வானிலை & தனியுரிமை

தொடர்புடைய வானிலை முன்னறிவிப்புகளை வழங்க உங்கள் அடையாளத்துடன் இணைக்கப்படாத இருப்பிடம் Appleக்கு அனுப்பப்படும். தீவிர வானிலை குறித்த அறிவிப்புகளைச் செயல்படுத்தினால் இந்த அறிவிப்புகளுடன் தொடர்புடைய நாடு அல்லது வட்டாரத்தை உங்கள் Apple கணக்குடன் Apple இணைக்கலாம்.
 

“வானிலை” செயலி உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Privacy Icon

  • “வானிலை” செயலி உங்கள் இருப்பிடத்தை அணுக அனுமதித்தால், தொடர்புடைய வானிலை முன்னறிவிப்புகளை வழங்க உங்கள் இருப்பிடம் Appleக்கு அனுப்பப்படும். உங்கள் இருப்பிடம் உங்கள் அடையாளத்துடன் இணைக்கப்படாது.
  • நீங்கள் பின்தொடரும் ஓர் இருப்பிடத்திற்கான முன்னறிவிப்பைக் கோரினால், அந்த இருப்பிடத்திற்கான முன்னறிவிப்பை வழங்க அந்தத் தகவல் Appleக்கு அனுப்பப்படும். இது உங்கள் அடையாளத்துடன் இணைக்கப்படாது.
  • தீவிர வானிலை குறித்த அறிவிப்புகளைச் செயல்படுத்தினால் அந்த அறிவிப்புகளுடன் தொடர்புடைய வட்டாரத்தை உங்கள் Apple கணக்குடன் Apple இணைக்கலாம்.

உங்கள் தகவலின் தனியுரிமையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது Appleஇல் உள்ள அனைவரின் முன்னுரிமையாகும். உங்கள் அனுபவத்தைச் சிறப்பாக்கத் தேவைப்படும் தரவை மட்டும் சேகரிக்க நாங்கள் கடினமாக முயல்கிறோம். நாங்கள் தரவைச் சேகரிக்கும்போது எதைச் சேகரிக்கிறோம், அது எங்களுக்கு ஏன் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்வது முக்கியம் என நினைக்கிறோம், இதன்மூலம் தகவலறிந்த முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். அனைத்து Apple தயாரிப்புகளையும் சேவைகளையும் போல இந்தக் கொள்கைகளைக் கருத்தில் கொண்டு “வானிலை” செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

“வானிலை” செயலியைப் புரிந்துகொண்டு மேம்படுத்த, ஒரு நாளில் முதல்முறையாகச் செயலியைத் தொடங்கும்போது வரம்பிடப்பட்ட தகவல்களை Apple சேகரிக்கிறது. இந்தத் தகவல்கள் உங்கள் அடையாளத்துடன் இணைக்கப்படாது.

“வானிலை” செயலி உங்கள் இருப்பிடத்தை அணுக அனுமதித்தால், தொடர்புடைய வானிலை முன்னறிவிப்புகளை வழங்க உங்கள் இருப்பிடம் Appleக்கு அனுப்பப்படும். நீங்கள் பின்தொடரும் ஓர் இருப்பிடத்திற்கான முன்னறிவிப்பைக் கோரினால், அந்த இருப்பிடத்திற்கான முன்னறிவிப்பை வழங்க அந்தத் தகவல் Appleக்கு அனுப்பப்படும். கூடுதலாக, செயலியில் இருப்பிடங்களை லேபிள் செய்வதற்காக உங்கள் வீடு மற்றும் பணியிட இருப்பிடங்களை “வானிலை” செயலி அணுகும். உங்கள் வீடு மற்றும் பணியிட முகவரிகளைப் புதுப்பிக்க தொடர்புகள் செயலியில் உள்ள எனது கார்டைப் பயன்படுத்தலாம். நீங்கள் இந்த லேபிள்களை எப்போது வேண்டுமானாலும் ஆஃப் செய்யலாம். உங்கள் iOS அல்லது iPadOS சாதனத்தில், அமைப்புகள் > செயலிகள் > வானிலை என்பதற்குச் சென்று “வீடு மற்றும் பணியிடம்” என்பதை ஆஃப் செய்ய அதைத் தட்டுங்கள். Macஇல் வானிலை > அமைப்புகள் > பொது என்பதற்குச் சென்று, “வீடு மற்றும் பணியிடம்” என்பதைத் தேர்வுநீக்குங்கள். முன்னறிவிப்புகளை வழங்குவதற்காக Apple சேகரிக்கும் தகவல்கள் உங்கள் அடையாளத்துடன் இணைக்கப்படாது.

