Tap to Pay on iPhone & தனியுரிமை

பாதுகாப்பான மற்றும் தனிப்பட்ட முறையில் உங்கள் மொபைல் சாதனத்தில் கான்டாக்ட்லெஸ் பேமெண்ட்களைப் பெற உதவுவதற்காக Tap to Pay on iPhone வடிவமைக்கப்பட்டுள்ளது.


Tap to Pay on iPhone அம்சத்தைச் செயல்படுத்துதல்

Tap to Pay on iPhone அம்சம் உங்கள் iPhoneஐப் பயன்படுத்தி வாடிக்கையாளரின் மொபைல் சாதனம் அல்லது கான்டாக்ட்லெஸ் கார்டில் இருந்து இந்த வசதி செயல்படுத்தப்பட்ட செயலி மூலம் கான்டாக்ட்லெஸ் பேமெண்ட்களைப் பெற உங்களுக்கு உதவுகிறது. Tap to Pay on iPhone அம்சத்தைச் செயல்படுத்த, வணிகத்திற்காக நீங்கள் பயன்படுத்த விரும்பும் Apple கணக்கு மூலம் உள்நுழையுங்கள். வணிகக் கணக்கு நிர்வாகம், மோசடித் தடுப்பு மற்றும் இணக்க நோக்கங்களுக்காக நீங்கள் பயன்படுத்தும் Apple கணக்கு ஒரு வணிகக் கணக்குடன் இணைக்கப்படும். நீங்கள் Apple உதவியைத் தொடர்புகொண்டு வணிகக் கணக்கிலிருந்து உங்கள் Apple கணக்கை இணைப்பு நீக்கலாம்.

Tap to Pay on iPhone அம்சத்தைப் பயன்படுத்துதல்

Tap to Pay on iPhone அம்சத்தைப் பயன்படுத்தும்போது, சேவையை வழங்கவும் Tap to Pay on iPhone இயங்குதளம் குறித்து உங்களுடன் தொடர்புகொள்ளவும் உங்களுடனும் உங்கள் பேமெண்ட் சேவை வழங்குநருடனும் செய்து கொண்ட எங்கள் ஒப்பந்தத்தின்படியும் சட்டரீதியான தேவைகளுக்கு ஏற்பவும் Apple உங்கள் தரவுகளைச் செயலாக்குகிறது. Tap to Pay on iPhone அம்சத்தைத் தொடங்குவதற்காக விர்ச்சுவல் பேமெண்ட் டெர்மினலைத் திறக்கும்போது, செல்லுபடியாகும் ஓர் அமர்வைத் தொடங்கத் தேவையான தரவுகளை Apple சேகரிக்கிறது. இதில் உங்கள் பேமெண்ட் சேவை வழங்குநர் மற்றும் வணிகத்தின் அடையாளத்தைக் கொண்ட டோக்கன், வணிகத்தைப் பற்றிய தகவல்கள் (எ.கா. வணிகத்தின் பெயர்), உங்கள் விர்ச்சுவல் பேமெண்ட் டெர்மினலுக்கான அடையாளத் தகவல் போன்றவையும் அடங்கும். உங்கள் வன்பொருள் பாதுகாப்பானது என்று குறிப்பிடும் டோக்கனையும் Apple சேகரிக்கும். இவற்றைச் சரிபார்த்த பிறகு, செல்லுபடியாகும் அமர்வு டோக்கனை உங்கள் சாதனத்திற்கு Apple திருப்பி அனுப்பும், அதைப் பயன்படுத்தி உங்கள் சாதனம் பரிவர்த்தனையைச் செயலாக்கும். ஒரு பரிவர்த்தனையைச் செயலாக்க, உங்கள் சாதனம் என்கிரிப்ட் செய்யப்பட்ட பரிவர்த்தனைத் தகவலை Appleக்கு அனுப்பும்; Apple இந்தப் பரிவர்த்தனைத் தகவலை டீகிரிப்ட் செய்யாது. அமர்வு டோக்கன், சாதனம், வணிகம் ஆகியவை பற்றிய தகவல்களைப் பயன்படுத்தி அந்தப் பரிவர்த்தனையை Apple அங்கீகரிக்கிறது, இதற்காக என்கிரிப்ட் செய்த பரிவர்த்தனையின் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தாது. அங்கீகரித்த பிறகு, என்கிரிப்ஷன் கீயை உங்கள் பேமெண்ட் சேவை வழங்குநர் மட்டுமே டீகிரிப்ட் செய்யக்கூடிய வகையில் மாற்றி அந்தப் பரிவர்த்தனையின் கூடுதல் பாதுகாப்புக்கு Apple உதவும். பேமெண்ட் கார்டு துறை இணக்கம் மற்றும் அதுபோன்ற பிற தேவைகளுக்காக 25 நாட்களுக்கு Tap to Pay on iPhone பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களை (எ.கா. பரிவர்த்தனைத் தொகை) Apple சேகரித்துப் பராமரிக்கும்.

Apple Business சேவைக்குப் பதிவுசெய்தல்

உங்கள் Apple கணக்கைப் பயன்படுத்தி “பாயின்ட் ஆஃப் சேல்” செயலியில் இருந்து ஒரு வணிகக் கணக்கை Apple Business சேவையுடன் நீங்கள் இணைக்கலாம், இது உங்கள் Apple கணக்கை Apple Business சேவையில் உள்ள வணிகக் கணக்குடன் இணைக்கும். Apple Business சேவையை நீங்கள் பயன்படுத்துவது www.apple.com/legal/internet-services/maps/business-connect/apple-business-connect-business-terms-english.pdf தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள Apple Business சேவை விதிமுறைகளுக்கும், www.apple.com/in/privacy தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள Appleஇன் தனியுரிமைக் கொள்கைக்கும் உட்பட்டது.

பொதுவாக, சேவையை மேம்படுத்துவதற்காக இனி உங்களுடன் தொடர்புபடுத்த முடியாத Tap to Pay on iPhone தரவுகள் குறிப்பிட்ட காலத்திற்குத் தக்கவைக்கப்படலாம்.

Tap to Pay on iPhone சேவைக்கான தனிப்பட்ட தரவுச் செயலாக்கம் தொடர்பான ஒரு தரவுக் கட்டுப்பாட்டாளராக Apple செயல்படும் இடங்களில், அந்தச் செயல்பாடுகள் Apple Payments Services LLC நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும். Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம். மூன்றாம் தரப்பு “பாயின்ட் ஆஃப் சேல்” செயலியின் பயன்பாடு அந்தச் செயலியின் சேவைக்கான விதிமுறைகள் மற்றும் அதன் தனியுரிமைக் கொள்கைக்கு உட்பட்டதாகும்.

2026-05-11