மொழிபெயர்ப்பு & தனியுரிமை

“மொழிபெயர்ப்பு” செயலி மற்றும் சிஸ்டம் அளவிலான மொழிபெயர்ப்பு உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.


நீங்கள் மொழிபெயர்க்கத் தேர்வுசெய்யும் ஆடியோவும் உரையும் (படங்களில் அடையாளம் காணப்படும் உரை உட்பட) உங்கள் கோரிக்கைகளைச் செயலாக்க Appleக்கு அனுப்பப்படலாம். உங்கள் கோரிக்கைகள் ரேண்டமான, சுழற்சிமுறையில் மாறும் அடையாளத் தகவலுடன் இணைக்கப்பட்டிருக்கும், அவை உங்கள் Apple கணக்குடனோ மின்னஞ்சல் முகவரியுடனோ நீங்கள் பிற Apple சேவைகளைப் பயன்படுத்தியதால் Appleக்குக் கிடைத்திருக்கும் பிற தரவுகளுடனோ இணைக்கப்பட்டிருக்காது. இயல்பாக, Apple உங்கள் ஆடியோ உரையாடல்கள் மற்றும் வார்த்தை உள்ளீடுகளின் டிரான்ஸ்கிரிப்ட்களை இரண்டு ஆண்டுகளுக்குச் சேமித்து வைக்கிறது, இந்த டிரான்ஸ்கிரிப்ட்களின் ஒரு பகுதியை Apple மறுஆய்வு செய்யக்கூடும். மொழிபெயர்ப்பு, சிஸ்டம் அளவிலான மொழிபெயர்ப்பு, Siri போன்ற பிற இயல்பான மொழிச் செயலாக்க அம்சங்களின் தொடர் மேம்பாட்டிற்காக மறுஆய்வு செய்யப்பட்ட கோரிக்கைகளின் சிறுபகுதி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் சேமித்து வைக்கப்படலாம்.

உங்கள் சாதனத்தில் மொழிகளைப் பதிவிறக்கலாம். நீங்கள் மொழிபெயர்க்கவுள்ள அசல் மற்றும் இலக்கு மொழிகள் இரண்டும் பதிவிறக்கப்பட்டிருந்தால், உங்கள் சாதனத்தில் செயலாக்கம் நடைபெறும்.

உங்களுக்குத் தீங்கு அல்லது காயம் ஏற்படக்கூடிய சூழல்களில், பேராபத்து நிகழக்கூடிய சூழ்நிலைகளில், திசைகாட்டுதலுக்காக அல்லது ஏதேனும் மருத்துவச் சிக்கலின் நோயறிதல் அல்லது சிகிச்சைக்காக மொழிபெயர்ப்பு அம்சத்தைச் சார்ந்திருக்கக்கூடாது.

நீங்கள் “Siri & டிக்டேஷனை மேம்படுத்துதல்” விருப்பத்தைத் தேர்வுசெய்து Apple உங்கள் ஆடியோ உரையாடல்களைச் சேமித்து மறுஆய்வு செய்ய அனுமதிப்பதன் மூலம் மொழிபெயர்ப்பு அம்சத்தின் குரல்வழி மொழிபெயர்ப்பை மேம்படுத்த உதவலாம். அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > பகுப்பாய்வுகள் & மேம்பாடுகள் என்பதற்குச் சென்று “Siri & டிக்டேஷனை மேம்படுத்துதல்” என்பதைத் தட்டி இதை ஆன் செய்யலாம்.

2026-02-11