VPNகள் & தனியுரிமை
குறிப்பிட்ட நெட்வொர்க் டிராஃபிக்கின் வழித்தடத்தைக் கட்டுப்படுத்த VPNகள் அமைக்கப்படலாம்.
விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் (VPN) என்பது நீங்கள் பார்வையிடும், பயன்படுத்தும் இணையதளங்கள் மற்றும் சேவைகளிடமிருந்து உங்கள் IP முகவரியை மறைக்கும் வகையில் உங்கள் சாதனத்தின் குறிப்பிட்ட நெட்வொர்க் டிராஃபிக்கை என்கிரிப்ட் செய்து வழிசெலுத்தும் ஒரு சேவையாகும். VPN செயலில் இருந்தாலும் உங்கள் சாதனம் சரியான முறையில் இயங்குவதற்காக அத்தியாவசிய சிஸ்டம் சேவைகளுக்குத் தேவையான டிராஃபிக் VPNக்கு வெளியே நடைபெறும்.
நீங்கள் App Storeஇல் இருந்து உங்களுக்கு விருப்பமான VPN உள்ளமைவைப் பதிவிறக்கி உங்கள் சாதனத்தில் நிறுவலாம். உங்கள் பணியமர்த்துநர் அல்லது பள்ளி போன்ற நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் Apple Watch அல்லது Apple TV போன்ற சாதனங்களில் VPN உள்ளமைவுகளை அந்த நிறுவனங்கள் அமைக்கலாம். நீங்கள் iOS, iPadOS அல்லது visionOS சாதனங்களில் அமைப்புகள் > பொது அமைப்புகள் > VPN & சாதன மேலாண்மை > VPN என்பதற்குச் சென்று “VPN உள்ளமைவைச் சேர்” என்பதைத் தட்டி தொடர்புடைய தகவல்களை உள்ளிட்டு நேரடியாகவும் VPNஐச் சேர்க்கலாம். Macஇல், சிஸ்டம் அமைப்புகள் > நெட்வொர்க் என்பதற்குச் சென்று, “மேலும்” பட்டனை கிளிக் செய்து, “VPN உள்ளமைவைச் சேர்” என்பதைத் தேர்ந்தெடுத்து தொடர்புடைய தகவல்களை உள்ளிட வேண்டும்.
நம்பகமான VPN சேவையை மட்டுமே நீங்கள் பயன்படுத்த வேண்டும். VPN உள்ளமைவு நிறுவப்பட்டு செயலில் இருந்தால், உங்கள் ஆன்லைன் செயல்பாட்டை உங்கள் VPN வழங்குநரால் பார்க்கவும், அதில் குறுக்கிடவும், அதை மாற்றியமைக்கவும் முடியும். உங்கள் VPN வழங்குநரின் சேவை, உங்கள் தரவை அவர்கள் கையாளும் விதம் ஆகியவற்றைப் பற்றி மேலும் அறிய உங்கள் VPN வழங்குநரின் தனியுரிமை நடைமுறைகளைப் பார்க்கவும். நீங்கள் மூன்றாம் தரப்புச் செயலியைப் பயன்படுத்தும்போது அல்லது Appleஆல் இயக்கப்படாத இணையதளங்களை உலாவும்போது, உங்களை அடையாளப்படுத்தும் வகையில் உங்கள் சாதனத்தில் நீங்கள் VPN சேவையைப் பயன்படுத்துவது பற்றிய தகவல்களை Apple சேகரிக்காது.
உங்கள் VPN உள்ளமைவு இயங்கும் விதத்தை VPN வழங்குநர்கள் கட்டுப்படுத்துகின்றனர், இதில் உங்கள் சாதனத்தில் இருந்து வெளியேறும் டிராஃபிக் வழிசெலுத்தப்படும் விதம், அது என்கிரிப்ட் செய்யப்படுகிறதா என்ற தகவல், நீங்கள் பார்வையிடும் இணையதளங்களுக்கு என்னென்ன தரவுகள் கிடைக்கும் என்பன போன்றவை அடங்கும்.
iCloud பிரைவேட் ரிலே செயல்படுத்தப்பட்டுள்ள சாதனத்தில் VPN உள்ளமைவு நிறுவப்பட்டு செயலில் இருந்தால், இணைய இணைப்புகளின் வழித்தடத்தை VPN உள்ளமைவு தீர்மானிக்கும், இல்லையெனில் இணைப்பு பிரைவேட் ரிலேவால் பாதுகாக்கப்படும்.
செயலில் உள்ள VPN வழியாக உங்கள் சாதனத்தின் சில நெட்வொர்க் டிராஃபிக்குகள் வழிசெலுத்தப்படாது. செயலி டெவலப்பர் தங்கள் செயலிக்கு ஓர் இணைப்பு வகை தேவை எனக் குறிப்பிட்டால், எடுத்துக்காட்டாக மொபைல் டேட்டா மட்டும், அந்தச் செயலியின் நெட்வொர்க் டிராஃபிக்கிற்கு VPN உள்ளமைவுகளில் இருந்து விலக்களிக்கப்படும். iOS, iPadOS மற்றும் visionOS சாதனங்களில் உங்கள் VPN வழங்குநர் இந்த விருப்பத்தை ஓவர்ரைடு செய்து, செயலில் உள்ள VPN உள்ளமைவிற்கு வெளியே நெட்வொர்க் டிராஃபிக்கை வழிசெலுத்துவதில் இருந்து பெரும்பான்மையான செயலிகள், சேவைகள் மற்றும் சிஸ்டம் செயல்பாடுகளைத் தடுக்கலாம்.
அத்தியாவசியமான சிஸ்டம் சேவைகளுக்குத் தேவையான டிராஃபிக் செயலில் உள்ள VPN உள்ளமைவு வழியே வழிசெலுத்தப்படாது. இதில் உங்கள் லோக்கல் நெட்வொர்க் ரௌட்டர்கள் உடனான நேரடி இணைப்புகள் (நெட்வொர்க் இணைப்பை நிறுவி பராமரிக்கத் தேவையானது), மொபைல் நெட்வொர்க்குகள் வழியாக மட்டும் இயங்கும் குறிப்பிட்ட மொபைல் சேவைகள் (விஷுவல் வாய்ஸ்மெயில் உள்ளிட்டவை - கிடைக்கும்பட்சத்தில்) போன்றவை அடங்கும்.
2025-12-12