தேடல் வினவல்கள் (விஷுவல் தேடல் வினவல்கள் உட்பட), உங்கள் தேடல் வினவல்கள் தொடர்பான பின்னணித் தகவல்கள், நீங்கள் தேர்ந்தெடுத்த பரிந்துரைகள், நீங்கள் பயன்படுத்தும் செயலிகள், தொடர்புடைய சாதனப் பயன்பாட்டுத் தரவு ஆகியவை இந்தத் தகவல்களில் இருக்கலாம். இந்தத் தகவலில் உங்கள் சாதனத்தில் உள்ள கோப்புகளையோ உள்ளடக்கத்தையோ காட்டும் தேடல் முடிவுகள் இருக்காது. இசை அல்லது வீடியோ சந்தாச் சேவைகளுக்கு நீங்கள் சந்தா சேர்ந்தால், அந்தச் சேவைகளின் பெயரும் சந்தா வகையும் Appleக்கு அனுப்பப்படலாம். உங்கள் கணக்கின் பெயர், எண் மற்றும் பாஸ்வேர்டு Appleக்கு அனுப்பப்படாது.

நீங்கள் Siriஐப் பயன்படுத்தியும் தேடலாம். உதாரணமாக, பொது அறிவுத் தகவல்களைக் கண்டறிதல், வழிகளைப் பெறுதல் போன்றவற்றிற்காக Siri இடம் கோருதல். நீங்கள் Siriஐப் பயன்படுத்தும்போது, உங்கள் கோரிக்கை மற்றும் பிற தரவுகளின் டிரான்ஸ்கிரிப்ட்கள் கோரிக்கையைச் செயலாக்குவதற்காக Appleக்கு அனுப்பப்பட்டுச் சேமிக்கப்படக்கூடும். உங்கள் தரவுகளை Siri எப்படிக் கையாளுகிறது என்பதை அமைப்புகள் > Siri என்பதற்குச் சென்று நீங்கள் மேலும் தெரிந்துகொள்ளலாம்.

Appleக்கு அனுப்பப்படும் உங்கள் தேடல்களுடன் தொடர்புடைய தகவல்கள் உங்கள் கோரிக்கையைச் செயலாக்குவதற்கும், தேடல் முடிவுகளை உருவாக்கி மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணத்திற்கு, தேடல் மாடல்களை மேம்படுத்த உங்கள் தேடல் வினவல்கள் பயன்படுத்தப்படுகின்றன. அது உங்கள் Apple கணக்கு அல்லது மின்னஞ்சல் முகவரியுடன் இணைக்கப்படாது.

பிற Apple தயாரிப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்த தொகுக்கப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்படலாம். மேலும், தேடல் செயல்பாட்டின் செயல்திறனையும் தரத்தையும் மதிப்பிடுவதற்கும் மேம்படுத்துவதற்கும், தோராயமாகத் தேர்வுசெய்யப்பட்ட தேடல் வினவல்களின் தொகுக்கப்பட்ட மாதிரிகளில் ஒரு சிலவற்றை மட்டும் Apple தேடல் கருவிகளுக்கு அனுப்பக்கூடும்.

Safariஇல் தேடல் என்ஜின் பரிந்துரைகள்

Safariஇல் ஒரே புலத்தில் நீங்கள் தேடல்கள் மற்றும் இணைய முகவரிகளை உள்ளிடலாம், இதனால் ஒரே இடத்தில் வசதியான வகையில் இணையத்தில் நீங்கள் உலவ முடியும். தேடல் என்ஜின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டிருந்தால், நீங்கள் டைப் செய்தவற்றின் அடிப்படையில் நீங்கள் தேர்ந்தெடுத்த தேடல் என்ஜினில் இருந்து பரிந்துரைகளை Safari பெறும்.

Safariஇல் மிகப் பிரபலமானவற்றை முன்னதாகவே ஏற்றுதல்

“மிகப் பிரபலமானவற்றை முன்னதாகவே ஏற்றுதல்” அம்சம் செயல்படுத்தப்பட்டிருந்தால் உங்கள் புக்மார்க்குகள் மற்றும் நீங்கள் இதுவரை உலாவியவற்றின் அடிப்படையில் மிகப் பிரபலமானவற்றை Safari தீர்மானித்ததும், Safari அந்த இணையப் பக்கத்தைப் பின்னணியில் ஏற்றத் தொடங்கும். இந்த விருப்பத்தை முடக்கியிருந்தால், பக்கம் வழக்கம்போல ஏற்றப்படும்.

நீங்களே இதைத் தேர்வுசெய்யலாம் மற்றும் கட்டுப்படுத்தலாம்

தேடலை மேம்படுத்த, உங்கள் தேடல் வினவல்களை Apple சேமித்துப் பயன்படுத்துவதை நீங்கள் விரும்பவில்லை எனில், அமைப்புகள் > தேடல் என்பதற்குச் சென்று “தேடலை மேம்படுத்த Appleக்கு உதவுங்கள்” என்பதைத் தட்டி ஆஃப் செய்து “தேடலை மேம்படுத்துதல்” என்பதை முடக்கலாம். “Siri & டிக்டேஷன் மேம்பாடு” அம்சத்தை நீங்கள் செயல்படுத்தியிருந்தால், Siriஐ மேம்படுத்துவதற்காக Siri மூலம் நீங்கள் மேற்கொள்ளும் தேடல்கள் சேமிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும். அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > பகுப்பாய்வுகள் & மேம்பாடுகள் என்பதற்குச் சென்று, “Siri & டிக்டேஷன் மேம்பாடு” என்பதைத் தட்டி ஆஃப் செய்வதன் மூலம் அதை நீங்கள் முடக்கலாம்.

இணைய அடிப்படையிலான உள்ளடக்கம் மற்றும் தேடல் முடிவுகளை நீங்கள் பயன்படுத்த விரும்பவில்லை எனில், அமைப்புகள் > தேடல் என்பதற்குச் சென்று “சமீபத்திய தேடல்களைக் காட்டு” மற்றும் “தொடர்புடைய உள்ளடக்கத்தைக் காட்டு” அம்சங்களைத் தட்டி ஆஃப் செய்து அவற்றை முடக்கலாம்.

அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் > சிஸ்டம் சேவைகள் என்பதற்குச் சென்று “பரிந்துரைகள் & தேடல்” என்பதைத் தட்டி, தேடல் அம்சத்திற்கு நீங்கள் இருப்பிடச் சேவைகளை முடக்கலாம். உங்கள் சாதனத்தில் இருப்பிடச் சேவைகள் அம்சத்தை ஆஃப் செய்தால், உங்களின் இருப்பிடம் Appleக்கு அனுப்பப்படாது.

Appleக்கு அனுப்பப்படும் தகவல்களை நம்பகமான மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநர்கள் மூலம் Apple செயலாக்கக்கூடும்.

தேடல் அம்சத்தைப் பயன்படுத்துவதன் மூலம், Apple மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் இந்தத் தகவல்களைப் பரிமாறுவது, சேகரிப்பது, பராமரிப்பது, செயலாக்குவது மற்றும் பயன்படுத்துவதை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்குகிறீர்கள். Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.

2026-03-30