Touch ID & தனியுரிமை

Touch ID உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


கைரேகையைப் பயன்படுத்தி உங்கள் சாதனத்தை அன்லாக் செய்யவும் Apple Pay, App Store, Apple Books ஆகியவற்றில் எதையேனும் வாங்கவும் Touch ID உங்களை அனுமதிக்கிறது.

உங்கள் iPhone, iPad, Mac ஆகியவற்றை அன்லாக் செய்ய Touch IDஐப் பயன்படுத்தலாம். Touch ID சென்சாரைப் பயன்படுத்தி, பதிவுசெய்த கைரேகையுடன் ஒரு கைரேகை பொருந்துகிறதா என்பதை Touch ID தீர்மானிக்கிறது. Apple Pay மூலம் பணம்செலுத்துதல், App Storeஇல் செயலிகளை வாங்குதல், செயலிகளுக்குள் அங்கீகரித்தல் போன்றவற்றுக்கும் Touch IDஐப் பயன்படுத்தலாம்.

Touch ID தரவு (உங்கள் கைரேகையின் கணித உருவகிப்புகள் உட்பட) என்கிரிப்ட் செய்யப்பட்டு Secure Enclaveக்குள் பாதுகாக்கப்படுகிறது. Touch ID உங்கள் கைரேகையின் படங்களைச் சேமிப்பதில்லை மாறாக அதன் கணித உருவகிப்பை மட்டும் பயன்படுத்துகிறது. சேமிக்கப்பட்ட இந்தத் தரவிலிருந்து உங்கள் உண்மையான கைரேகைப் படத்தைத் திரும்ப உருவாக்குவது சாத்தியமில்லை. Touch ID பொருத்தத்தின் துல்லியத்தை மேம்படுத்துவதற்காகப் பதிவுசெய்யப்பட்ட கைரேகைகளைக் காலப்போக்கில் சிறிதுசிறிதாகப் புதுப்பிக்கும். நெருக்கமான பொருத்தம் கண்டறியப்பட்டு அதைத் தொடர்ந்து சாதனத்தை அன்லாக் செய்ய பாஸ்கோடு உள்ளிடப்படும்போதும் Touch ID இந்தத் தரவைப் புதுப்பிக்கும்.

Touch ID தரவு உங்கள் சாதனத்தை விட்டு வெளியே செல்லாது, iCloudஇல் அல்லது வேறு இடத்தில் ஒருபோதும் பேக்-அப் செய்யப்படாது.

Touch ID உங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்

நீங்கள் Touch IDஇல் பதிவுசெய்வதைத் தேர்வுசெய்தால், அது பயன்படுத்தப்படும் விதத்தை நீங்கள் கட்டுப்படுத்தலாம் அல்லது எப்போது வேண்டுமானாலும் அதை முடக்கலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் iPhone அல்லது iPadஐ அன்லாக் செய்ய Touch IDஐப் பயன்படுத்த விரும்பவில்லையெனில், அமைப்புகள் > Touch ID & பாஸ்கோடு என்பதற்குச் சென்று உங்கள் பாஸ்கோடை உள்ளிட்டு, iPhone அன்லாக் அல்லது iPad அன்லாக் என்பதைத் தட்டி அதை ஆஃப் செய்யலாம். Macஇல், சிஸ்டம் அமைப்புகள் > Touch ID & பாஸ்வேர்டு என்பதற்குச் சென்று, “உங்கள் Macஐ அன்லாக் செய்ய Touch IDஐப் பயன்படுத்து” என்பதைக் கிளிக் செய்து அதை ஆஃப் செய்யலாம்.

iPhone அல்லது iPadஇல் Touch IDஐ முடக்க, அமைப்புகள் > Touch ID & பாஸ்கோடு என்பதற்குச் சென்று உங்கள் பாஸ்கோடை உள்ளிட்டு, பின் கைரேகை பிரிவின் கீழ் சேமிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கைரேகைகளையும் தட்டி, ஒவ்வொரு சேமிக்கப்பட்ட கைரேகைக்கும் “கைரேகையை நீக்கு” என்பதைத் தட்ட வேண்டும். Macஇல், சிஸ்டம் அமைப்புகள் > Touch ID & பாஸ்வேர்டு என்பதற்குச் சென்று, நீங்கள் அகற்ற விரும்பும் கைரேகைகளை கிளிக் செய்து, கேட்கும்போது நீக்கத்தை உறுதிசெய்ய வேண்டும். இதைச் செய்தால் பதிவுசெய்யப்பட்ட கைரேகைகளின் கணித உருவகிப்புகள் உள்ளிட்ட Touch ID தரவு உங்கள் சாதனத்தில் இருந்து நீக்கப்படும். “இடம் அறி” செயலியைப் பயன்படுத்தி உங்கள் சாதனத் தரவை அழிக்க அல்லது மீட்டமைக்கத் தேர்வுசெய்தாலோ அல்லது அனைத்து உள்ளடக்கத்தையும் அமைப்புகளையும் நீக்கினாலோ அனைத்து Touch ID தரவும் நீக்கப்படும்.

Touch ID மற்றும் செயலிகள்

ஆதரிக்கப்படும் செயலிகளுக்குள் அங்கீகரித்தலுக்காக நீங்கள் Touch IDஐச் செயல்படுத்தலாம். அங்கீகரிக்கப்பட்டதா இல்லையா என்ற தகவல் மட்டுமே செயலிகளுக்குத் தெரிவிக்கப்படும். பதிவுசெய்யப்பட்ட கைரேகையுடன் தொடர்புடைய Touch ID தரவை செயலிகள் அணுக முடியாது.

2025-12-12