Wi-Fi மூலம் அழைப்பு & தனியுரிமை

Wi-Fi அழைப்பு உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


குறிப்பிட்ட நெட்வொர்க் வழங்குநர்கள் உங்கள் iOS அல்லது watchOS சாதனங்கள் மற்றும் உங்கள் Mac கம்ப்யூட்டர்களில் Wi-Fi மூலம் (மற்றும்/அல்லது Wi-Fi சிக்னல் பலவீனமாக உள்ளபோது அல்லது கிடைக்கவில்லை எனில் iPadஇன் Wi-Fi + Cellular மாடல்களில் மொபைல் டேட்டா மூலம்) அழைப்புகளைச் செய்யவும் பெறவும் உங்களுக்கு உதவுகின்றனர்.

நீங்கள் “Wi-Fi மூலம் அழைப்பு” அம்சத்தைச் செயல்படுத்தி, “Wi-Fi மூலம் அழைப்பு” வசதியுள்ள சாதனத்தை Wi-Fi நெட்வொர்க்கில் இணைத்தால், பில்லிங் மற்றும் சேவையின் கிடைக்கும்தன்மை நோக்கங்களுக்காக உங்கள் IP முகவரியின் (அல்லது பொருந்தினால் மொபைல் சேவை நெட்வொர்க்) அடிப்படையில் நீங்கள் எந்த நாட்டிலிருந்து நெட்வொர்க்குடன் இணைக்கிறீர்கள் என்ற தகவல் உங்கள் நெட்வொர்க் வழங்குநருக்கு அனுப்பப்படக்கூடும். உங்கள் நெட்வொர்க் வழங்குநருடன் இந்தத் தகவலைப் பகிர வேண்டாம் என நினைத்தால், அமைப்புகள் > செயலிகள் > ஃபோன் என்பதற்குச் சென்று “iPhoneஇல் Wi-Fi மூலம் அழைப்பு” என்பதைத் தட்டி ஆஃப் செய்து iPhone சாதனத்திலும் “பிற சாதனங்களில் Wi-Fi மூலம் அழைக்கும் வசதியைச் சேர்” என்பதைத் தட்டி ஆஃப் செய்து பிற சாதனங்களுக்கும் (உங்கள் இணைக்கப்பட்ட Apple Watch உட்பட) “Wi-Fi மூலம் அழைப்பு” அம்சத்தை ஆஃப் செய்யலாம். “Wi-Fi மூலம் அழைப்பு” செயல்படுத்தப்பட்டுள்ள உங்கள் மற்ற சாதனங்களில் ” Wi-Fi மூலம் அழைப்பு” அம்சத்தை ஆஃப் செய்ய வேண்டுமெனில், iPhoneஇல் அமைப்புகள் > செயலிகள் > ஃபோன் > “பிற சாதனங்களில் அழைப்பு” என்பதற்குச் சென்று “பிற சாதன அழைப்புகளை அனுமதி” என்பதைத் தட்டி ஆஃப் செய்த பிறகு, சாதனங்களின் பட்டியலில் சாதனங்களைத் தனித்தனியாகத் தட்டி ஆஃப் செய்யவும்.

