Apple Vision Pro செயலி & தனியுரிமை
Apple Vision Pro செயலி உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
![]()
- App Store போன்ற செயலிகளில் உள்ள உள்ளடக்கங்களின் முன்னோட்டங்கள் மற்றும் உங்கள் Apple Vision Pro பற்றிய தகவல்களை உங்களுக்குக் காட்டவும், அறிவிப்புகளை அனுப்பவும் Apple Vision Pro செயலி உங்கள் Apple கணக்குடன் தொடர்புடைய அடையாளத் தகவல்களைப் பயன்படுத்துகிறது.
- Apple Vision Pro செயலியைப் பயன்படுத்தும்போது, ஸ்பேஷியல் கேலரி, Apple TV, App Store போன்ற பிற செயலிகளில் உள்ள உள்ளடக்கங்களையும் நீங்கள் பயன்படுத்தலாம். அவர்களின் சேவை சார்ந்த தனியுரிமை அறிக்கைகளின் அடிப்படையில் உங்களின் தரவுகள் சேகரிக்கப்படும்.
- உங்கள் பரிந்துரைச் சீட்டில் உள்ள தகவல்கள் முழுமையான என்கிரிப்ஷனைப் பயன்படுத்தி ஒத்திசைக்கப்படுகிறது.
Apple Vision Pro செயலி உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் தரவைச் சேகரிக்கும்போது எதைச் சேகரிக்கிறோம், அது எங்களுக்கு ஏன் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்வது முக்கியம் என நினைக்கிறோம்.
Apple Vision Pro செயலியைப் பயன்படுத்துதல்
புதிய உள்ளடக்கங்களையும், உங்கள் Apple Vision Pro சாதனத்தைப் பற்றிய தகவல்களையும் ஒரே இடத்தில் அணுக Apple Vision Pro செயலி உங்களுக்கு உதவுகிறது. நீங்கள் Apple Vision Pro செயலியைப் பயன்படுத்தும்போது, ஸ்பேஷியல் கேலரி, App Store, Apple TV போன்ற Apple செயலிகளில் உள்ள உள்ளடக்கங்களின் முன்னோட்டங்கள் போன்று செயலிகளில் உள்ள உள்ளடக்கத்தைக் காட்ட உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்ட அடையாளத் தகவலை Apple பயன்படுத்துகிறது. அத்துடன், Apple Vision Pro செயலியில் காட்டப்படும் பிற Apple செயலிகளில் உள்ள உள்ளடக்கத்தை நீங்கள் பயன்படுத்தினால், அந்தச் செயலிகளில் இருந்தும் உங்களால் உள்ளடக்கத்தைப் பார்க்க முடியும். மேலும் அந்தச் செயலிகளுக்கான தனியுரிமை அறிக்கைகளுக்கு ஏற்ப உங்கள் தரவுகள் சேகரிக்கப்படும்.
சாதனத்தின் வரிசை எண், சாதனம் சமீபத்திய பதிப்பில் இயங்குகின்றதா என்ற விவரம் போன்று உங்கள் Apple Vision Proஐப் பற்றிய தகவல்களை உங்களுக்குக் காட்ட உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்ட அடையாளத் தகவலையும் Apple Vision Pro செயலி பயன்படுத்துகிறது.
செயலியில், உங்கள் ZEISS ஆப்டிகல் இன்செர்ட்களுக்கான உங்கள் பரிந்துரைகள் பற்றிய தகவல்களை Apple Vision Pro செயலி உங்களுக்குக் காட்டுகிறது. உங்கள் பரிந்துரைகளில் உள்ள தகவல்கள் முழுமையான என்கிரிப்ஷனைப் பயன்படுத்தி ஒத்திசைக்கப்படுகிறது. ஆகையால் Apple இவற்றை அணுக முடியாது.
Appleக்கு அனுப்பப்படும் தகவல்களை நம்பகமான மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநர்கள் மூலம் Apple செயலாக்கக்கூடும்.
உங்களுடனான தகவல்தொடர்புகள்
உங்களுக்கு அறிவிப்புகளை அனுப்புவதற்காக சாதனத்தின் அடையாளத் தகவலை நாங்கள் பயன்படுத்துகிறோம். உங்கள் iOS சாதனத்தில் அறிவிப்பு முன்னுரிமைகளை மாற்ற, அமைப்புகள் > அறிவிப்புகள் > Apple Vision Pro செயலிக்குச் செல்லவும்.
தக்கவைத்தல்
Appleஇன் தனியுரிமைக் கொள்கை அல்லது எங்கள் சேவை தொடர்பான தனியுரிமை அறிக்கையில் விவரிக்கப்பட்டபடி சேகரிக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றத் தேவைப்படும் காலம் வரை அல்லது சட்டப்படி தேவைப்படும் காலம் வரை மட்டுமே Apple தனிப்பட்ட தரவைத் தக்கவைக்கும். தக்கவைத்தல் காலத்தை மதிப்பிடும்போது, சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவைத் தக்கவைப்பது தேவையா என்று முதலில் கவனமாக ஆராய்கிறோம். தக்கவைத்தல் தேவை எனில், முடிந்த வரை சட்டப்படி அனுமதிக்கப்பட்ட குறுகிய காலத்திற்கு மட்டுமே தனிப்பட்ட தரவைத் தக்கவைக்க முயல்கிறோம். Apple Vision Pro செயலியின் பயன்பாடு குறித்து உங்களுக்குக் கேள்விகள் இருந்தால் அல்லது எங்கள் தரவுப் பாதுகாப்பு அலுவலரைத் தொடர்புகொள்ள விரும்பினால், நீங்கள் www.apple.com/in/legal/privacy/contact என்ற பக்கத்தில் எங்களைத் தொடர்புகொள்ளலாம்.
தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தக்கூடிய அடிப்படைச் சட்டங்கள்
பொதுவாக Apple உடனான உங்கள் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காகவும், சேவைகளை வழங்கத் தேவைப்படும் அளவிற்கும், எங்கள் சட்டரீதியான கடமைகளுக்கு இணங்குவதற்காகவும் Apple Vision Pro செயலியில் உள்ள உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குகிறோம். ஒப்புதல் என்பது சட்டரீதியான அடிப்படையாக அமையும் இடங்களில், பொருந்தும் உள்ளூர் சட்டங்களின் அடிப்படையில் அதைப் பெற முயல்கிறோம்.
Apple Vision Pro செயலி, பிற Apple தயாரிப்புகள், சேவைகள் மற்றும் நீங்கள் விரும்பக்கூடிய சலுகைகள் பற்றிய தகவல்களை உங்களுக்கு அனுப்ப, பொருந்தும் உள்ளூர்ச் சட்டங்கள் குறிப்பிடும் இடங்களில், மூன்றாம் தரப்பின் நியாயமான நலன்களின் நோக்கத்திற்காகத் தேவைப்படும் அளவிற்குத் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குகிறோம்.
Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.
2025-12-12