படிப்படியான உதவி & தனியுரிமை

நீங்கள் படிப்படியான உதவியைப் பயன்படுத்தினால், பொதுவான சில சிக்கல்களை நீங்களாகவே பிழையறிந்து சரிசெய்வதற்கு உதவ உங்கள் சாதனத்தைப் பற்றிய தகவல்களை Apple சேகரிக்கும். படிப்படியான உதவியின் மூலம் நீங்கள் Apple உதவியைத் தொடர்புகொண்டால், Apple ஆலோசகரின் உதவியைப் பெற கூடுதல் தகவல்களை நீங்கள் பகிரலாம்.
 

படிப்படியான உதவி உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Privacy Icon

  • நீங்கள் படிப்படியான உதவியைப் பயன்படுத்தினால், பொதுவான சில சிக்கல்களை நீங்களாகவே பிழையறிந்து சரிசெய்வதற்கு உதவும் பரிந்துரைகளை வழங்குவதற்கு உங்கள் சாதனத்தின் மாடல், வரிசை எண், ஆபரேட்டிங் சிஸ்டம், நாடு மற்றும் மொழி அமைப்புகள் போன்ற தகவல்களை Apple சேகரிக்கும்.
  • படிப்படியான உதவியின் மூலம் நீங்கள் Apple உதவியைத் தொடர்புகொண்டால் Apple ஆலோசகரின் உதவியைப் பெற, படிப்படியான உதவியைப் பயன்படுத்துவது தொடர்பான கூடுதல் தகவல்களை நீங்கள் Apple உடன் பகிரத் தேர்ந்தெடுக்கக்கூடும். இந்தத் தகவல்கள் உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்டு, உதவிச் சேவையை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும்.

படிப்படியான உதவி அடிப்படையிலேயே உங்கள் தனியுரிமையை முழுவதுமாகப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் அனுபவத்தைச் சிறப்பாக்கத் தேவைப்படும் தரவை மட்டும் சேகரிக்க நாங்கள் கடினமாக முயல்கிறோம். நாங்கள் தரவைச் சேகரிக்கும்போது எதைச் சேகரிக்கிறோம், அது எங்களுக்கு ஏன் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்வது முக்கியம் என நினைக்கிறோம், இதன்மூலம் தகவலறிந்த முடிவுகளை நீங்கள் எடுக்கலாம்.

சுய உதவிச் சேவை

பொதுவான கேள்விகளுக்குப் பதில்கள் மற்றும் பிழையறிந்து திருத்துவதற்கான தேவைகளைப் பெறவும் படிப்படியான உதவி உதவுகிறது. உங்கள் சாதனத்தின் கீபேடில் Apple உதவிக்கான ஃபோன் எண்ணை டயல் செய்து படிப்படியான உதவி விருப்பத்தைத் தேர்வுசெய்வதன் மூலமும், உங்கள் சாதனத்தில் உள்ள சிக்கலைச் சரிசெய்வதற்கு உதவுமாறு Siriஇடம் கேட்பதன் மூலமும், உதவிக்குறிப்புகள் செயலி வழியாகவும் எந்த நேரத்திலும் படிப்படியான உதவியை நீங்கள் அணுகலாம். நீங்கள் படிப்படியான உதவியைப் பயன்படுத்தினால், பொதுவான சில சிக்கல்களை நீங்களாகவே பிழையறிந்து சரிசெய்வதற்கு உதவும் உள்ளடக்கத்தைப் பரிந்துரைப்பதற்கு மாடல், வரிசை எண், ஆபரேட்டிங் சிஸ்டம், நாடு மற்றும் மொழி அமைப்புகள் போன்று உங்கள் சாதனத்தைப் பற்றிய தகவல்களை Apple சேகரிக்கிறது.

Apple உதவியைத் தொடர்புகொள்ளுதல்
படிப்படியான உதவியைப் பயன்படுத்தி உங்களால் சாதனச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண முடியவில்லை எனில், கூடுதல் உதவியைப் பெற படிப்படியான உதவியின் மூலமாக Apple ஆலோசகரை நேரடியாக நீங்கள் தொடர்புகொள்ளலாம். படிப்படியான உதவியில் இருந்து Apple உதவிக்கு தகவல்களைச் சிரமமின்றி மாற்ற, படிப்படியான உதவியைப் பயன்படுத்தியது தொடர்பான தகவல்களையும், நீங்கள் தீர்க்க முயன்ற குறிப்பிட்ட சிக்கலையும் பகிரலாம். Apple உதவிச் சேவையுடன் நீங்கள் பகிரும் தகவல்கள் மோசடியைக் கண்டறியும் நோக்கங்களுக்காவும் பயன்படுத்தப்படலாம். நீங்கள் பகிரக்கூடிய தகவல்களில் இவையும் அடங்கும்:

  • Apple கணக்கு குறித்த தகவல்கள், அதாவது உங்களிடம் Apple கணக்கு அமைவு உள்ளதா என்ற விவரம், பெயர், மின்னஞ்சல் முகவரி, ஃபோன் எண், உங்கள் Apple கணக்குடன் தொடர்புடைய தனிப்பட்ட அடையாளத் தகவல் ஆகியவை
  • மெசேஜ் அமைப்புகள், iMessage ஆன் செய்யப்பட்டுள்ளதா என்ற விவரம்
  • Wi-Fi நிலை, உங்கள் Wi-Fi ஆன் செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளதா என்ற விவரம்
  • Bluetooth அமைப்புகள் மற்றும் இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள், Bluetooth ஆன் செய்யப்பட்டுள்ளதா என்ற விவரம் மற்றும் வயர்லெஸ் இயர்பட்கள் இணைக்கப்பட்டுள்ளனவா என்ற விவரம்
  • Mail கணக்கு அமைப்புகள், உங்களிடம் மின்னஞ்சல் கணக்கு அமைவு உள்ளதா என்ற விவரம்
  • தானியங்குப் புதுப்பிப்புகள் அமைப்புகள், தானியங்குப் புதுப்பிப்புகளை ஆன் செய்துள்ளீர்களா என்ற விவரம்
  • VPN அமைப்புகள், உங்கள் VPN ஆன் செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளதா என்ற விவரம்
  • மென்பொருள் பதிப்பு, உங்கள் சாதனத்திற்கு மென்பொருள் புதுப்பிப்பு கிடைக்கிறதா என்ற விவரம்
  • படிப்படியான உதவி அமர்வின் போதான உங்கள் செயல்பாடுகள், பிழையறிந்து திருத்துவதற்கான கேள்விகளுக்கு நீங்கள் வழங்கும் பதில்கள் மற்றும் படிப்படியான உதவியில் நீங்கள் டைப் செய்யும் தேடல்கள், பரிந்துரைக்கப்படும் சாதன அமைப்புகளைத் திறப்பது போன்று படிப்படியான உதவியின் பரிந்துரைகளின் அடிப்படையில் நீங்கள் செய்யும் செயல்கள், உங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டு நீங்கள் திறந்த படிப்படியான உதவிக் கட்டுரைகள் ஆகியவை இதில் அடங்கும்

Appleக்கு அனுப்பப்படும் தரவானது நம்பகமான மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநர்களால் செயலாக்கப்பட்டுச் சேமிக்கப்படலாம்.

தக்கவைத்தல்

Appleஇன் தனியுரிமைக் கொள்கை அல்லது எங்கள் சேவை தொடர்பான தனியுரிமை அறிக்கையில் விவரிக்கப்பட்டபடி சேகரிக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றத் தேவைப்படும் காலம் வரை அல்லது சட்டப்படி தேவைப்படும் காலம் வரை மட்டுமே தனிப்பட்ட தரவை நாங்கள் தக்கவைப்போம். தக்கவைத்தல் காலத்தை மதிப்பிடும்போது, சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவைத் தக்கவைப்பது தேவையா என்று முதலில் கவனமாக ஆராய்கிறோம். தக்கவைத்தல் தேவை எனில், முடிந்த வரை சட்டப்படி அனுமதிக்கப்பட்ட குறுகிய காலத்திற்கு மட்டுமே தனிப்பட்ட தரவைத் தக்கவைக்க முயல்கிறோம். படிப்படியான உதவியின் மூலம் Apple உதவியில் நீங்கள் ஓர் உதவிக் கோரிக்கையைத் திறந்ததால், உங்கள் உதவிக் கோரிக்கையுடன் தொடர்புடைய தனிப்பட்ட தரவுகள் குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகளுக்கு அல்லது உங்கள் பகுதியில் உள்ள சட்டத்தின்படி தேவைப்படும் காலம் வரை தக்கவைக்கப்படும். அத்துடன், நீங்கள் ஓர் உதவிக் கோரிக்கையைத் திறந்தால், மோசடியைக் கண்டறியும் நோக்கங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தரவுகளில் சிலவற்றையும் நாங்கள் தக்கவைக்கக்கூடும். privacy.apple.com தளத்தில் உள்ள Appleஇன் தரவுகள் மற்றும் தனியுரிமை பக்கத்தில் கணக்கை நீக்குவதற்கான கோரிக்கையையும் நீங்கள் சமர்ப்பிக்கலாம். படிபடியான உதவியுடன் தொடர்புடையதாக இருப்பதால் உங்கள் தனிப்பட்ட தரவு எப்படிப் பயன்படுத்தப்படும் என்பது குறித்து உங்களுக்குக் கேள்விகள் இருந்தால் அல்லது எங்கள் தரவுப் பாதுகாப்பு அலுவலரைத் தொடர்புகொள்ள விரும்பினால், நீங்கள் எங்களை www.apple.com/in/legal/privacy/contact என்ற பக்கத்தில் தொடர்புகொள்ளலாம்.

தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய அடிப்படைச் சட்டங்கள்

படிப்படியான உதவியை நீங்கள் பயன்படுத்தும்போது அல்லது படிப்படியான உதவி மூலம் Apple ஆலோசகர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளும்போது சாதனம் சார்ந்து பிழையறிந்து திருத்துவதற்கு உதவும் பரிந்துரைகளை வழங்கவும் எங்கள் சட்ட ரீதியான கடமைகளுக்கு இணங்கவும் தேவையான உங்கள் தனிப்பட்ட தரவுகளை Apple செயலாக்குகிறது. ஒப்புதல் என்பது சட்டரீதியான அடிப்படையாக அமையும் இடங்களில், பொருந்தும் சட்டங்களின் அடிப்படையில் அதைப் பெற முயல்கிறோம்.

பொருந்தும் சட்டங்கள் குறிப்பிடும் இடங்களில், பாதுகாப்புக் காரணங்களுக்காக மோசடி மற்றும் பிற சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளைத் தடுக்கும் வகையில் எங்களின் அல்லது மூன்றாம் தரப்புகளின் நியாயமான நலன்களின் நோக்கத்திற்காகத் தேவைப்படும் அளவிற்குத் தனிப்பட்ட தரவைச் செயலாக்குகிறோம்.

Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.

2025-12-12