பங்குகள் & தனியுரிமை

பங்குகள் செயலியை மேம்படுத்தி பிரத்தியேகமாக்குவதற்காக பங்குகள் செயலியில் உங்கள் செயல்பாடு பற்றிய தகவல்களை Apple சேகரிக்கிறது, இது உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்படாது. செய்திச் சந்தாத் திட்டங்கள் கிடைக்கிறதா என்று பார்க்க உங்கள் Apple கணக்கு பயன்படுத்தப்படலாம். இதனால் பங்குகள் செயலியில் நீங்கள் அவற்றை அணுக முடியும்.
 

“பங்குகள்” செயலி உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Privacy Icon

  • News (கிடைக்கும்பட்சத்தில்) மற்றும் பங்குகள் செயலியில் உங்கள் வாசிப்பு மற்றும் கேட்டல் செயல்பாடுகள், பங்குகள் செயலியில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகள் ஆகியவை News மற்றும் பங்குகள் செயலிக்கான ஓர் அடையாளத் தகவலுடன் இணைக்கப்படும், இது உங்கள் Apple கணக்குடனோ பிற Apple சேவைகளுடனோ இணைக்கப்படாது.
  • News மற்றும் பங்குகள் செயலியில் காட்டப்படும் விளம்பரங்கள் உங்களுக்குத் தொடர்புடையதாக இருப்பதை உறுதிப்படுத்த உங்கள் கணக்கு, நீங்கள் வாசித்த செய்திகளின் வகைகள், நீங்கள் சந்தாச் சேர்ந்துள்ள வெளியீடுகள் பற்றிய தகவல்களை நாங்கள் பயன்படுத்தக்கூடும். App Storeஇல் காட்டப்படும் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்குவதற்காக உங்கள் சந்தாக்கள் பற்றிய தகவல்களையும் பயன்படுத்தலாம். இந்த விளம்பரப்படுத்தல் தொடர்பாக கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி தேர்வுகளைக் கொண்டுள்ளீர்கள்.
  • சந்தாச் சேர்ந்துள்ள உள்ளடக்கத்தைப் பங்குகள் செயலியில் நீங்கள் அணுகுவதை உறுதிப்படுத்த, Apple Newsஇல் (கிடைக்கும்பட்சத்தில்) வணிக உள்ளடக்கத்திற்குச் சந்தா சேர்ந்துள்ளீர்களா என உங்கள் Apple கணக்கைச் சரிபார்க்கிறோம்.

உங்கள் தகவலின் தனியுரிமையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது Appleஇல் உள்ள அனைவரின் முன்னுரிமையாகும். உங்கள் அனுபவத்தைச் சிறப்பாக்கத் தேவைப்படும் தரவை மட்டும் சேகரிக்க நாங்கள் கடினமாக முயல்கிறோம். நாங்கள் தரவைச் சேகரிக்கும்போது எதைச் சேகரிக்கிறோம், அது எங்களுக்கு ஏன் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்வது முக்கியம் என நினைக்கிறோம், இதன்மூலம் தகவலறிந்த முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். அனைத்து Apple தயாரிப்புகளையும் சேவைகளையும் போல இந்தக் கொள்கைகளைக் கருத்தில் கொண்டு “பங்குகள்” செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பங்குகள் செயலியை மேம்படுத்துவதற்காக செயலியின் செயல்திறன் மற்றும் உங்கள் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம். அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் உள்ள பயனர்களிடமிருந்து பங்குகள் செயலியில் Apple Newsஐ எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்ற தகவலும் சேகரிக்கப்படும். பங்குகள் மற்றும் Apple News (கிடைக்கும்பட்சத்தில்) செயலிக்கான அடையாளத் தகவலுடன் இந்தத் தரவு இணைக்கப்பட்டிருக்கும், பிற Apple சேவைகளுடன் இணைக்கப்பட்டிருக்காது. உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில், அமைப்புகள் > செயலிகள் > பங்குகள் என்பதற்குச் சென்று “அடையாளத் தகவலை மீட்டமை” என்பதைத் தட்டி ஆன் செய்து அடையாளத் தகவலை மீட்டமைக்கலாம். Macஇல், பங்குகள் செயலியைத் திறந்து, பங்குகள் > “அடையாளத் தகவலை மீட்டமை” என்பதற்குச் சென்று அதை கிளிக் செய்யுங்கள். Apple News செயலிக்காக நாங்கள் சேகரிக்கும் தகவல்கள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.apple.com/in/legal/privacy/data/en/apple-news இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