Wi-Fi அல்லது மொபைல் டேட்டா மூலம் செய்யப்படும் குறுகிய குறியீட்டு அழைப்புகளை (பொதுச் சேவைகளுக்கு அணுகல் வழங்கும் சுருக்கப்பட்ட எண்களுக்குச் செய்யும் அழைப்புகள்) இணைப்பதற்காக எந்த நகரத்தில் இருந்து அந்த அழைப்பு செய்யப்படுகிறது என்ற தகவலை உங்கள் நெட்வொர்க் வழங்குநருக்கு Apple வழங்க வேண்டும், அந்த அழைப்பை முறையாக வழிச்செலுத்த உங்கள் நெட்வொர்க் வழங்குநருக்கு இது உதவும். குறுகிய குறியீட்டு அழைப்புகளைச் செய்யும்போது எந்த நகரத்தில் இருந்து அழைக்கிறீர்கள் என்ற தகவலை உங்கள் நெட்வொர்க் வழங்குநருடன் பகிர வேண்டாம் என நினைத்தால், அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் > “சிஸ்டம் சேவைகள்” என்பதற்குச் சென்று, “Wi-Fi மூலம் அழைப்பு” என்பதைத் தட்டி அதை ஆஃப் செய்து, உங்கள் iOS அல்லது watchOS சாதனத்தில் “Wi-Fi மூலம் அழைப்பு” அம்சத்திற்கான இருப்பிடச் சேவைகளை நீங்கள் ஆஃப் செய்யலாம். Macஇல், சிஸ்டம் அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > “இருப்பிடச் சேவைகள்” என்பதற்குச் சென்று சிஸ்டம் சேவைகள் என்பதற்கு அடுத்துள்ள “விவரங்கள்” என்பதை கிளிக் செய்து “Wi‑Fi மூலம் அழைப்பு” என்பதை கிளிக் செய்து, “Wi‑Fi மூலம் அழைப்பு” அம்சத்திற்கான இருப்பிடச் சேவைகளை ஆஃப் செய்யலாம். “Wi-Fi மூலம் அழைப்பு” அம்சத்திற்கு இருப்பிடச் சேவைகளை நீங்கள் ஆஃப் செய்தால், உங்கள் சாதனத்தால் நீங்கள் இருக்கும் நகரத்தைத் தீர்மானிக்கவோ Wi-Fi மூலம் அழைப்பதற்காக ஒரு சிறு குறியீட்டு எண்ணை நீங்கள் டயல் செய்யும்போது அதை உங்கள் நெட்வொர்க் வழங்குநருக்கு அனுப்பவோ முடியாது, இதன் விளைவாக உங்கள் அழைப்பு முறையாகச் செயலாக்கப்படாமல் அல்லது இணைக்கப்படாமல் போகலாம்.

சேவை கிடைக்கும்பட்சத்தில், உங்கள் iPhoneஇல் செய்யப்படும் அவசரகால அழைப்புகள் மொபைல் சேவை மூலமாக வழிச்செலுத்தப்படும். மொபைல் சேவை கிடைக்கவில்லை மற்றும் “Wi-Fi மூலம் அழைப்பு” அம்சத்தைச் செயல்படுத்தியுள்ளீர்கள் என்றால், Wi-Fi மூலம் அவசரகால அழைப்புகளைச் செய்யலாம். நீங்கள் இருப்பிடச் சேவைகளைச் செயல்படுத்தினாலும் செயல்படுத்தாவிட்டாலும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் அவசரகால அழைப்புகளைச் செய்ய உங்கள் சாதனத்தின் இருப்பிடத் தகவல்கள் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், அவசரகாலச் சேவை அழைப்புகளை வழிச்செலுத்தும் நோக்கத்திற்காக உங்கள் பில்லிங் முகவரி அல்லது நெட்வொர்க் வழங்குநருக்கு நீங்கள் வழங்கிய பிற முகவரிகளை உங்கள் நெட்வொர்க் வழங்குநர் பயன்படுத்தக்கூடும். உங்கள் iOS சாதனங்களில் உள்ள அமைப்புகளில் மற்றும் உங்கள் Macஇல் உள்ள FaceTime அமைப்புகளில் உங்கள் நெட்வொர்க் வழங்குநருக்கான உங்கள் முகவரித் தகவல்களை நீங்கள் மாற்றலாம். நீங்கள் இந்தத் தகவல்களைச் சமீபத்திய நிலையில் வைத்திருக்க வேண்டும். தவறினால், உங்கள் இருப்பிடத்தை அடைய அவசரகாலச் சேவைகளுக்குச் சரியான முறையில் வழிகாட்ட முடியாமல் போகலாம். இருப்பிடத்தின் நம்பகத்தன்மையை உறுதிசெய்வதற்காக, சாதாரண மொபைல் சேவை அல்லது லேண்ட்லைன் சேவை மூலமாக அவசரகால அழைப்புகளைச் செய்வது சிறந்தது, “Wi-Fi மூலம் அழைப்பு” அம்சத்தை இறுதி வாய்ப்பாக மட்டுமே பயன்படுத்துங்கள்.

“Wi-Fi மூலம் அழைப்பு” பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, உங்கள் நெட்வொர்க் வழங்குநரின் விதிமுறைகள், தனியுரிமைக் கொள்கை, நடைமுறைகள் ஆகியவற்றைப் பாருங்கள். Apple சேகரிக்கும் தகவல்கள் எல்லா நேரங்களிலும் Appleஇன் தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும். இதை www.apple.com/in/privacy தளத்தில் பார்வையிடலாம்.

2025-12-12