நீங்கள் தீவிர வானிலை குறித்த அறிவிப்புகளைச் செயல்படுத்தினால் (கிடைக்கும் இடங்களில்), நீங்கள் அந்த அறிவிப்புகளைச் செயல்படுத்தியுள்ள ஒவ்வொரு இருப்பிடத்தையும் வட்டாரத் தகவலுடன் “வானிலை” செயலி தொடர்புபடுத்தும். வட்டாரம் என்பது ஒரு நாடாக இருக்கலாம் அல்லது சில நாடுகளைப் பொறுத்தவரை (யூ.எஸ். மற்றும் கனடா போன்றவை) 5,00,000 பேர் வசிக்கும் பகுதியாக இருக்கலாம். நீங்கள் அறிவிப்புகளைச் செயல்படுத்தியுள்ள வட்டாரங்களின் பட்டியல் Appleக்கு அனுப்பப்படும், இது உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்படலாம். இந்த அம்சத்தைச் செயல்படுத்துவதற்காகவும் உங்கள் சாதனத்திற்கு அறிவிப்புகளை வழங்குவதற்காகவும் வட்டாரங்களின் பட்டியலை Apple பயன்படுத்துகிறது. தொடர்புடைய அறிவிப்புகளை உங்களுக்கு வழங்குவதற்காக நீங்கள் தீவிர வானிலை அறிவிப்புகளைச் செயல்படுத்தியுள்ள இருப்பிடங்களின் அடிப்படையில் “வானிலை” செயலி உங்கள் சாதனத்தின் வட்டார அறிவிப்புகளை ஃபில்டர் செய்கிறது.

கிடைக்கும்போது, நீங்கள் பயணம் செய்யக்கூடிய இடங்களில் நிலவக்கூடிய தீவிர வானிலை குறித்த அறிவிப்புகளைச் செயல்படுத்துவதையும் நீங்கள் தேர்வுசெய்யலாம். முக்கியமான இடங்கள் & வழிகள் செயல்படுத்தப்பட்டு இருந்தால், சில நாட்களில் நீங்கள் எங்கு பயணம் செய்யக்கூடும் என்பதைக் கணிக்க, சாதனத்திலேயே செய்யப்படும் செயலாக்கத்தை உங்கள் சாதனம் பயன்படுத்தக்கூடும். வானிலை செயலிக்கான இருப்பிட அனுமதி “எப்போதும்” என அமைக்கப்பட்டு, வானிலை செயலி அமைப்புகளில் பரிந்துரைக்கப்பட்ட இருப்பிடங்களுக்கான தீவிர வானிலை அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டு இருந்தால், தொடர்புடைய தீவிர வானிலை அறிவிப்புகளை உங்களுக்கு வழங்க நீங்கள் பயணம் செல்லவிருப்பதாகக் கணிக்கப்பட்ட அந்த இருப்பிடங்களை வானிலை செயலி அணுகக்கூடும் மற்றும் பயன்படுத்தக்கூடும். உங்கள் தற்போதைய இருப்பிடங்களுக்கான தீவிர வானிலை அறிவிப்புகளுடன், நீங்கள் பயணம் செய்யக்கூடிய இருப்பிடங்களின் தொடர்புடைய வட்டாரத்தை உங்கள் Apple கணக்குடன் Apple இணைக்கலாம்.

உங்களின் தற்போதைய மற்றும் கணிக்கப்பட்ட இருப்பிடங்களுக்கான தீவிர வானிலை அறிவிப்புகள் உட்பட வானிலை செயலிக்கான அறிவிப்புகளை உங்கள் iOS மற்றும் iPadOS சாதனங்களில் மேலும் > அறிவிப்புகள் என்பதைத் தட்டி நீங்கள் நிர்வகிக்கலாம். Macஇல், வானிலை > அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.

அத்துடன் நீங்கள் விட்ஜெட் ஸ்மார்ட் ஸ்டேக்குகளைப் பயன்படுத்தும்போது விட்ஜெட் பரிந்துரைகளைச் செயல்படுத்தியிருந்தால், உங்கள் முகப்புத் திரையிலும் “இன்று” காட்சியிலும் நீங்கள் பயணம் செய்யக்கூடிய இருப்பிடங்களுக்கான வானிலை விட்ஜெட்டையும் வானிலை செயலி காட்டக்கூடும். வானிலை செயலிக்கான இருப்பிட அனுமதி “எப்போதும்” என அமைக்கப்பட்டிருந்து, “இருப்பிடச் சேவைகள்” அமைப்புகளில் முக்கியமான இடங்கள் & வழிகள் செயல்படுத்தப்பட்டிருந்தால் இப்படி நிகழலாம். விட்ஜெட்டைக் காட்ட வேண்டுமா இல்லையா என்பதை உங்கள் சாதனம் தீர்மானிக்கிறது.

Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Apple இன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும், அதை www.apple.com/in/privacy தளத்தில் பார்க்கலாம்.

2025-12-12