டிவி புரொவைடர் & தனியுரிமை
டிவி புரொவைடர் உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிவி புரொவைடரும் மூன்றாம் தரப்புச் செயலிகளும் உங்கள் டிவி சந்தாக் கணக்கைப் பற்றிய தகவல்களை அணுகவும் பரிமாறவும் டிவி புரொவைடர் அம்சம் உதவுகிறது. இதன் மூலம் நீங்கள் உங்கள் டிவி புரொவைடர் கணக்கில் ஒருமுறை உள்நுழைந்ததும் மூன்றாம் தரப்புச் செயலிகளுக்குள் உங்கள் டிவி புரொவைடர் சந்தாவின் ஒரு பகுதியாக உள்ள நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் பிற உள்ளடக்கத்திற்கான அணுகலைத் தானாகப் பெறலாம், ஒவ்வொரு முறையும் உள்நுழைய வேண்டிய அவசியமில்லை.
நீங்கள் உங்கள் டிவி புரொவைடர் கணக்கில் உள்நுழையும்போது உங்கள் டிவி புரொவைடர் கணக்கை ஆதரிக்கும் மூன்றாம் தரப்புச் செயலிகள் உங்கள் கணக்கைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும். உங்கள் டிவி புரொவைடர் கணக்கில் உள்நுழைந்த பிறகு உங்கள் டிவி புரொவைடர் கணக்கை அணுகுவதற்கான அனுமதியைப் பிற செயலிகள் உங்களிடம் கேட்கக்கூடும்.
உங்கள் டிவி புரொவைடர் கணக்கில் உள்நுழையும்போது, உங்கள் சாதனம் உங்கள் டிவி சந்தாக் கணக்கைப் பற்றிய குறிப்பிட்ட தகவல்களைச் சாதனத்தில் சேமிக்கும், இதில் டிவி புரொவைடர் பெயர், உங்கள் பயனர் டிஸ்ப்ளே பெயர் போன்றவை அடங்கும். அம்சங்களைச் செயல்படுத்தவும் உங்கள் டிவி புரொவைடர் மற்றும் மூன்றாம் தரப்புச் செயலிகள் இடையே சந்தாத் தகவலைப் பரிமாறவும் இந்தத் தகவல் பயன்படுத்தப்படும். நீங்கள் அவர்களின் சந்தா அல்லது வழங்கப்படும் உள்ளடக்கத்தை அணுகுவதைச் சரிபார்ப்பதற்காக உங்கள் டிவி புரொவைடர் உங்கள் சந்தாக் கணக்குத் தகவலை நீங்கள் செயல்படுத்தியுள்ள எந்தச் செயலியுடனும் பகிரலாம். இந்தத் தகவல்களில் உங்கள் சந்தாவின் பயனர் ஐடி, வீட்டு ஐடி, கணக்கு அஞ்சல் குறியீட்டுடன் சந்தாத் திட்ட விவரங்களும் அடங்கும்.
நீங்கள் உங்கள் டிவி புரொவைடர் கணக்கில் உள்நுழைந்த பின்பு Apple TV செயலியில் இணைக்கத் தகுதியுள்ள உங்கள் சந்தா மூலமாகக் கிடைக்கும் உள்ளடக்கத்தைக் கொண்ட மூன்றாம் தரப்புச் செயலிகளைக் கண்டறிய உங்கள் சந்தாத் தகவலை நாங்கள் பயன்படுத்துவோம்.
டிவி புரொவைடர் அம்சத்தை எப்போது வேண்டுமானாலும் முடக்கத் தேர்வுசெய்யலாம். உங்கள் iOS சாதனத்தில், அமைப்புகள் > டிவி புரொவைடர் > “டிவி புரொவைடரை அகற்று” என்பதற்குச் சென்று இதைச் செய்யலாம். உங்கள் visionOS சாதனத்தில், அமைப்புகள் > “டிவி புரொவைடர்” என்பதற்குச் சென்று டிவி புரொவைடரை அகற்றலாம். tvOSஇல், அமைப்புகள் > பயனர்கள் மற்றும் கணக்குகள் > டிவி புரொவைடர் > “டிவி புரொவைடரை அகற்று” என்பதற்குச் சென்று இதைச் செய்யலாம். இது உங்கள் டிவி புரொவைடர் கணக்கில் இருந்து உங்களை வெளியேற்றும். நீங்கள் ஒவ்வொரு செயலியாக முடக்குவதையும் தேர்வுசெய்யலாம்.
டிவி புரொவைடர் அம்சத்தைச் செயல்படுத்துவதன் மூலம் உங்கள் டிவி சந்தாக் கணக்குத் தகவலைப் பரிமாறவும் பயன்படுத்தவும் உங்கள் டிவி புரொவைடரையும் உங்களால் செயல்படுத்தப்பட்ட மூன்றாம் தரப்புச் செயலிகளையும் அனுமதிக்கிறீர்கள். அவர்கள் இந்தத் தகவலைப் பகிர்வதும் பயன்படுத்துவதும் அவர்களின் விதிமுறைகள், தனியுரிமைக் கொள்கைகள், நடைமுறைகள் ஆகியவற்றுக்கு உட்பட்டதாகும். உங்கள் டிவி சந்தாக் கணக்கு மற்றும் தொடர்புடைய தகவல்களை அவர்களுடன் பகிர்வதற்கு முன்பாக அவர்கள் அந்தத் தகவலை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் டிவி புரொவைடர் மற்றும் மூன்றாம் தரப்புச் செயலிகளின் விதிமுறைகள், தனியுரிமைக் கொள்கைகள், நடைமுறைகள் ஆகியவற்றை நீங்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும், இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2025-12-12