மெசேஜ்களை ஃபில்டர் செய்தல் & தனியுரிமை

தெரியாத RCS, SMS மற்றும் MMS மெசேஜ்களை நீங்கள் கண்டறிவதற்கும் ஃபில்டர் செய்வதற்கும் மெசேஜ் ஃபில்டர்கள் வழி வகுக்கின்றன.


நீங்கள் மூன்றாம் தரப்பு மெசேஜ் ஃபில்டர்களை நிறுவிப் பயன்படுத்தலாம். நீங்கள் அதைச் செய்தால், தெரியாத அனுப்புநர்களிடம் இருந்து உங்களுக்கு வரும் RCS, SMS மற்றும் MMS மெசேஜ்களில் உள்ள அனைத்து உரை மற்றும் உள்ளடக்கங்களையும் மூன்றாம் தரப்பு ஃபில்டர் வழங்குநரால் அணுக முடியும். வங்கிகள் அல்லது பிற அமைப்புகள் அனுப்பும் சரிபார்ப்புக் குறியீடுகளும் RCS, SMS மற்றும் MMS மெசேஜ்களில் இருக்கக்கூடிய பிற தனிப்பட்ட அல்லது முக்கியத் தகவல்களும் இந்த மெசேஜ்களில் இருக்கலாம். நீங்கள் மூன்றாம் தரப்பு வழங்குநரின் மெசேஜ் ஸ்பேம் ஃபில்டரைப் பயன்படுத்தினால், ஃபில்டர் வழங்குநரின் விதிமுறைகள், தனியுரிமைக் கொள்கை, நடைமுறைகள் ஆகியவற்றுக்கு உட்படுவீர்கள். அந்த மூன்றாம் தரப்பினரின் விதிமுறைகள், தனியுரிமைக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுமாறு வலியுறுத்துகிறோம். மூன்றாம் தரப்பு மெசேஜ் ஸ்பேம் ஃபில்டரை அகற்ற, அமைப்புகள் > செயலிகள் > மெசேஜஸ் > தெரியாதது & ஸ்பேம் என்பதற்குச் சென்று, பட்டியலில் இருந்து ஃபில்டரை அகற்றவும்.

ஒரு மெசேஜுக்கு நீங்கள் மூன்று முறை பதிலளித்த பிறகோ உங்கள் தொடர்புகளில் அனுப்புநர் விவரத்தைச் சேர்த்த பிறகோ, அந்த அனுப்புநரிடம் இருந்து வரும் மெசேஜ்கள் “தெரியாத அனுப்புநர்” என்று ஃபில்டர் செய்யப்படாது.

பிரேசில் மற்றும் இந்தியாவில் உள்ள மெசேஜஸ் செயலிப் பயனர்களுக்கானது

பயனர்கள் தங்களது மெசேஜ்களை ஒழுங்கமைக்க, மெசேஜ் ஃபில்டர் இயல்பாகவே செயல்படுத்தப்பட்டிருக்கும். சாதனத்தில் உள்ள இயந்திரக் கற்றல் அம்சத்தைப் பயன்படுத்துவதால், தெரியாத அனுப்புநர்களிடம் இருந்து வரும் மெசேஜ்கள் இரண்டு துணை வகைகளாக வகைப்படுத்தப்படக்கூடும்: பரிவர்த்தனைகள் அல்லது விளம்பரங்கள். மெசேஜஸ் செயலியில் உள்ள எந்த உள்ளடக்கத்தையோ தரவையோ Apple உடன் மெசேஜ் ஃபில்டர் பகிர்வதில்லை. அமைப்புகள் > மெசேஜஸ் > தெரியாதது & ஸ்பேம் என்பதற்குச் சென்று “எதுவுமில்லை” என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மெசேஜ் ஃபில்டரை முடக்கலாம்.

2025-12-12