Apple News

கிடைக்கும்போது பங்குகள் செயலியில் நீங்கள் வாசிக்கும் Apple News செய்திகளின் அடிப்படையில் பங்குகள் செயலியில் Apple News பரிந்துரைகள் காட்டப்படும். உங்கள் iOS அல்லது iPadOS சாதனத்தில், பங்குகள் செயலியில் பரிந்துரைகளைக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் தரவுகளை அழிக்க, மேல் வலது மூலையில் உள்ள மேலும் என்பதைத் தட்டி, “பரிந்துரைகள் தரவை அழி” என்பதைத் தட்டவும். Macஇல் உள்ள பங்குகள் செயலியில், பங்குகள் > பரிந்துரைகள் தரவை அழி என்பதற்குச் செல்லவும்.

பங்குகள் செயலியில் உங்கள் சந்தாத் திட்டங்களை நீங்கள் அணுகுவதை உறுதிப்படுத்த உங்கள் Apple கணக்கு மூலம் நீங்கள் வாங்கும் செய்தி சந்தாத் திட்டங்களைப் பற்றிய தகவல்கள் (Apple Newsஇல் கிடைக்கும்பட்சத்தில்) பயன்படுத்தப்படுகிறது.

உங்களுடனான தகவல்தொடர்புகள்

Apple News+ மற்றும் நீங்கள் விரும்பக்கூடிய பிற Apple தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சலுகைகள் (Apple One உட்பட) பற்றிய தகவல்களை உங்களுக்கு அனுப்ப, உங்களுக்குச் சொந்தமான Apple தயாரிப்புகள், Apple சேவைகளுக்கான உங்கள் சந்தாக்கள், நீங்கள் பதிவிறக்கும் Apple செயலிகள் போன்ற உங்கள் கணக்கு பற்றிய தகவல்களை Apple பயன்படுத்தக்கூடும். Apple சலுகைகளுக்கான தகுதிநிலையைச் சரிபார்க்க உங்கள் சாதன வரிசை எண் அல்லது உங்கள் Apple News+ சந்தா குறித்த விவரங்கள் பயன்படுத்தப்படக்கூடும். நீங்கள் குடும்பப் பகிர்வுக் குழுவில் இருந்தால், குடும்பப் பகிர்வின் வழியாக உங்களுக்குக் கிடைக்கக்கூடிய தயாரிப்புகள், சேவைகள் மற்றும் சலுகைகள் பற்றிய தகவல்களை Apple அனுப்பக்கூடும். நீங்கள் Apple One சந்தாச் செலுத்தியிருந்தால், சந்தாச் செலுத்தியுள்ள சேவைகளின் ஒவ்வொரு அம்சங்களைப் பற்றிய மின்னஞ்சல்களையும் Push அறிவிப்புகளையும் நாங்கள் அனுப்பக்கூடும். நாங்கள் அனுப்பும் அறிவிப்புகளை நீங்கள் கையாளும் விதம் பற்றிய தகவல்களை எங்கள் சேவைகளை மேம்படுத்துவதற்காக Apple பயன்படுத்துகிறது.

விளம்பரப்படுத்துதல்

மிகச் சிறந்த உள்ளடக்கத்தை வழங்குவதற்காக பங்குகள் செயலியில் விளம்பரங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பிரத்தியேகமாக்கப்பட்ட விளம்பரங்கள் அமைப்பு ஆன் செய்யப்பட்டிருந்தால், Appleஇன் விளம்பரப்படுத்தல் தளம் உங்களுக்குப் பொருத்தமான விளம்பரங்களை வழங்க உங்கள் தகவல்களைப் பயன்படுத்தக்கூடும். பிரத்தியேக விளம்பரங்களை ஆஃப் செய்வது விளம்பரங்களை இலக்கிடுவதற்காக இந்தத் தகவல்களைப் பயன்படுத்துவதில் இருந்து Appleஐத் தடுக்கும். இது நீங்கள் பெறும் விளம்பரங்களின் எண்ணிக்கையைக் குறைக்காது, ஆனால் விளம்பரங்கள் உங்களுக்குப் பொருத்தமானதாக இருப்பது குறையக்கூடும். உங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனத்தில், அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > Apple விளம்பரப்படுத்தல் என்பதற்குச் சென்று “பிரத்தியேக விளம்பரங்கள்” என்பதைத் தட்டி அதை ஆஃப் செய்யலாம். Mac சாதனத்தில், சிஸ்டம் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > Apple விளம்பரப்படுத்துதல் என்பதற்குச் சென்று, “பிரத்தியேகமாக்கப்பட்ட விளம்பரங்கள்” என்பதைத் தேர்வுநீக்குங்கள். நீங்கள் Apple News அல்லது பங்குகள் செயலிகளுக்குள் இருக்கும்போது விளம்பரங்களை அனுப்புவதற்காக மட்டுமே Apple News மற்றும் பங்குகள் செயலிகளில் நீங்கள் வாசிக்கும் மற்றும் கேட்கும் செய்திகள் பயன்படுத்தப்படும்.

எங்கள் கூட்டாளர்களால் பங்கு விலை மேற்கோள்கள் மற்றும் தரவுகள் (அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், ஆஸ்திரேலியா மற்றும் கனடாவிற்கு வெளியே வசிக்கும் பயனர்களுக்கு அவர்கள் பின்தொடரும் பங்குகளைப் பற்றிய செய்திகள்) வழங்கப்படுகின்றன, அவர்கள் Appleஇன் தேவைகளுக்கு இணங்க தகவல்களைக் கையாள்வார்கள்.

தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய அடிப்படைச் சட்டங்கள்

பொருந்தும் உள்ளூர் சட்டங்கள் குறிப்பிடும் இடங்களில், எங்களின் நியாயமான நலன்களின் நோக்கத்திற்காகத் தேவைப்படும் அளவிற்குப் பங்குகள் செயலியில் உள்ள தனிப்பட்ட தரவின் பின்வரும் வகைகளை நாங்கள் செயலாக்குகிறோம்:

  • உங்கள் கணக்குத் தகவல் (Apple News+க்கான உங்கள் சந்தா விவரம் போன்றவை)

நியாயமான நலன்கள் என்பதில் இவையும் அடங்கும்:

  • உங்களுக்காகவும் பிறருக்காகவும் சேவையை மேம்படுத்தி உகந்ததாக்குதல்
  • உங்களுக்குக் கிடைக்கும் உள்ளடக்கதைக் காட்டுதல்
  • சலுகைகளுக்கான தகுதிநிலையைச் சரிபார்த்து, Apple News மற்றும் Apple One குறித்த தகவல்களை உங்களுக்கு அனுப்பும்

தக்கவைத்தல்

வணிகத் தேவை, ஒப்பந்தக் கடமை அல்லது சட்டப்பூர்வத் தேவை உள்ள வரை மட்டுமே பங்குகள் செயலி தொடர்பான தனிப்பட்ட தரவை நாங்கள் தக்கவைக்கிறோம். தக்கவைத்தல் காலத்தை மதிப்பிடும்போது, சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவைத் தக்கவைப்பது தேவையா என்று முதலில் கவனமாக ஆராய்கிறோம். தக்கவைத்தல் தேவை எனில், முடிந்த வரை சட்டப்படி அனுமதிக்கப்பட்ட குறுகிய காலத்திற்கு மட்டுமே தனிப்பட்ட தரவைத் தக்கவைக்க முயல்கிறோம்.

Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.

2025-12-12